Headline

10ம்தேதி உண்ணாவிரதத்திற்கு போலீசார் மறுப்பு:9ம் தேதிக்கு மாற்றம்:ஜெ


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று, இலங்கை தமிழர்களுக்காக வரும் 10ம் தேதி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.



10 ம் தேதி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதற்கு போலீசார் அனுமது மறுத்துள்ளதால் உண்ணாவிரத தேதியை மாற்றியுள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,



இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கை தமிழர்களுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் அதிமுக சார்பில் 10-ந் தேதி உண்ணாவிரதம் நடைபெறுவதாக இருந்தது.



இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்து விட்ட நிலையில் மேற்படி உண்ணாவிரத அறப்போராட்டம் 9-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று மாற்றப்பட்டுள்ளது.



சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் நடைபெறும்’’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி
நக்கீரன்

1 comments:

Anonymous said...

what a drma