Headline

தடுப்பு முகாம்களில் இன்னும் 2 ஆண்டுகள்


சிறிலங்காவில், முள்கம்பிகளால் சுற்றிவளைக்கபட்ட தடுப்பு முகாம்களில் வைத்திருக்கும் 250,000 வரையிலான தமிழ் மக்கள் இரண்டு வருடங்கள் வரை முள்கம்பிகளுக்குப் பின்னேயே இருப்பார்கள் என அரசு அதிகாரி ஒருவர் இன்று குறிப்பிட்டதை, பிரித்தானியா கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இத்தடுப்பு முகாம்களின் சூழலின் நிலை குறித்து சர்வதேசம் வைத்திருந்த கவலையையும் புறம்தள்ளி, எவ்வளவு காலத்துக்குத் தடுத்து வைத்திருப்பது குறித்து ஐ.நா. தங்களுக்கு முறையிடவிட சிறிலங்கா ஆயத்தமாகவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் லக்ஸ்மன் குலுகல கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசின் முந்திக் கொடுத்த நிச்சயங்களில் இருந்து மிகவும் மாறுபட்ட இம்முடிவையிட்டு ஐ.நா. பேச்சாளர், கோர்டன் வெய்ஸ், தான் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசானது இவ்வருட முடிவுக்குள் 80 விகிதமான மக்களை அவர்களது வதிவிடங்களுக்கு திரும்ப அனுப்பிவிடும் அல்லது குறைந்தது அதற்கு முயற்சி எடுக்கும் என்றே நாம் விளங்கியிருந்தோம். என்று கோர்டன் வெய்ஸ் கூறியுள்ளார்.

முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் மக்களை வெளியேறவிடுமாறு ஐ.நா., பிரித்தானியா மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்கள். ஆனால், இது தொடுத்து ஐ.நா. எங்களுக்கு முறையிட முடியாது என்று குலுகல கூறியுள்ளார்.


அவர்கள் வேண்டுகோள் விடுக்கலாம் ஆனால் ஐ.நா. மக்களை வெளியேவிடுமாறு எங்களைக் கேட்கவில்லை என்றும் குலுகல மேலும் கூறியுள்ளார். மேலும் “மக்களை மீண்டும் குடியேற்ற எங்களுக்குத் திட்டம் உள்ளது, அது 2 வருடங்கள் எடுக்கும், அதற்கு இவ்வமைப்புகள் வந்து எம்மோடு சேர்ந்து கொள்ளலாம்” என்று குலுகல தெரிவித்துள்ளார். மேலும், இம்மக்கள் விடுதலைப் புலிகளா இல்லையா என்று நிலைநாட்டும் வரை அவர்களைத் தடுத்துவைத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு, முகாம்களின் நிலைமைகள் குறித்த குற்றச்சாட்டுக்கு பதில் அழிக்கையில் “நட்சத்திர விடுதியின் உபசரிப்பை அங்கு ஒருவரும் எதிர்பார்க்க முடியாது என்றும், அடிநிலையைத்தான் கொடுக்க முடியும், ஒக்ஸ்வோர்ட் கல்லூரியை அவர்கள் எதிர்பார்க்க முடியாது” என்றும் கார்டியன் பத்திரிகைக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.

நன்றி
-பதிவு

0 comments: