Headline

ராகுல் காந்தி ஒரு "கழுகுக் குஞ்சு":தெலுங்கு தேசம் தாக்கு



காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தியை கழுகுக் குஞ்சு என தெலுங்கு தேசம் தாக்குதல் தொடுத்துள்ளது.முன்னதாக,தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் மறைந்த என்.டி.ஆரின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர்.பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்.இவரது கூட்டங்களுக்கு ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர்.காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவதே எங்களது பணி என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி,ஜூனியர் என்.டி.ஆர் ஒரு காக்கைக் குஞ்சு என குறிப்பிட்டது.

இந்நிலையில்,தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் ராஜகுமாரியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியது:

காங்கிரஸின் பிரசாரக் கூட்டங்களுக்கு போதிய கூட்டம் வராததால் அவர்கள் ஜூனியர் என்.டி.ஆரை பார்த்து காக்கைக் குஞ்சு என பழிக்கிறார்கள்.அவர் காக்கைக் குஞ்சு அல்ல.காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தியும்,ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் ரெட்டியும் தான் கழுகுக் குஞ்சுகள்.

காங்கிரஸுக்கு ஆதரவாக கட்சி நிறுவனர் என்.டி.ஆரின் மனைவி லஷ்மி சிவபார்வதி,பிரசாரம் செய்து வருகிறார்.காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என முழங்கிய என்.டி.ஆரின் ஆத்மா,சிவபார்வதியை மன்னிக்காது என்றார்.

நன்றி செய்தி.கொம்

3 comments:

ttpian said...

யார் சொன்னது தமிழ் நாட்டில் நடிகர்களுக்கும் கோமாளிகளுக்கும் பஞ்சம்?
உண்மையில் நாம் தான் ஏமாலிகள்?

puduvaisiva said...

"யார் சொன்னது தமிழ் நாட்டில் நடிகர்களுக்கும் கோமாளிகளுக்கும் பஞ்சம்?
உண்மையில் நாம் தான் ஏமாலிகள்"

வாங்க ttpian
நீங்கள் சொன்னது வேதனையான உண்மை.

ttpian said...

என்ன செய்வது சிவா?
என் நெஞ்சல்லாம் எரிகிறது....
நான் காரைக்காலில் வசிக்கிரேன்:ஒரு நாளைக்கு 5 மணி நேரம், தமிழ் ஈழம் சம்பந்தமாக ....பார்க்கிறென்...படிக்கிறென்....தமிழக அரசியல் கட்சிகல் இதில் பிழைப்பு நடத்தும்போது ...மனசு வலிக்கிரது....அதனால் இப்படி எழுதினேன்....