கவர்ச்சிப் புயல் ஷகீலா, தேர்தல் களத்தில் குதிக்கிறார். வேட்பாளராக அல்ல, தெலுங்கு தேசம் கட்சியின் ஸ்டார் பிரசார நாயகியாக.
தேர்தல் காலம் வந்து விட்டால் ஏகப்பட் களேபரங்கள் அரங்கேறும். கடந்த லோக்சபா தேர்தலின்போது அதிமுக, திமுகவுக்காக வாக்கு கேட்டு ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் தமிழக மக்களை பயமுறுத்தியது நினைவிருக்கலாம்.
இந்த தேர்தல் களத்தில் எத்தனை நட்சத்திரங்கள் தமிழக தேர்தல் வானை கலக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் ஆந்திராவில் ஏகப்பட்ட நட்சத்திரங்களை ஒவ்வொரு கட்சியும் வலை வீசி இழுக்கத் தொடங்கி விட்டன.
காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் முக்கிய நட்சத்திரங்களை, மக்களை கவரக் கூடிய நட்சத்திரங்களை குறிப்பாக நடிகைகளை தங்களது பிரசார வட்டத்திற்குள் கொண்டு வர ஆரம்பித்துள்ளன.
தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியான ரோஜா இதில் முன்னணியி்ல இருக்கிறார். அவரது பிரசார ஸ்டைல் ஏற்கனவே பெருத்த அலைகளைப் பரப்பியுள்ளது.
அதேபோல முன்னணி ஸ்டாரான திரிஷாவும் பிரசாரம் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் காங்கிரஸுக்காக வாக்கு சேகரிப்பார் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் தெலுங்கு தேசத்திற்காக வாக்கு சேகரிக்க கவர்ச்சிப் புயல் ஷகீலாவை அக்கட்சி இழுத்துள்ளதாம்.
முன்பு மாதிரி இப்போது ஷகீலா பிசியாக இல்லை. அவரை பிரசாரத்திற்கு வருமாறு தெலுங்கு தேசம் அழைக்க கவர்ச்சி தேசத்தின் கதாநாயகியான ஷகீலாவும் ஒப்புக் கொண்டு விட்டாராம்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
Headline
தெலுங்கு தேசத்திற்கு ஆதரவாக பிரசாரத்தில் குதிக்கிறார் ஷகீலா
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//"தெலுங்கு தேசத்திற்கு ஆதரவாக பிரசாரத்தில் குதிக்கிறார் ஷகீலா"
//
Earth Quake alert issued in Andhra Pradhesh..
//"தெலுங்கு தேசத்திற்கு ஆதரவாக பிரசாரத்தில் குதிக்கிறார் ஷகீலா"
//
Earth Quake alert issued in Andhra Pradhesh..
Thanks for your comment
Post a Comment