Headline

துபாய் வாழ் நண்பர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்



இன்று சங்கமம் லைவ் தளத்தில் இருந்து நான் பெற்ற மின் அஞ்சல் செய்தி.

துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்த‌ நிலையில் இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக அவ‌ச‌ர‌ சிகிச்சைப் பிரிவில் இருந்து வ‌ருகிறார்.





இந்திய‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல்வேறு ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளை ஆற்றிவ‌ரும் ஈமான் அமைப்பின் குழுவின‌ர் அத‌ன் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா த‌லைமையில் ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சை பெற்று வ‌ரும் இந்திய‌ர்க‌ளை வார‌ந்தோறும் ச‌ந்தித்து அவ‌ர்க‌ள‌து தேவைக‌ளை நிறைவேற்றி வ‌ருகின்ற‌ன‌ர்.


அவ்வாறு சென்ற‌ பொழுது இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌ கால‌மாக‌ அவ‌ச‌ர சிகிச்சைப் பிரிவில் நினைவிழ‌ந்த‌ நிலையில் சிகிச்சை பெற்று வ‌ரும் த‌க‌வ‌ல் அறிந்து அவ‌ரைப் பார்த்து வ‌ந்த‌ன‌ர்.

இவ‌ர் யார் என்ப‌த‌ற்கான‌ எவ்வித‌ சான்றுக‌ளும் அவ‌ரிட‌ம் இல்லாத‌ நிலையில் ம‌ருத்துவ‌ம‌னியில் சேர்க்க‌ப்ப‌ட்டுள்ளார். இவ‌ரைப் பார்க்கையில் த‌மிழ‌க‌ம், கேர‌ளா, ஆந்திரா உள்ளிட்ட‌ மாநில‌த்தைச் சேர்ந்த‌வ‌ராக‌ இருக்க‌லாம் என‌ க‌ருத்த‌ப்ப‌டுகிற‌து.

த‌மிழ் பேசும் போது ம‌ட்டும் இவ‌ர‌து பார்வை மேலும் கீழும் வ‌ருகிறது. என‌வே இவ‌ர் குறித்து த‌க‌வ‌ல் தெரிந்தால் ஈமான் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹாவை 050 467 4399 / 050 51 96 433 எனும் அலைபேசியில் அல்ல‌து muduvaihidayath@gmail.com என்ற‌ மின்ன‌ஞ்ச‌லிலோ தொட‌ர்பு கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

அவ்வாறு த‌க‌வ‌ல் கிடைக்கும் ப‌ட்ச‌த்தில் இவ‌ர் ப‌த்திர‌மாக‌ அவ‌ர‌து குடும்ப‌த்தாரிட‌ம் சேர்ப்ப‌த‌ற்கான‌ ஏற்பாடுக‌ள் செய்ய‌ப்ப‌டும்.

- தகவல்: முதுவை ஹிதாயத்

நன்றி
-சங்கமம் லைவ்

5 comments:

வினோத் கெளதம் said...

Tagavalukku nantri.

குப்பன்.யாஹூ said...

useful post, thanks to u.

puduvaisiva said...

வாங்க வினோத் மற்றும் குப்பன்_யாஹூ

இந்த செய்தியை படித்தவுடன் எனது மனது மிகவும் கவலை அடைந்தது. எனவே இந்த தகவல் பிற நண்பர்களின் பார்வைக்கு செல்லவே இப் பதிவு.

சென்ஷி said...

தகவலுக்கு நன்றி சிவா..

puduvaisiva said...

"சென்ஷி said...
தகவலுக்கு நன்றி சிவா.."

நன்றி சென்ஷி