Headline

சீமானுக்கு வரும் 20ம் தேதி வரை காவல்நீடிப்பு




புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். இயக்குநர் சீமான் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.



அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து சீமான் கைது செய்யப்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சீமானை 15நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.



இதனால் புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் சீமான்.

இன்றுடன் 15 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் இன்று மீண்டும் நீதிபதி முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதி, சீமானுக்கு வரும் 20 ம் தேதி வரை காவல் நீடிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

இதற்கு முன்னதாக கோர்ட் வளாகத்தில் டைரக்டர் சீமானை செய்தியாளர்கள் சந்தித்தனர்.

அப்போது உங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளதே? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர்.

அதற்கு சீமான், ஜெயிலில் வைக்க வேண்டும் என முடிவு செய்த பிறகு சட்டம் எந்த ரூபத்தில் இருந்தால் என்ன? சட்டம் தன் கடமையை செய்துள்ளது. தமிழனாய் நான் என் கடமையை செய்கிறேன் என்று தெரிவித்தார்.

2 comments:

Unknown said...

சீமானுக்கு இப்போது அடக்க முடியாமல் பீறிட்டு எழும் தமிழ் உணர்வு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு உள்ளே உறங்கிக்கொண்டிருந்ததா அல்லது சிங்கள நடிகை பூஜா மடியில் இவர் பூஜை நடத்தியதில் வெளியே தெரிய வில்லையா?

puduvaisiva said...

"சீமானுக்கு இப்போது அடக்க முடியாமல் பீறிட்டு எழும் தமிழ் உணர்வு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு உள்ளே உறங்கிக்கொண்டிருந்ததா அல்லது சிங்கள நடிகை பூஜா மடியில் இவர் பூஜை நடத்தியதில் வெளியே தெரிய வில்லையா?"

HI UUUUUUUUUUUUUUU

thanks for your comment
those are their personal matter
we are never never enter it.