Headline

இலங்கைக்கு தமிழக கிருத்துவ அமைப்புகள் கண்டனம்




கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்க தடை வித்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே அரசுக்கு தமிழக கிருத்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கச்சத்தீவில் உள்ள அந்தோணியர் கோவிலில் ஆண்டுதோறும், மார்ச் மாதம் திருவிழா நடைபெறும். நேற்று தொடங்குவதாக இருந்த இந்த திருவிழா திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண கிருத்துவ பேராயர் அறித்துள்ளார்.

விழாவுக்கு அனுமதி கொடுக்க இலங்கை ராணுவத்தினர் மறுத்ததால், இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ராஜபக்சே அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக கிருத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை மாவட்ட முதன்மை குரு அமல்ராஜ், இலங்கை மக்களும், தமிழர்களும் சேர்ந்து கொண்டாடும் இந்த திருவிழா தடை செய்யப்பட்டுள்ளது. திருவிழா மீண்டும் நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நன்றி
நக்கீரன்

0 comments: