திரைக்கதை தொடர்பான பயிலரங்கம் ஒன்றை மே 29-ம் தேதி முதல் 6 நாட்களுக்கு நடத்துகிறார் கலைஞானி கமல்ஹாசன்.
இந்திய தொழில்நுட்ப கழகத்துடன் சேர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் நடத்தும் இந்த பயிலரங்கம், சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற உள்ளது. கமல்ஹாசன் ஒரு விரிவுரையாளராக, திரைக்கதை குறித்த பல்வேறு பாடங்களை மாணவர்களுக்கு நடத்த உள்ளார்.
இதில் பிரான்ஸ் திரைப்பட திரைக்கதை ஆசிரியர் ஜான் க்லாட், வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாணவர்களிடம் பேசுவார்.
இயக்குனர் ஹரிஹரன், இந்தி திரைப்பட எழுத்தாளர் அன்ஜும் ரஜ்ஜப் அலி, திரைக்கதை ஆசிரியர் அதுல் திவாரி உள்ளிட்டோரும் இந்த பயிலரங்கில் பங்கேற்க உள்ளனர்.
சொற்களை எப்படி காட்சிகளாக மாற்றுவது, தினசரி நிகழ்வுகளை எப்படி திரையில் கொண்டு வருவது போன்ற பல்வேறு வகுப்புகளை இந்தப் பயிலரங்கில் நடத்த உள்ளதாக இயக்குனர் ஹரிஹரன் தெரிவித்தார்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
வீடியோ தொகுப்பு பாகம் 1 லிருந்து 6 வரை உள்ளது.
நன்றி
- தட்ஸ்தமிழ்
-சிவாஜி.டிவி
Headline
கமல் நடத்தும் திரைக்கதை பயிலரங்கம் - வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கலக்குங்க கமல்
"கிரி
கலக்குங்க கமல்"
வாங்க கிரி
வாழ்த்துக்கு நன்றி.
Post a Comment