Headline

எந்த சக்திகள் அழுத்தங்களைக் கொடுத்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யுத்த நிறுத்தம் சாத்தியமற்றது - ரட்ணசிறி



பகலில் விழுந்த குழியில், இரவிலும் விழுவதற்கு அரசாங்கம் தயாரில்லை அதனால் எந்த சக்திகள் அழுத்தங்களைக் கொடுத்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யுத்த நிறுத்தம் சாத்தியமற்றது என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்

நேற்று புதன்கிழமை பாராளுமன்ற சபையில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையைச் சமர்ப்பித்துப் பேசுகையில் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களுக்கும் நாட்டுக்கும் ஜனநாயகத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இதற்காக நாட்டின் ஒட்டு மொத்த மக்களும் அரசாங்கத்தை பலப்படுத்தி அதன் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பல்வேறு சக்திகள் பல்வேறு அழுத்தங்களை எமது நாட்டின் மீது பிரயோகித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டு மக்கள் எம்மை தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருப்பது அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகும்.

எமது நாட்டுக்குள் இருக்கின்ற சில தொண்டு நிறுவனங்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு இருக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்கள் இன்று தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகப் பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பலவீனமடைகின்ற சந்தர்ப்பங்களிலே யுத்த நிறுத்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றனர். மரண வாசலில் நின்று சமிக்ஞை கொடுக்கின்ற அப்பாவி மக்களை வந்த வழியே திரும்பிப் போகுமாறு கூறுவதற்கு அரசாங்கத்தினால் முடியாது. அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசினுடையது என்றும் அவர் கூறினார்.

நீருக்குள்ளும் வெளியிலும் மற்றும் விமானத் தாக்குதல்களுக்கும் என பல்வேறு வளங்களைக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பே புலிகள் அமைப்பாகும். எமது படையினர் தாமதித்திருந்தால் நாடு மிக மோசமான அழிவுகளைச் சந்தித்திருக்கும். யுத்த நிறுத்தங்கள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. ஆனால் அது முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. நிலைமை இவ்வாறிருக்கும்போது நம்பிக்கையுடன் யுத்த நிறுத்தமொன்றுக்கு எவ்வாறு செல்ல முடியும் என்ற கேள்வியெழுப்பினார்.

நன்றி
பதிவு

0 comments: