தமிழகத்தில் இருக்கும் 90 சதவீத பிரமாணர்கள் வறுமையால் வாடுகின்றனர். எனவே அவர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ எஸ்வி சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்த தென்னிந்திய பிராமணர் சங்க கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்விசேகர் கூறுகையில்,
தமிழகம் சமூக நீதி கண்ட மாநிலம் என்று முதல்வர் கூறியுள்ளார். மாநிலத்தில் தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால்தான் சமூக நீதி என்பது முழுமையடையும்.
பிராமணர்களின் இன்றைய நிலையை ஆய்வு செய்ய உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும். எங்கள் அமைப்பை பொறுத்தவரை மற்றவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை தவறு என்று கூற வில்லை. எங்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
தமிழகத்தில் சுமார் 40 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் வறுமையால் வாடுபவர்கள்தான். எனவே பிராமணர்களுக்கு இடஒக்கீடு வழங்க தமிழக முதல்வரால் முடியும்.
எனவே தமிழ்நாட்டில் உள்ள பிராமணர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். பிராமணர் சங்க கூட்டமைப்பு அரசியல் சார்ந்த அமைப்பு இல்லை என்றார் எஸ்வி சேகர்.
நன்றி
- தட்ஸ்தமிழ்
Headline
பிராமணர்களுக்கு 7% இட ஒதுக்கீடு-எஸ்வி.சேகர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment