இலங்கையில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி ராபர்ட் உட் கூறுகையில், அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இலங்கையில் நிலவும் மனித அவல நிலைதான் எங்களுடைய முக்கியமான கவலையாகும். போர் காரணமாக உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்களின் நிலைமை எங்களை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. மோதல்களில் சிக்கிக் கொள்ளும் அப்பாவி மக்கள் குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
தமிழர் இனப்பிரச்சனைக்கு ராணுவ ரீதியாக முடிவு காணப்பட முடியாது. இதற்கு அரசியல் ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ராபர்ட் உட் கூறினார்.
விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு அமெரிக்கா சமரச முயற்சியில் ஈடுபடுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராபர்ட் உட், நாங்கள் அந்தப் பணிக்காக கோரப்பட வில்லை.
அதே சமயம் இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும். போரை நிறுத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான பணிகளை இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் தான் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
நன்றி
-நக்கீரன்
Headline
இலங்கை பிரச்சனை: பேச்சுவார்த்தை முலமே தீர்வு: அமெரிக்கா
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
hi
please to chage background colour or font colour
'hi
please to chage background colour or font colour'
வணக்கம் பாண்டித்துரை
தங்கள் கருத்திற்கு இனங்க எழுத்தின் நிறம் மற்றும் தலைப்பின் நிறம் மாற்றப்பட்டு உள்ளது.
நன்றி
புதுவை சிவா.
Post a Comment