Headline

திமுக கூட்டணியே வெல்லும்-ஜோதிடர்கள் கணிப்பு



-photo file copy

தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும், தேசிய அளவில் பாஜகவின் வெற்றிக்கு மாயாவதி மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருப்பார் என்றும் பிரபல ஜோதிடர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.

பிரபல ஜோதிடர் டாக்டர் எஸ்.வி.நகந்த், ஜோதிடர் டாக்டர் எஸ்.எம்.சிலகுரி, ஜோதிடர் டாக்டர் எஸ்.சதுர்வேதி, ஜோதிடர் பி.மதன்லால், ஜோதிடர் வி.ராதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள கணிப்பில்,

தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி பலம் கிடைக்காது. பாஜகவை விட காங்கிரசுக்கு சில இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.

மத்தியில் மீண்டும் கூட்டணி ஆட்சி தான் ஏற்படும். ஆனால் இது அதிக நாள் நீடிக்காது. விரைவிலேயே ஆட்சி கவிழும்.

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவுக்கு தற்போதைய கிரக நிலைகள் சாதகமாக இல்லை. பாஜகவுக்கு கர்நாடகத்தில் நல்ல வெற்றிகிடைக்கும். ஆனால் அத்வானி ஜாதகத்தின்படி அவருக்கு ராசியான திசை எதுவும் இல்லை. இதனால் அவர் பிரதமர் பதவியில் அமர முடியுமா என்பது சந்தேகமே. அதே நேரத்தில் சோனியா காந்திக்கு கிரக அமைப்புகள் சாதகமாக உள்ளன.

பாஜகவின் வெற்றிக்கு மாயாவதி தான் மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருப்பார். காங்கிரசுக்கு ஆந்திராவில் தான் கணிசமான வெற்றிகிடைக்கும்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கே அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும். பிகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெரும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி
-தட்ஸ்தமிழ்

6 comments:

ttpian said...

தம்பி!
ஈழம் அமய நான் செய்த வேலைகல்...
எனக்கு அன்கு முதல்வர் பதவி தருவாயா?
ஓடி வந்து ஊழியம் செய்வேன்

puduvaisiva said...

''தம்பி!
ஈழம் அமய நான் செய்த வேலைகல்...
எனக்கு அன்கு முதல்வர் பதவி தருவாயா?
ஓடி வந்து ஊழியம் செய்வேன்''


வாங்க ttpian
பதவி உங்களுக்கு மட்டுமா? இல்ல குடும்ப வாரிசுகளுக்குமா??

:-))))))))))

Anonymous said...

வானிலை அறிவிப்பு போல் இலவசங்கள் அறிவிப்பினை தொடர்ந்து சோதிட அறிவிப்புகள் மாறி (நாறி) போக வாய்ப்பிருக்கிறது.

Anonymous said...

இன்றைய அறிவிப்பு-வேலை உறுதி திட்டத்தில் ஊதியம் 100ரூபாய்-சோனியா

puduvaisiva said...

"வானிலை அறிவிப்பு போல் இலவசங்கள் அறிவிப்பினை தொடர்ந்து சோதிட அறிவிப்புகள் மாறி (நாறி) போக வாய்ப்பிருக்கிறது."

"வானிலை அறிவிப்பு போல் இலவசங்கள் அறிவிப்பினை தொடர்ந்து சோதிட அறிவிப்புகள் மாறி (நாறி) போக வாய்ப்பிருக்கிறது."

Thanks for your comment Anonymous

Anonymous said...

இந்தா பிடி அடுத்த அறிவிப்பு-
மூன்று ரூபாய் விலையில் 25 கிலோ அரிசி.-சோனியா