Headline

உலகத் தமிழினத்தின் இன எழுச்சி வரும் யூலை 5-ல்


தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆயுதமுனையில் தோற்கடித்திருப்பதாக சிறீலங்கா அரசு மார்தட்டிக் கொள்ளும் இவ்வேளையில், வரும் யூலை மாதம் 5ஆம் நாளன்று ஒரே நேரத்தில் உலகத் தலைநகரங்களில் அணிதிரள்வதற்கு உலகத் தமிழர்கள் தயாராகின்றனர்.

வகை தொகையின்றி வன்னி மக்களை கொன்றுகுவித்தும், வதைமுகாம்களில் சிறைவைத்தும், தமிழ் குருதியில் வெற்றி விழா கொண்டாடும் சிங்கள தேசத்துடன் இனியும் ஈழத்தமிழர்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்ற அரசியல் யதார்த்தத்தை உலக சமூகத்திற்கு உணர்த்தி, தமிழீழ தனியரசுக்கான இலட்சிய வேட்கையை உலக அரங்கில் ஓங்கியொலிக்கும் ஓர்மத்துடனும், வதை முகாம்களில் சிறைப்பட்டுள்ள வன்னி மக்களை பொறுப்பேற்குமாறு உலக சமூகத்தை வலியுறுத்தியும், ஒரே நாளில், ஒரே நேரத்தில், தமிழீழம் என்றை ஒற்றை முழக்கத்துடன் அணிதிரள்வதற்கு உலகத் தமிழினம் தன்னை தயார்படுத்திக் கொள்கின்றது.


செப்டம்பர் 11இற்குப் பின்னரான உலக ஒழுங்கில் தனியரசு நிலையை ஈட்டிய கிழக்குத் தீமோர், மொன்ரநிக்ரோ, கொசவோ ஆகிய தேசங்களில் வழியில், தனியரசை நிறுவுவதற்கான சகல அரசியல் தகுதிகளையும், சனநாயக உரிமைகளையும் தமிழீழ தேசம் கொண்டுள்ள நிலையில், சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழீழ தாயக மக்களின் குரலாக உலக அரங்கில் வீறுகொண்டெழுவதற்கு உலகத்தமிழர்கள் தயாராகின்றனர்.

அரசியல் சுதந்திரத்திற்கான தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ள புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் இளைய தலைமுறையினருக்கு உறுதுணையாக, ஒவ்வொரு நாடுகளிலும் இயங்கும் தமிழ் பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து, உயிர்த்தெழுவோம் எழுச்சி நிகழ்வை முன்னெடுப்பதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டுள்ளன.

நன்றி
-சங்கதி

1 comments:

puduvaisiva said...

தமிழினி அழைத்தமைக்கு நன்றி.