
நேற்று மேற்கு வங்கத்தில் உள்ள காவல் நிலையம் மீது மாவோயிஸ்டுகள் அதிரடி தாக்குதல் நடத்தி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்களையும் படுகொலை செய்துள்ளனர் மேலும் காவல் நிலையத்தில் இருந்த ஆயுதங்களையும் கொள்ளையடித்து உள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்த மாநிலத்தில் பதட்டம் நிலவி வருகிறது.
நன்றி
-rediff.com
Headline
போலீஸ் நிலையம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் - வீடியோ
3 commentsதீபாவளி திருடர்கள் - பொது மக்களே உஷார் !
0 comments
தீபாவளி சீசன் திருடர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை நகருக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பொருட்கள் வாங்கச்செல்லும் பொதுமக்களை உஷாராக இருக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இதனால் தீபாவளி பண்டிகை இப்போதே களைகட்ட தொடங்கி விட்டது. தீபாவளி போனஸ் பணத்தில் பொதுமக்கள் புத்தாடைகளும், நகைகளும் வாங்கி குவித்தவண்ணம் உள்ளனர். இதனால் கடைகளில் தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் கூட்டத்தில் புகுந்து பொருட்களையும், நகைகளையும் திருடும் தீபாவளி சீசன் திருடர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை நகருக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பஸ்களிலும், ரெயில்களிலும் பயணம் செய்யும் பொதுமக்களிடம் பணத்தை அபேஸ் செய்யும் `பிக்பாக்கெட்' கொள்ளையர்களும் அதிகளவில் நடமாடுகிறார்கள். இதனால் சென்னை நகரில் மக்களின் உடைமைகளை காப்பாற்றுவதற்காக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். தியாகராயநகர், புரசைவாக்கம், பூக்கடை, மைலாப்பூர், வண்ணாரப்பேட்டை போன்ற மக்கள் கூடும் இடங்களில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தியாகராயநகரை பொறுத்தமட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்புக்காக 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கமாண்டோ படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100 பெண் போலீசார் கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சுற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விசேஷ போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 9 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
துணை கமிஷனர் சம்பத்குமார், உதவி கமிஷனர் கண்ணபிரான் ஆகியோர் தலைமையில் ரோந்து படை ஒன்றும் ரோந்து சுற்றி வருகிறது. தீபாவளி திருடர்களின் புகைப்படங்கள் சென்னை நகரில் முக்கியமான இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக டிஜிட்டல் பேனரில் வைக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு வாங்கும் நகை போன்ற பொருட்களை திருடர்களிடம் பறிகொடுத்துவிடாமல் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை தீபாவளி திருடர்கள் 15 பேரை போலீசார் வேட்டையாடி பிடித்துள்ளனர். அவர்களில் 4 பேர் பெண்கள் ஆவார்கள்.
பிக்பாக்கெட் கொள்ளையர்களில் அதிகளவில் பெண்களும் இடம் பெற்றுள்ளனர். சிலர் கைகுழந்தைகளோடு சுற்றுகிறார்கள். பஸ்சில் பயணம் செய்யும்போது கைக்குழந்தையோடு நிற்கும் பெண்களிடம் இரக்கம் காட்டாமல் உஷாராக இருப்பது நல்லது.
நன்றி
-தினதந்தி
வடிவேலுவின் பிக்பாக்கெட்
சென்னையில் பரபரப்பு நைஜீரிய நபரின் போலி பரிசு மோசடி உஷார்...
5 comments
சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் நகரைச் சேர்ந்த சாத்தையா வயது 55 என்பவர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
நான் குவைத்தில் வேலை பார்த்து லட்சக்கணக்கில் சம்பாதித்தேன். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். எனது செல்போனுக்கு சிலமாதங்களுக்கு முன்பு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், இங்கிலாந்து நாட்டின் “பி ஓல்டு நோக்கியா ட்ரஸ்ட்” நடத்திய பரிசு குலுக்கலில் உங்கள் செல்போன் நம்பருக்கு 5.5 பவுண்டு (ரூ.12 1/2 கோடி) பரிசு விழுந்துள்ளது. உங்களிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் என்று இ-மெயில் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொண்டபோது பரிசு தொகையை பெற ரூ.50 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தவேண்டும் என்றனர். அதன்படியே அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் பணம் செலுத்தினேன். அதே போல பணத்தை கொண்டு வர சுங்கவரி செலுத்த வேண்டும், அனுமதி பெற வேண்டும் என்று ரூ.13 லட்சம் வரை வங்கி கணக்கில் கட்ட சொன்னார்கள். அவ்வளவு பணத்தையும் சிறிது சிறிதாக கட்டினேன். பரிசு பணம் வந்தபாடில்லை.
பரிசு தருவதாக சொன்ன நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். அவர் பெயர் ஹாரீஸ் ஹாட். இங்கிலாந்தில் இருப்பதாகவும், எங்கள் நிறுவன ஊழியர் பணத்துடன் உங்கள் வீட்டிற்கு வருவார் எனக்கூறினார். அதன்படி வெளிநாட்டு வாலிபர் ஒருவர் வீட்டிற்கு வந்து பெரிய பார்சல் ஒன்றை தந்துவிட்டு சென்றார். அதை திறந்து பார்த்தால் உள்ளே ரூபாய் நோட்டு அளவில் கத்தரிக்கப்பட்ட கருப்பு நிற காகிதங்கள் இருந்தது. 40 கட்டுகளாக கட்டி வைத்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட செல்போனில் தொடர்பு கொண்டபோது அதில் புதுவிதமான ரசாயன திரவத்தை ஊற்றினால் அவை அனைத்தும் நல்ல ரூபாய் நோட்டாக மாறும். காகிததாளின் மதிப்பு ரூ.12 1/2 கோடியாகும். எனவே ரசாயன திரவம் வாங்கி அனுப்புவதற்கு ரூ,32 லட்சம் பணம் கட்டுங்கள் என்றார். சம்பந்தப்பட்ட நபர் என்னை மோசடி செய்ய எண்ணுகிறார். எனவே அவரிடம் இருந்து நான் கட்டிய ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தை மீட்டுத்தர வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார்.
தனிப்படை போலீசார் செல்போன் மூலம் துப்பு துலக்கினர். சாத்தையாவுடன் செல்போனில் பேசிய நபர் சென்னை மாடம்பாக்கம் அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம் பகுதியில் இருந்து பேசி வருவதை கண்டுபிடித்தனர். அவர்களின் அங்க அடையாளத்தின்படி அங்குள்ள ஒரு பங்களா வீட்டில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த டேவிட் வில்சன் என்ற ஓரிபாஜி (வயது 30). என்ற வாலிபரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 1 1/2 லட்சம் அமெரிக்க டாலர், ரசாயன திரவப்பாட்டில்கள், கருப்பு காகித கட்டுக்கள், லேப்டாப் கம்ப்யூட்டர் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டில் இருந்து தனது கூட்டாளி ஹாரீஸ் ஹாட் என்பவர் மூலமாக மோசடி தொழில் செய்து வருவதை ஒப்புக்கொண்டார். கூட்டாளியை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படை போலீசாரை கமிஷனர் ஜாங்கிட் பாராட்டினார். செல்போன் மூலமாக யாராவது பரிசு விழுந்துள்ளது என ஆசைவார்த்தை கூறினால் உடனடியாக போலீசில் புகார் செய்யுங்கள். மக்கள் யாரும் இதுபோன்ற அறிவிப்புகளை நம்பி ஏமாறாதீர்கள் என புறநகர் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்
நன்றி
-மாலை மலர்
& Net photos
ஈழ ஆதரவு துண்டு பிரசுரத்தால் 13 மாணவர்கள் கைது!!
0 comments
இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக ப.சிதம்பரத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்த 13 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சட்டக்கல்லூரியில் முதுகலை சட்ட படிப்பு படித்து வருபவர் ராஜீவ் காந்தி (வயது 28). இவர் முத்துக்குமார் எழுச்சி இயக்கத்தின் தலைவராக உள்ளார். சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் ப.சிரம்பரத்தை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவாக சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி கிராமத்தில் மாணவர்கள் மற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் 13 பேர் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதையும், அதற்கு காரணமான காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக துண்டு பிரசுரத்தை விநியோகித்தனர். அப்போது அங்கு வந்த காங்கிரசார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மீது கல்வீசி தாக்கினர். உடனடியாக போலீசார் பாதுகாப்பாக 13 மாணவர்களையும் அழைத்து சென்றனர்.
பின்னர் ஒவ்வொரு போலீஸ் நிலையமாக மாணவர்களை மாற்றி அழைத்து சென்றனர். நேற்று காலை மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் அனைவரும் 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். 13 பேர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே வேட்பாளர் ராஜீவ்காந்தி வேட்பு மனுதாக்கல் செய்தபோது அவரது பெயருக்கு காங்கிரசார் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் அவர்களது புகாரை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார். இதற்கிடையே ராஜீவ்காந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னையில் இருந்து சிவகங்கை சென்றுள்ளனர்.
நன்றி
-நக்கீரன்
தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி?
0 comments
தென்காசி அருகே மனித மாமிசம் சாப்பிடும் நபர்கள் நடமாடுவதாக பீதி கிளம்பியுள்ளது.
தென்காசி அருகேயுள்ள ஆய்க்குடியில் இருந்து சுரண்டைக்கு செல்லும் வழியில் கம்பிளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் யாரோ மர்ம மனிதன் இரவில் நடமாடுவதாகவும், அவன் மனிதர்களை கடித்து தின்பவன் எனவும் பொதுமக்கள் இடையே சில நாட்களாக பேசப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த வாரம் கம்பிளி பள்ளி வாசல் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து ஊருக்கு வடக்கே உள்ள சப்பாணி முத்து கோவில் அருகில் இரவில் சென்றுக் கொண்டிருந்தபோது 40 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் அவரது கையை பிடித்துக் கடிக்க முயன்றானாம். உடனே பேச்சிமுத்து அங்கிருந்து தப்பியோடி வந்துவிட்டார்.
அடுத்த நாள் பகலில் அதே இடத்தில் ஆய்க்குடியை சேர்ந்த கோழிக்கடை மாரிமுத்து மகன் மூர்த்தி என்பவரது கையை பிடித்து மர்ம மனிதன் கடிக்க முயற்சி செய்தானாம்.
இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் யாரும் பிடிபடவில்லை. வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் இரவில் பிடித்து விசாரித்தனர். இதில் அவருக்கு தொடர்பு இல்லை என தெரிந்ததால் அவரை அனுப்பிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பேச்சிமுத்து கூறியதாவது, எனக்கு சொந்த ஊர் கம்பிளி. நான் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகின்றேன். ஒருநாள் நான் நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக மல்லராமக்குளக்கரையில் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது இரவு 9 மணி இருக்கும். ஒரு ஆலமரம் அருகே சென்றபோது ஒரு மர்ம ஆசாமி திடீர் என்று வந்து எனது கையை பிடித்து கடிக்க முயன்றான். அவனிடம் நீ யார் என்று கேட்டேன். அவன் பதில் கூறவில்லை. மேலும் எனது கையை பிடித்து இழுத்தான். நான் அவனை குளத்துக்குள் தள்ளிவிட்டு ஓடிவந்துவிட்டேன்.
இப்போது அதை நினைத்தாலும் பயமாக இருக்கிறது. இந்த சம்பவம் நடந்த மறுநாளே ஆய்க்குடியை சேர்ந்த மூர்த்தி என்பவரையும் இதே போல் தாக்கி உள்ளான். எனவே போலீசாருக்கு தகவல் கொடுத்தோம்.
அவர்கள் வந்து தேடினர். ஆனால் அவன் சிக்கவில்லை. அவன் மனித மாமிசத்தை உன்பவனாக இருக்கலாம் என்றார்.
இந்த சம்பவம் ஆய்க்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சிலர் இது வெரும் வதந்தியாக இருக்கும் என்று கூறுகின்றனர். இருப்பினும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இரவில் தனியாக வெளியில் வர பயப்படுகின்றனர்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
நாஞ்சில் சம்பத் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகவழக்கு பதிவு
0 comments
மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 1ஆம் தேதி அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பில் திருப்பூரில் இலங்கைத் தமிழர் பாது காப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய நாஞ்சில் சம்பத், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை கைது செய்ய திருப்பூர் போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாஞ்சில் சம்பத் சென்னையில் இருப்பதாகவும், அவரை கைது செய்ய திருப்பூர் போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி
நக்கீரன்
ஐகோர்ட்டு அருகே போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்
0 comments
சென்னை ஐகோர்ட் அருகே போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை உளவுப்பிரிவு ஏட்டு கவுரி வளவன் (வயது 40) சென்னை ஐகோர்ட்டு அருகே என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் ஒரு டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது நான்கைந்து பேர் இவன் போலீஸ்காரன்டா, இவனை அடித்து உதைங்கடா என்று கூச்சல் போட்டுக்கொண்டே ஓடி வந்து ஏட்டு கவுரி வளவனை சரமாரியாக அடித்து உதைத்தார்கள் என்று கூறப்படுகிறது.
வலி தாங்க முடியாத கவுரி வளவன் கீழே விழுந்ததும், தாக்குதல் நடத்தியவர்கள் ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் காயம் அடைந்த ஏட்டு கவுரி வளவன் சிகிச்சைக்காக அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் சட்டக்கல்லூரி போலீசில் வழக்கறிஞர்கள் மீது புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
நன்றி
நக்கீரன்
காயமடைந்த வக்கீல்களுக்கு 5ஆயிரம் உதவி!
0 comments
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சேதங்கள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஞானபிரகாசம் தலைமையில் ஒரு கமிட்டியை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்த கமிட்டி ஒரு மாதத்திற்குள் தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரை முருகன் ’மோதல் சம்பவத்தில் காயமடைந்த வக்கீல்களுக்கு மருத்துவ உதவிக்காக ரூ.5000 இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் 19.2.09 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக இரு தரப்புக்கும் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கண்டற்வதற்கான ஓய்வு பெற்ற நீதியரசர் ஞானப்பிரகாசம் தலைமையில் தமிழக அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதையொட்டி முதலமைச்சர் கலைஞர், அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள அமைச்சர் பூங்கோதை ஆகியோரை மருத்துவமனைகளுக்கு அனுப்பி காயமடைந்த இரு தரப்பும் பார்த்து வந்து முதலமைச்சரிடம் நிலைமைகளை விளக்கியதன் தொடர்ச்சியாக பின்வரும் அறிவிப்பினை முதல்வர் கலைஞர் அவையிலே வைக்கச்சொல்லியிருக்கிறார்கள்.
நீதியரசர் ஞானப்பிரகாசம் குழுவின் அறிக்கை வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் இடைக்கால உடனடி நிவாரணமாக காயம்பட்டவர்களுக்கு 5ஆயிரமும் வாகனங்கள் சேதம் அடைந்தோருக்கு அவற்றை பழுது பார்ப்பதற்காக அவரர்களுக்கு ஏற்ப இழப்பிற்கு ஏற்பவும் உதவித்தொகை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
நன்றி
- நக்கீரன்