போர் பீதி காரணமாக இலங்கையில் இருந்து படகில் தப்பி வந்த 6 பெண்கள் உள்பட 9 தமிழர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் 10 பேர் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் மீட்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு படகு வந்தது. இதைப் பார்த்த கொத்தபல்லி மண்டலம் சுப்பம்பேட்டை மீனவர்கள்இ காக்கிநாடாவில் உள்ள கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் படகில் விரைந்து சென்றுஇ உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்த சிவராஜ் ஜெகதீஷ்வரன்இ ஓபாக்இ ஏசுதாஸ்இ இந்திரகுமார்இ அமீர்தாஸ்இ நிரஞ்சன்இ கமலாதேவிஇ பாத்திமாஇ பிரசாம்பர்இ சைதா என விசாரணையில் தெரியவந்தது.
அவர்களுக்கு கொத்தபல்லி ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இந்திரகுமார்இ சைதாஇ பாத்திமா நிரஞ்சன்இ கமலாதேவி ஆகியோரின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவர்களை தீவிர சிகிச்சைக்காக காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள் கூறுகையில்இ
போருக்கு பயந்து முல்லைத்தீவு பகுதியில் இருந்து 19 பேர் பத்து நாட்களுக்கு முன்பு 2 படகுகளில் தமிழகம் நோக்கி புறப்பட்டோம். இதில் ஒரு படகில் 9 பேரும் மற்றொரு படகில் 10 பேரும் பயணம் செய்தோம். கடலில் திக்கு தெரியாமல் அலைந்தோம்.
அப்போது காற்று வேகமாக வீசியதால் 9 பேர் வந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்து மூழ்கியது. அதில் இருந்த 6 பெண்கள்இ ஒரு பெண் குழந்தை உள்பட 9 பேரும் நீரில் மூழ்கினர். கடவுள் செயலால் நாங்கள் தப்பிவிட்டோம். கடலில் மூழ்கிய 9 பேரும் இறந்திருக்கலாம் என நினைக்கிறோம் என்றனர்.
நன்றி
-தமிழ்வின்
Headline
கடலும் காப்பற்ற வில்லையே ஈழத்தமிழரை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஈழ தமிழர்களின் நிலை கண்டால் .... என்னமோ போங்க!
"கிரி
ஈழ தமிழர்களின் நிலை கண்டால் .... என்னமோ போங்க!"
பாவம் கிரி உயிர் வாழ அனைத்து வழிகளையும் இழத்த அவர்கள் படகு பயணத்தை மேற்கொண்டு சாவை சந்தித்து இருக்கிறார்கள்.
சத்தியத்தை காட்டிலும் சாபம் வலிமை மிக்கது. இது வரலாறு சொல்லும் உண்மை.
Post a Comment