Headline

அந்த 16 காட்சிகாக படம் " A" ஆனது




ராயல் பென்டகன் மீடியா தயாரிக்கும பிரம்மதேவா, ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையாம்.

நகரில், திடீர் திடீர் என மர்மமான முறையில் பலர் கொலை செய்யப்படுகிறார்கள். மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு திக்கித் திணறி போலீசார் கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள்.

ஆனால் கொலையாளி யார் என்பது தெரிந்தது போலீசார் அதிர்கிறார்கள். கொலைக்கு அவன் சொ்ல்லும் காரணங்கள் இன்னும் பேரதிர்ச்சியைத் தருகின்றன.

இந்த த்ரில்லரில் நாயகனாக நடித்திருப்பவர் டாக்டர் ராம். திருச்சியை சேர்ந்த மருத்துவரான இவருடன் தேஜாஸ்ரீ, முமைத்கான் ஆகியோர் ஜோடியாக நடித்து கவர்ச்சியில் கலங்கடித்துள்ளனராம்.

வி.எஸ்.தர்மலிங்கா டைரக்டு செய்துள்ள இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டது.

படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரி மற்றும் உறுப்பினர்கள், படத்தில் வன்முறை அதிகமாக இருப்பதாக கூறி, 16 இடங்களில் வெட்டவேண்டும் என்றார்கள். அப்படி வெட்டினால், படத்துக்கு யு ஏ சர்டிபிகேட் தருகிறோம். வெட்டவில்லை என்றால், ஏ சர்டிபிகேட்தான் தருவோம், என்று கூறிவிட்டார்களாம்.

அந்த 16 காட்சிகளையும் வெட்டி விட்டால் படத்தில் பார்க்க ஒன்றுமே இருக்காது என்று முடிவு செய்த இயக்குநரும் தயாரிப்பாளரும் பரவாயில்லை, ஏ சர்டிபிகேட்டே கொங்டுங்கள் என்று கூறிவிட்டார்களாம்.

அந்த சர்டிபிகேட்டுக்காகத்தான் இயக்குநர் இத்தனை கஷ்டப்பட்டாரென்பது தணிக்கைக் குழுவுக்குத் தெரிய வாய்ப்பில்லையே!

நன்றி
-தட்ஸ்தமிழ்

4 comments:

ers said...

நெல்லைத்தமிழ் டாட் காமில் தங்களது ஆக்கம் புக்மார்க் செய்யப்பட்டுள்ளது. தாங்கள் விரும்பினால் சிறந்த படைப்புக்களை இத்தளத்தில் புக்மார்க் செய்து பலரும் படிக்க உதவுங்கள்.

தளமுகவரி
nellaitamil

puduvaisiva said...

"நெல்லைத்தமிழ் டாட் காமில் தங்களது ஆக்கம் புக்மார்க் செய்யப்பட்டுள்ளது. தாங்கள் விரும்பினால் சிறந்த படைப்புக்களை இத்தளத்தில் புக்மார்க் செய்து பலரும் படிக்க உதவுங்கள்"


நெல்லைத்தமிழ்
தங்கள் ஆதரவுக்கு நன்றி

இராகவன் நைஜிரியா said...

அதனால படம் ஓடுவதற்கு அந்த 16 காட்சிகள் தான் முக்கியம். கதை, திரைக்கதை, வசனம்.... இதைப் போல உள்ள விசயங்கள் முக்கியமில்லை..

வாழ்க தமிழ் சினிமா...

puduvaisiva said...

"அதனால படம் ஓடுவதற்கு அந்த 16 காட்சிகள் தான் முக்கியம். கதை, திரைக்கதை, வசனம்.... இதைப் போல உள்ள விசயங்கள்

முக்கியமில்ல வாழ்க தமிழ் சினிமா"

வாங்க இராகவன் நைஜிரியா
கோடபாக்கத்தையே வாழ வைப்பது அது போன்ற காட்சிகள்தான்.

:-))))))))