Headline

பத்மநாதனை கைது செய்ய மகிந்தவின் கோரிக்கை!


தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனை கைது செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உதவ வேண்டும் என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வீதித் தடைகளை அகற்றி மக்களை சுதந்திரமாக நடமாட அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என பான் கீ மூன் சிறிலங்கா அரச தலைவரை கேட்டிருந்தார். ஆனால், விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சங்களால் தான் வீதித்தடைகள் எற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவை உடனடியாக நீக்கப்பட மாட்டாது எனவும் மகிந்த தெரிவித்திருந்தார்.

மேலும் விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனை கைது செய்து நாடு கடத்துவதற்கும் ஏனைய நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்களை கைது செய்வதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உதவிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மகிந்த ஐ.நா.வின் செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி
-புதினம்

0 comments: