Headline

செஞ்சிலுவை சங்கம் மூலம்1கோடி நிதி:ஜெ



இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.


தமிழகம், புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் செலுத்த உண்டியலில் நிதி செலுத்தினர்.


காலை 9மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கிய ஜெயலலிதா மாலை 4.55க்கு முடித்துக்கொண்டார்.மதிமுக பொதுசெயலாளர் வைகோ, பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.


உண்ணாவிரதம் முடியும் தருவாயில் பேசிய ஜெயலிதா, ஈழத்தமிழர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் 5லட்சம் உண்டியலில் போட்டேன்.


இப்போது சொல்கிறேன்...அதிமுக சார்பில் 1கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது தவிர தமிழக முழுவதும் அதிமுக சார்பில் சேர்ந்த உண்டியல் பணம் வந்தவுடன் அனைத்தையும் சேர்த்து செஞ்சுலுவை சங்கம் மூலம் ஈழத்தமிழர்கள் வாழ்வுக்கு நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

நன்றி
நக்கீரன்

0 comments: