Headline

புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பை ஏற்க மாட்டோம் - கோத்தபாய


விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக பிபிசி தமிழோசை தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் இன்று ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்துவிட்டது.

இலங்கை மோதல்கள் காரணமாக பெரும் மனித நேய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஐ. நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல சர்வதேச நாடுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தாம் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவிப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது.

இது தொடர்பாக தமிழோசையிடம் பேசிய இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்த நிலையில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் கோருவது அர்த்தமற்றது என்று கூறி அதனை நிராகரித்துள்ளார்.

ஆயுதங்களை களைந்துவிட்டு, தாம் பணயமாக பிடித்து வைத்திருக்கும் பொதுமக்களை விடுதலை செய்துவிட்டு, சரணடைவது ஒன்றே விடுதலைப்புலிகளுக்கு இப்போது உள்ள ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார்.

நன்றி
-வீரகேசரி

0 comments: