
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடந்த இயல் விருது வழங்கும் விழாவில் ரஜினியின் மனம் திறந்த பேச்சு வீடியோ. 
Headline
எஸ்.ராமகிருஷ்ணன் பாராட்டு விழாவில் ரஜினி பேச்சு - வீடியோ
0 commentsஜப்பான் ரஜினி ரசிகரின் நடனம் - வீடியோ
7 comments
ஜப்பான் நாட்டின் ஒரு தொலைக்காட்சி நடத்தும் நடன போட்டியின் போது அந்த நாட்டின் நபர் ஒருவர் நமது ரஜினி நடித்த முத்து படத்தில் இடம் பெற்ற "ஒருருவன் ஒருருவன் முதலாளி " என்ற பாடலை பாடியும் நடனம் ஆடியும் அன் நாட்டு மக்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
கட்டிங் நடனம்
சிங்கை சிங்கம் நண்பர் கிரிக்கு இப்பதிவு சமர்பணம்
ஹைதராபாத்தில் எந்திரன் டைட்டில் சாங்!
1 comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படத்தின் டைட்டில் பாடலை ஹைதராபாத்தில் படமாக்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பிரமாண்ட படம் எந்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், விவேக் நடிக்க ஷங்கர் இயக்குகிறார்.
இப்படத்தின் டைட்டில் பாடலை இன்னும் ஓரிரு நாட்களில் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக படமாக்கவுள்ளார் ஷங்கர்.
ஷங்கர் டைப் பாடலமாக இது இருக்குமாம். இந்தப் பாடலில் ஹீரோ ரஜினி மீதான தனது காதலை பொழிந்து ஐஸ்வர்யா ராய் பாடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கலை இயக்குநர் சாபு சிரில் உருவாக்கியுள்ள கண்கவர் பிரமாண்ட செட்டில் வைத்து இந்தப் பாடலை படமாக்கவுள்ளனர். படத்தின் பிரமாண்ட ஹைலைட்டாக இது அமையும்.
இந்தப் பாடலலில் ஐஸ்வர்யாவுடன் 1000க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்டிஸ்டுகளும் பங்கேற்கின்றனர். அனைவரும் ரஜினி இப்படத்தில் அணிந்து நடித்துள்ள சில்வர் கிரே கலரிலான உடையில் வருகின்றனராம்.
படமாக்கப்படவுள்ள இந்தப் பாடலை சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், மதுஸ்ரீ குரலில் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட பெரும் பொருட் செலவிலான பாடல் காட்சிகளில் இதுவும் ஒன்றாக அமையும் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. காரணம், குரூப் டான்ஸர்கள் போட்ட டிரஸ்ஸே படு காஸ்ட்லியாம்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
திரையுலகில் அரசியல் வேண்டாம்!-ரஜினி
0 comments
பெங்களூர்: தமிழர்- கன்னடர் என திரையுலகில் அரசியலைக் கலந்து விடாதீர்கள். நாம் அனைவரும் சகோதரர்களாக இருப்போம் என்று ரஜினிகாந்த் கூறினார்.
கன்னடத் திரையுலகின் 75 வது ஆண்டு விழாவையொட்டி, அம்ருத மகோத்ஸவம் எனும் பெயரில் 3 நாள் பிரம்மாண்ட திருவிழா நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுப் பேசினார். அதில் ரஜினி பங்கேற்கவில்லை. ஹைதராபாத்தில் நடந்த தனது நண்பர் மோகன்பாபு மகன் திருமணத்துக்குச் சென்றுவிட்டு, நேற்று இரண்டாவது நாள் விழாவில் பங்கேற்றார்.
அப்போது ரஜினி பேசியதாவது:
நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லோருமே அண்ணன் தம்பிங்க மாதிரிதான். இந்த அண்ணன் தம்பிங்க அடிச்சிக்கிறதுனால எந்த நன்மையும் இல்லே.
பாருங்க... அரசியல் என்பது மிகப்பெரிய சமுத்திரம் மாதிரி. நம்ம சினிமா ஒரு சின்ன குளம் மாதிரி. ஒரு சமுத்திரத்தாலேயே தன்னோட பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாத போது, அதை இந்த சின்னக் குளம் தீர்த்து வெச்சிட முடியுமா?
அதனால அரசியலை விட்டுடுங்க... சினிமாக்காரங்க சினிமாக்காரங்களா ஒத்துமையா இருப்போம். இதை சாக்கா வெச்சிக்கிட்டு ஜனங்க பாவம் சண்டை போட்டுக்கக் கூடாது. அவங்க கஷ்டப்படக் கூடாது. அதுதான் முக்கியம்.
கன்னட திரையுலகுக்கு நான் சொல்லிக்க விரும்பறதெல்லாம், நல்ல சினிமா, நாவல்களை அடிப்படையாகக் கொண்ட சினிமா எடுங்க. தா ரா சு, இந்திரா போன்ற இலக்கியவாதிகளின் படைப்புகளை மையமா வச்சி எவ்வளவோ நல்ல படங்கள் தர முடியும். முயற்சி பண்ணுங்க.
குவெம்பு, ஷிவ்ராம் காரத் மற்று பெண்ட்ரே போன்ற சிறந்த இலக்கியவாதிகளின் படைப்புகளை நல்ல படங்கள் எடுக்க பயன்படுத்திக்குங்க. இத்தனை வருஷமா இதையெல்லாம் ஏன் நீங்க செய்யலேன்னு புரியல. அதுல எனக்கு கொஞ்சம் வருத்தம்தான்.
ஒரு ரசிகனா, கலைஞனா எல்லா மொழிகள்லேயும் உள்ள சிறந்த இலக்கிய படைப்புகளை திரைப்படங்களாக எடுக்கப்படணும் என்று விரும்புகிறேன்.
எனக்கும் ஒரு கன்னடப் படத்துல நடிக்கணும்னு ஆசையிருக்கு. அப்படி நடிச்சா, தளவாய் முத்தன்னா பாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் அந்த கேரக்டர். எனக்கு ரொம்ப பிடிச்ச பாத்திரமும் கூட. ஆனால் இந்தப் படத்தை எப்போ பண்ணுவேன், எந்த நேரத்தில் அதற்கு கடவுள் உத்தரவு வரும்னு தெரியல... பார்க்கலாம் என்றார் ரஜினி.
விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் முடியும் வரை கிட்டத்தட்ட 3 மணி நேரம் அரங்கிலேயே இருந்தார் ரஜினி. விழாவில் நடிகை லட்சுமி, நடிகர் பிரபு தேவா உள்ளிட்ட கலைஞர்களை ரஜினி கெளரவித்தார்.
நன்றி
- தட்ஸ்தமிழ்
ரஜினியை காங்கிரஸில் சேர்க்க முயற்சித்தோம்:ஈ.வி.கே.எஸ்.
2 comments
காங்கிரஸ் கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிகவை சேர்க்க முயற்சி நடக்கிறதா? என்று கேட்டதற்கு, மத சார்பின்மையில் நம்பிக்கை உள்ள அனைத்து கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டும் என்று மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
சத்தியமூர்த்தி பவனில் தமிழக மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்தை சந்தித்த பின் வெளியில் வந்த மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘விடுதலைப்புலிகளையோ, விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகளையோ காங்கிரஸ் ஆதரிக்காது. சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தோம்.
அதில் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது போதாது என்பது எங்கள் கருத்து. காங்கிரசை திருப்திப்படுத்தவே தன்னை கைது செய்திருப்பதாக வைகோ, யாரையோ திருப்திப்படுத்த கூறுகிறார் என்று தெரிவித்தார்.
அவரிடம், விஜயகாந்தை காங்கிரஸ் கூட்டணியில் சேர்க்க முயற்சி நடக்கிறதா? என்று கேட்டதற்கு, ’முன்பு கூட ரஜினிகாந்தை காங்கிரசுக்கு ஆதரவாக சேர்க்க வேண்டும் என்று எதிர்பார்த்தோம். அது நடக்காமல் போய்விட்டது.
மத சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் காங்கிரஸ் கூட்டணிக்கு வரவேண்டும். ஆனாலும் கூட்டணியில் இருக்கும் யாரையெல்லாம் நீக்குவது, யாரையெல்லாம் புதிதாக சேர்ப்பது என்பதை காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்யும்’ என்று தெரிவித்தார்.
நன்றி
நக்கீரன்
17 ஆண்டு பழைய ரஜினி படம், இப்போது தமிழில்
0 comments
ஒருபக்கம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா… இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இடையில் 'அரசன்- தி டான்' என்ற வாசகங்கள் பொறித்த போஸ்டர்கள் சென்னை நகரம் முழுக்க கலக்கி வருகின்றன இந்த ஒரு வாரமாக...
ரஜினி எப்போது இந்த 'புதிய படத்தில்' நடித்தார் என்ற கேள்வியோடு ரஜினி ரசிகர்கள் பல இடங்களிலும் மேல் தகவலுக்காக விசாரித்த வண்ணமிருந்தனர். ஆனால் ஒருவருக்கும் விஷயம் தெரிந்தபாடில்லை. அந்த அளவு ரகசியம் காத்து வந்தார் இந்தப் படத்தின் 'தயாரிப்பாளர்' குளஞ்சியப்பன்.
அவரிடம் விசாரித்தோம். அவர் கூறியதிலிருந்து...
தொன்னூறுகளின் ஆரம்பத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான இந்திப் படமான 'கூன் கா கர்ஸ்' ('ரத்தத்தின் கடன்') தான் இந்த 'அரசன்-தி டான்'.
இந்தப் படத்தை அரசன்- தி டான் என தமிழில் வெளியிடுகிறோம். ரஜினி சாரின் மிகச்சிறந்த ஆக்ஷன் காட்சிகள் மக்களைக் கவரும் என்பதாலும், அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதாலும் இந்தப் படத்தை இப்போது வெளியிடுகிறோம்.
இந்தப் படத்துக்கு ஒரு பக்கம் ஒபாமா, மறுபக்கம் ரஜினி சார் படங்களை வைத்து பெரிய அளவில் போஸ்டர்கள் அடித்திருந்தோம். இன்னும் பிரமாண்டமாக பேனர்கள் வைக்கப் போகிறோம். ஒரு புதுப்படத்துக்கான அத்தனை ஏற்பாடுகளுடனும் இந்தப் படத்தை வெளியிடுகிறோம்.
சரி… இந்தப் படம் ஒரு மொழிமாற்றுப் படம் என்பதைச் சொல்லி விட்டீர்களா ரசிகர்களிடம்?
இது அவர்களுக்கே தெரியும் (!!!!). நாங்கள் ரசிகர்களை ஏமாற்றவில்லை. இந்தப் படத்தை அவரது தீவிர ரசிகர்கள் நிச்சயம் பார்த்திருப்பார்கள்.
இன்னொன்று விரைவில் பிரஸ் மீட் வைத்து இந்தப் படம் குறித்து அறிவிக்கப் போகிறோம். அப்போது விரிவாக சொல்லிவிடுவேன், என்றார். மார்ச் மாதம் படம் வெளியாகிறதாம்.
முகுல் எஸ் ஆனந்த் (குதா கவா போன்ற ஹிட் படங்களைக் கொடுத்தவர்) இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த், வினோத் கன்னா, சஞ்சய் தத் என மூன்று ஹீரோக்கள். இந்திப் படம் என்பதால் வினோத் கன்னாவுக்கு கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் இந்தப் படத்தில்.
டிம்பிள் கபாடியா, கிமி கட்கர் மற்றும் சங்கீதா பிஜ்லானி என மூன்று நாயகிகள். வில்லனாக காதர் கான் நடித்திருந்தார். படத்தின் கதை பக்கா மசாலாவாக இருந்தாலும் சுவாரஸ்யமானது.
தளபதி படம் வெளியான காலத்தில் தயாரான படம் இது. எனவே ரஜினியின் லுக்ஸ் தளபதி படத்தில் இருந்ததைப் போலவே இந்தப் படத்திலுமிருக்கும்.
நன்றி
- தட்ஸ்தமிழ்