Headline

சேவ் த டைகர்ஸ் - புலணாய்வு கட்டுரை


விடுதலைப்புலிகளின் வலையமைப்பு 20 நாடுகளில் செயற்பட்டதாகவும் இந்த வலையமைப்பு புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட புலிகளை காப்பற்றுவதற்காக சேவ்த டைகர்ஸ் என்ற நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்க பேராயர் டெஸ்மன் டுடு, அமெரிக்காவின் சிவில் செயற்பாட்டாளர் ஜெசி ஜெக்ஷன், பிரபல அமெரிக்க பாடகி ஒபார வின்பிரி, நேட்டோ அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹேக், நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண், வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்ட், பிரான்ஸ வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சனர், அமெரிக்க வெளிவிவகார ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் உள்ளிட்டோர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இறுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா ஆகியோரை குற்றவாளிகளாக்க, அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்டமா அதிபர் புறூஸ் பெயினிடம் 3 மில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்ளப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் றொபர்ட் இவான்ஸ் இதற்கு ஒத்துழைப்புகளை வழங்கியதாகவும் அந்த சிங்கள நாளிதழ் கூறியுள்ளது.

சேவ் த டைக்கர்ஸ் நடவடிக்கைக்கு பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸர்லாந்து, டென்மார்க், சுவிடன், கனடா, மொரிசியஸ், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள புலிகளின் அணிகள் இணைந்து கொண்டன. 80 மில்லியன் யுரோவை செலவிட்டு மேற்கொண்ட பாரிய நடவடிக்கை முழுமையாக தோல்வியடைந்துள்ளதாக அந்த சிங்கள நாளிதழ் கூறியுள்ளது.

விடுதலைப்புலிகளை காப்பாற்ற 27 இணையத்தளங்கள், 113 புளோக் தளங்கள், 29 சர்வதேச ஊடகங்கள், 137 தன்னார்வ அமைப்புகள் கடுமையாக செயற்பட்டதாகவும் அத்துடன் போலி பெயர்களின் இணையத்தளங்களும் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையின் இருந்து புலிகளுக்கு ஆதரவு வழங்குவோர் இணைந்து லண்டனில் சேறுபூசும் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்தனர். இந்த இணையத்தளத்திற்கு நிதி வழங்கியவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது எனவும் அந்த சிங்கள நாளிதழ் கூறியுள்ளது.

இதனை தவிர மூன்று பேர் தீமூட்டித் தற்கொலை செய்துகொண்டனர். ஜெனிஜவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்திற்கு எதிரில் தினமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நேற்றைய தினத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் அமைப்பும் இறுதி சந்தர்ப்பத்தில் பிரபாகரனை காப்பற்ற முயற்சித்தது. 50 புலிகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினர்கள் எனக் கூறி இலங்கையில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சேவ் த டைக்கர்ஸ், நடவடிக்கைகளில் ஜெனிவா மற்றும் லண்டனில் உள்ள புலிகளின் வலையமைப்புகள் கடுமையாக செயற்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், லண்டனில் உள்ள தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஊடாக பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்;டார் எனவும் அந்த சிங்கள நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

நன்றி
-உலக தமிழ்ச் செய்திகள்

0 comments: