Headline

இலங்கை தூதர் ஹம்சாவின் கார் தாக்கப்பட்டது

carry car gif Pictures, Images and Photos


இலங்கைக்காக இந்திய துணை தூதர் ஹம்சாவின் வாகனம் நேற்று இரவு அடித்து நொருக்கப்பட்டுள்ளது. ஆந்திரா வர்த்தக சங்கத்தினால் நேற்று இரவு விருந்து உபச்சாரம் வழங்கப்படும் நிகழ்வுக்கு சென்ற சமயமே இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

கடந்த பல ஆண்டுகளாக இலங்கைக்கான இந்திய தூதுவராக கடமையாற்றி வரும் ஹம்சா இங்கிலாந்து நாட்டுக்கான துணைத் தூதுவராக பதவி உயர்வு பெற்று செல்ல இருக்கும் இந்த நிலையில் பல்வேறு அமைப்புக்களை சந்தித்து வருகிறார்.






அந்த வகையில் ஆந்திரா அமைப்பினால் ஏற்பாடு செய்யத இரவு விருந்துபச்சாரம் நேற்று சென்னையில் நடைபெற்ற போது இந்த நிகழ்வு தொடர்பாக அறிந்த வழக்கறிஞர்களும் மாணவர்களும் வெளியில் கூடி இருந்துள்ளனர்

இதனை அறிந்த காவற்துறையினர்; பாதுகாப்பு வழங்க முற்பட்ட சமயம் இரு தரப்பினருக்கும் பிரச்சனை முற்ற மாணவர்களும் வழக்கறிஞர்களும் ஹம்சாவின் வாகனத்தினை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்





நன்றி
- பரந்தன்செய்திகள்

0 comments: