Headline

Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

'வணங்கா மண்' கப்பலும் முதல்வரின் கடிதமும்!

0 comments


சிறிலங்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிவாரணக் கப்பலான 'கப்டன் அலி' ('வணங்கா மண்') தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைத் துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி கிடைக்காமல் கடந்த 10 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.
போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காகவே ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் நிவாரண நிதி திரட்டி, 884 தொன் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சேகரித்தனர்.

இவற்றை பிரான்சில் இருந்து 'கப்டன் அலி' என்ற 'வணங்கா மண்' கப்பல் மூலம் கடந்த 7 ஆம் நாள் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.

நிவாரணப் பொருட்களுடன் சென்ற கப்பலை சிறிலங்கா அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து, 'வணங்கா மண்' எங்கு செல்வது என தெரியாமல் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டு நிற்கின்றது.

தற்போது சென்னை அருகே 5 கடல் மைல் தூரத்தில் அனைத்துலக கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டு நிற்கின்றது.

இக்கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு வரவேண்டுமானால், இந்திய மத்திய அரசின் முறையான அனுமதி பெறவேண்டும். அதற்கான அனுமதி கிடைக்காததால் துறைமுகத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கப்பலில், 15 பணியாளர்களும் கப்பலில் இருந்த உணவுப் பொருட்களைக்கொண்டு நாட்களை நகர்த்திக்கொண்டுள்ளனர்.


மனித நேய அடிப்படையில், மத்திய அரசு தலையிட்டு நிவாரணக் கப்பல் சிறிலங்கா செல்ல மத்திய அரசு உதவ வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி, வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதினார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதுடில்லி சென்று எம்.எஸ்.கிருஷ்ணா உள்ளிட்டோரை சந்தித்து வலியுறுத்தினார்.

நிவாரணக் கப்பல் சிறிலங்காவுக்கு அனுப்ப தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 'வணங்கா மண்' கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் நுழைய மத்திய அரசு அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் நுழையவில்லை.

இது தொடர்பாக சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:

நிவாரணக் கப்பல் இன்னும் அனைத்துலக கடற்பரப்பின் எல்லையில் தான் நிற்கிறது. மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றது.

just sailing through Pictures, Images and Photos

சென்னை துறைமுகத்துக்குள் வரவில்லை. சென்னை துறைமுகத்துக்குள் வர வேண்டும் என்றால் கப்பலில் உள்ள சரக்குகளுக்கான முறையான சான்றிதழ், அனுமதி கடிதம் போன்ற ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

இதற்குரிய முகவர் கப்பலில் இடம் கேட்டு வேண்டுகோள் கடிதம் கூட தரவில்லை. குடிநீரின்றி தவிக்கும் நிலை இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் நாள் குடிநீர் வழங்கினோம். இது மனிதாபிமான அடிப்படையிலான உதவிதான்.

தேவைப்பட்டால் மருத்துவம் உள்ளிட்ட அவசியமான உதவிகளை செய்ய துறைமுகம் தயாராகவே உள்ளது என்றார்.

சென்னைக்கு அருகே 5 மைல் தூரத்துக்கு நிவாரணக்கப்பல் வந்து இன்றுடன் 11 நாட்கள் ஆகின்றது. ஏற்கனவே 7 ஆம் நாள் புறப்பட்ட இக்கப்பல் 15 நாட்களாக சுற்றிக்கொண்டுள்ளது. கப்பலில் குறித்த காலத்துக்குத்தான் உணவுப் பொருட்கள் இருக்கும்.

நாட்கள் ஆக, ஆக கப்பலில் உள்ள பணியாளர்கள் பசிக்கு உணவு கிடைக்காமல் திண்டாடும் அபாயம் உள்ளது.

இந்திய அரசு துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பு என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'தினமலர்' தெரிவித்துள்ளது.

நன்றி
-புதினம்


கலைஞர்- ஈழத்தமிழருக்காக 23ல் பொதுவேலைநிறுத்தம்!

6 comments



இலங்கையில் நிரந்த போர் நிறுத்தம் கோரி வரும் 23ம் தேதி தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


மேலும் இப்பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து கட்சியினரும் அமைதியான முறையில் கலந்துகொள்ள வேண்டும்.


மத்திய அரசு உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் இன்று எழுதியுள்ள உடன்பிறப்புகளுக்கான கடிதத்தைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும்.

ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக,

தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23.4.2009 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது இலங்கை அரசுக்கான கண்டனம் மாத்திரமல்ல, இலங்கையில் செத்துக் கொண்டிருக்கிற தமிழ் இனத்துக்காக விடுகின்ற கண்ணீரும்கூட என்கிற உணர்வோடு இந்த வேலைநிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்ள மீண்டும் வேண்டுகிறேன் என்று குறீப்பிட்டுள்ளார்.

நன்றி
- நக்கீரன்


சட்டம் 356ன் படி தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வக்கீல்கள் கோரிக்கை

6 comments



தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு 356 வக்கீல்கள் தந்தி அனுப்பியுள்ளனர்.

கடந்த 19ம் தேதி உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதால் மாநில அரசை சட்டம் 356ன் படி கலைக்க வேண்டும் என்று கோரி 356 வழக்கறிஞர்கள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு தந்தி அனுப்பியுள்ளனர்.

கருணாநிதிக்குக் கண்டனம்:

இதற்கிடையே இன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்ட குழு தலைவரும், உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவருமான பால் கனகராஜ் கூறுகையில், வக்கீல்கள் போராட்டம் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கருத்து கேட்க பட்டபோது, நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர் பிரச்சனையாக இது உருவாகி இருப்பதாக கருத்து கூறியுள்ளார்.

இது பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியாகும். போலீசாரை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறோம். நீதிபதிகளோடு எந்த பிரச்சனையும் இல்லை. இந்நிலையில் முதல்வர், நீதிபதி களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பிரச்சனை என்று கூறி திசை திருப்ப முயன்றிருப்பது கண்டனத்திற்குரியது.

உயர்நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் வசதிக்காக இரண்டு சட்ட உதவி மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. வழக்குகள் தொடர்பான உதவிகளை பொதுமக்கள் இந்த மையங்களின் மூலம் பெறலாம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

நன்றி
-தட்ஸ்தமிழ்


கலைஞர் டைரி:- என் படத்தை எரிக்கிற அளவுக்கு என்ன வஞ்சனை செய்தேன்?

2 comments




ராமச்சந்திரா மருத்துவமனை அனுபவம் குறித்து முதல்வர் கருணாநிதி எழுதி வைத்துள்ள டைரி குறிப்புகளை ஐந்தாவது நாளாக வெளியிட்டுவருகிறார்.


18-2-09:


அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து ஏடுகளில் பாராட்டுகள் வந்திருந்தன. எதிர்க்கட்சிகள் ஏதாவது குறை சொல்ல வேண்டுமே என்பதற்காக ஒன்றிரண்டை சிரமப்பட்டு தேடி அறிக்கையாக கொடுத்திருந்தார்கள். சிலர் குறை கூற முடியாமல், தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை என்று கூறி, மறைமுகமாக அது நல்ல அறிக்கைதான் என்பதை ஒப்புக்கொண்டார்கள். ஜெயலலிதா நீண்ட அறிக்கை விடுத்திருந்தார். அவரும் தேர்தலை மனதிலே கொண்டு தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை என்று கூறியிருந்தார்.


‘திருமணத்திற்காக எடுத்த பட்டுப் புடவைதான்’ என்ற தலைப்பில் எதிர்க்கட்சியினர் தெரிவித்திருந்த குறைபாடுகளுக்கு விளக்கங்களை எழுதினேன்.


டெல்லி சென்ற இலங்கை தமிழர் நல உரிமை பேரவை துணைக் குழுவினர் சோனியா காந்தியை சந்தித்து மனு கொடுத்துவிட்டு, அங்கிருந்து தொலைபேசி மூலமாக தகவல் கூறினர்.


மக்களவையில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்திருப்பதாகவும், முல்லைத்தீவு பகுதியில் சிக்கியுள்ள 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்கான உதவிகளை செய்ய இந்தியா தயாராக இருப்பதாக கூறியதாகவும் எனக்கு தகவல் கூறினார்கள்.


ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நீதி மன்றத்தில் தாக்கப்பட்டது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் கே.பி. ஜெயினை தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்த முகோபாத்யாயாவிடம் வருத்தம் தெரிவிக்கக் கூறினேன்.


அந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகளை அழைத்து கேட்டபோது, சம்பவம் தொடர்பாக சட்டக் கல்லூரி போலீசார் 20 வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும், இரவு 10.30 மணி அளவில் வழக்கறிஞர் கினிலியோ இம்மானுவேல் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள்.


புலனாய்வுத் துறை ஐ.ஜி.யை அழைத்து, சுவாமியை தொடர்பு கொண்டு, உயர்நீதிமன்ற சம்பவத்திற்காக நான் வருத்தம் தெரிவித்ததாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறச் செய்தேன்.


சில நாட்களாக சரியான உறக்கம் இல்லாததாலும், வலது காலில் எரிச்சல் இருந்ததாலும் நரம்பியல் நிபுணர் ஏ.வி. சீனிவாசன் வரவழைக்கப்பட்டார். அவர் பழைய மருந்துகள் சிலவற்றை மாற்றி விட்டு புதிய மருந்துகள் கொடுத்தார்.
மார்த்தாண்டம் குழுவினர் அறுவை சிகிச்சை புண்ணை பரிசோதித்து விட்டு நன்றாக ஆறி வருவதாக கூறினர்.


19-2-09:


இன்று காலையிலிருந்து உடல் நிலை நன்றாக இருந்தது. டெல்லியிலிருந்து வரவழைக்கப்பட்ட முதுகுத்தண்டு கவசத்தை பொருத்தி சரி பார்த்தார்கள். அதற்காக முதன் முதலாக உட்கார வைக்கப்பட்டேன்.


பிற்பகலில் மருத்துவமனைக்கு வந்த செய்திகள் சரியாக இல்லை. உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல். தொலைபேசி வாயிலாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன.


சுப்பிரமணியன் சுவாமி தாக்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 20 வழக்கறிஞர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதை தவிர மீதமுள்ள வழக்கறிஞர்கள் சரண் அடைவதாக கூறி, காவல் நிலையத்திற்கு வந்த பிறகு ‘நாங்கள் கைதாக தயாராக இருக்கிறோம். ஆனால் வழக்கறிஞர்களை தாறுமாறாக பேசிய சுவாமி மீதும், அவருடன் வந்த ராதாராஜன் மீதும் நாங்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


காவல் துறையினர் அதற்கு ஒப்புக்கொள்ளவே, வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் புகார் கொடுத்துள்ளார். போலீசார் அதனை பெற்று வழக்கு பதிவு செய்து நகல் கொடுத்துள்ளனர்.


‘உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டோம். இப்போது கைதாக வேண்டியவர்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என காவலர்கள் கேட்டபோது, ‘சுவாமியை வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தால்தான் நாங்கள் கைதாவோம்’ என்று புதிய கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதையட்டித்தான் வாக்குவாதம் தொடங்கி மோதலில் முடிந்தது.


நிலைமை மோசமாவதை அறிந்து நானே புறப்பட்டு செல்லலாமா என்று யோசித்தேன். மருத்துவர்கள் கண்டிப்பாக அந்த நிலையில் செல்லக் கூடாது என்றார்கள்.



தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளரை உடனடியாக நீதி மன்றத்திற்கு சென்று தலைமை நீதிபதியை சந்தித்து பேசும்படி கூறினேன். அவர்களும் அவ்வாறே சென்றார்கள். டி.ஜி.பி., கமிஷனர் ஆகியோரையும் போகச் சொன்னேன். கமிஷனர் அங்கேதான் இருப்பதாக தகவல் கிடைத்தது.


தலைமை நீதிபதியுடன் தொலைபேசியில் பேச முயன்றேன். போன் கிடைக்கவில்லை. ஒரு கடிதம் எழுதினேன். எதிர்பாராத சம்பவம் நடைபெற்றுவிட்டது.

இது பற்றி எடுத்துக் கூற தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை அனுப்பியுள்ளேன். தாங்கள் என்னைப் பார்க்க விரும்பினால் ஆம்புலன்சில் வரத் தயாராக இருக்கிறேன் என்று எழுதி பேக்ஸ் மூலம் அனுப்பினேன்.



தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் நீதி மன்றத்திலிருந்து போன் செய்து, தலைமை நீதிபதி இதுபற்றிய வழக்கினை சி.பி.ஐ.க்கு அனுப்ப வேண்டுமென்று எண்ணுவதாக கூறினர். உடனடியாக அதற்கு ஒப்புக் கொள்ள சொன்னேன். அதையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.


இதற்கே இரவு 10 மணியாகிவிட்டது. தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., கமிஷனர், புலனாய்வுத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து நீதிமன்ற நிகழ்ச்சிகளை பற்றி விளக்கினார்கள். அடுத்த நாள் சட்டமன்றத்தில் நிலைமைகளை விளக்கி அறிக்கை வைக்க இரவே அறிக்கை தயாரித்தேன்.


20-2-09:


இன்றைய ஏடுகளில் நீதிமன்ற நிகழ்ச்சிகள் அதிக இடம் எடுத்துக் கொண்டிருந்தன. எதிர்க்கட்சி தலைவர்கள் அறிக்கை கொடுத்திருந்தார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் 356வது பிரிவை பயன்படுத்தி, ஆட்சியை கலைக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்திருந்தார்.


சட்டப் பேரவையிலும் நீதி மன்ற சம்பவங்கள் பெரிதாக எழுப்பப்பட்டது. கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரினர். விதி இடம் கொடுக்காது என்று கூறியும் கேட்கவில்லை. அ.தி.மு.க. வினர் வெளிநடப்பு செய்தனர். பா.ம.க. தொடர்ந்து குரல் எழுப்பியதால் வெளியேற்றப்பட்டனர். சட்டத்துறை அமைச்சர் விரிவான அறிக்கை படித்த போதிலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் கூச்சல், குழப்பம் ஏற்படுத்த முயற்சித்ததால் வெளியேற்றப்பட்டனர்.


20ம் தேதி ஏடுகளில் கொட்டை எழுத்து செய்தி வந்திருந்தது. ஜெயலலிதா ஒரு திருமண விழாவில் பேசியதை அனைத்து ஏடுகளுமே காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு என்று தலைப்பிட்டு வெளியிட்டு இருந்தன.


காங்கிரஸ் கட்சியை பிடிக்காமல் இந்திய கம்யூனிஸ்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் தி.மு.க. அணியிலிருந்து பிரிந்து ஜெயலலிதா வீட்டிற்கு சென்று பேச்சு நடத்தியிருக்கிறார்கள். அந்த நிலையில், ஜெயலலிதா திடீரென்று காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு என்ற பெயரில் பேசியிருந்தார்.


சைவப் பெருமாட்டி உப்புக் கண்டத்தை பறி கொடுத்ததை போல இரண்டு கம்யூனிஸ்ட் காரர்களாலும் என்ன நடக்கிறது என்றே புரிந்து கொள்ள முடியாத நிலை. அதைப்பற்றி அன்று நான் அறிக்கை எழுதி முடிக்கவே நீண்ட நேரம் ஆகிவிட்டது.


மாலையில் தொலை ஒளிபரப்பு மூலமாக பாடி மேம்பாலத்தினை திறந்து வைத்தேன். அதில் பேசும்போது, திமுக அரசை கவிழ்க்க நினைக்கும் சதிகாரர்களின் திட்டத்திற்கு பயப்படாமல் நமது பயணத்தை தொடர்வோம் என்று கூறினேன்.



அறுவை சிகிச்சை முடிந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது. முதுகு தண்டு கவசம் பொருத்தப்பட்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்து, அறை உள்ளேயே சிறிது நேரமும், பின்பு அந்த ஏழாவது தளத்தையும் சுற்றி வந்தேன். பார்வையாளர்களில் சிலரை நாற்காலியில் அமர்ந்தவாறே சந்தித்தேன்.



காவல்துறை அதிகாரிகளை அழைத்து உயர் நீதிமன்றத்தில் அன்று என்ன நிலைமை என்று கேட்டேன். பதற்றம் நீடிப்பதாகவும், நீதிபதி உத்தரவின் பேரில் போலீசார் யாரும் அங்கே வரவில்லை என்றும், வழக்கறிஞர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, என் உருவப்படத்தையும் சிலர் எரித்தார்கள் என்றும், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டார்கள் என்றும் விளக்கினார்கள்.


என் படத்தை எரிக்கிற அளவுக்கு நான் வழக்கறிஞர்களுக்கு என்ன வஞ்சனை செய்தேன் என்று யோசிப்பதிலேயே இரவு முழுதும் கழிந்தது. விடிந்து ஏடுகளில் வழக்கறிஞர்கள் என் படத்தை கொளுத்தியதாக வந்த செய்தி கண்டதும் வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொல்லும் பாணியில், வாழ்க வழக்கறிஞர்கள்என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்.

நன்றி
நக்கீரன்


இலங்கைத் தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க, என் உள்ளம் தாங்கித்தானே ஆக வேண்டும்:கலைஞரின் டைரி குறிப்புகள்

3 comments


ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிசிச்சைகள், அனுபவங்களை முதல்வர் தொடர்ந்து எழுதி வருகிறார்.


அவர் வெளியிட்ட மருத்துவமனை டைரி குறிப்புகள்:


6-2-2009: மாயவரம் காந்தி என் இளமைக் கால நண்பர். கழகத் தோழர். அவர் இப்போது இல்லை. காந்திக்கு சம்பத், கருணாநிதி என்று இரண்டு புதல்வர்கள்.


சம்பத் இப்போது பால் வளத் துறை அமைச்சரின் உதவியாளர். அவர் மகளுக்கு என் இல்லத்தில் இன்று திருமணம் செய்து வைப்பதாக ஒப்புக் கொண்டிருந்தேன். மணமக்களுடன் மருத்துவமனைக்கே வந்து திருமணத்தை நடத்தி வைக்கக் கேட்டுக் கொண்டார். படுக்கையில் இருந்தவாறே நடத்தி வைத்தேன்.


என் துணைவியர் தயாளு, ராஜாத்தி ஆகியோரும், மகள்களும் செவிலியர்களாக இருந்து கவனித்துக் கொண்டார்கள். செல்வி பெங்களூரையே மறந்து விட்டு இரவு முழுவதும் தூங்காமல் மருத்துவமனையிலேயே தங்கி என் கோபத்தையெல்லாம் தாங்கிக் கொண்டது.


கனி நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் எனக்குத் துணையாக இருந்தது. என் மருமகள்கள் பகல் நேரங்களில் மருத்துவமனை வந்து மாமியாருக்கு உதவியாய் இருந்தனர். மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், மு.க. தமிழரசு ஆகியோரும் மருத்துவமனையிலே தங்கியிருந்தனர்.


முதுகுத் தண்டில் ஊசி போடுவதற்காக இடையில் நிறுத்தப்பட்டிருந்த மாத்திரையை மீண்டும் கொடுக்கத் தொடங்கினார்கள். மதியம் 2 மணி அளவில் கடுமையான வலி. பொறுத்துக்கொள்ள இயலவில்லை. மீண்டும் ஒரு முறை எம்.ஆர்.ஐ. எம்.ஆர்.ஐ. எடுக்கப்பட்டது.


எல்.2 எல்.3 இடையே விலகியிருந்த டிஸ்கின் நீளம் மேலும் அதிகமாகியிருந்தது. அதுதான் வலி அதிகமானதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் விளக்கினர். அதனை குணம் ஆக்குவதற்கு முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை ஒன்றுதான் வழி என்றார் டாக்டர் மார்த்தாண்டம். டாக்டர் மோகன்தாசை அழைத்து கேட்டபோது, அவரும் அதையே சொன்னார்.


குடும்பத்தாரை அழைத்து என் வயதை எண்ணிடும்போது இந்த அறுவை சிகிச்சை மிகவும் அபாயகரமானது. ஆனால் வலியைப் போக்க வேறு வழியில்லை என்று மருத்துவர்கள் கூறினர். குடும்பத்தார் இந்த விஷயங்களையெல்லாம் என்னிடம் சொல்லாமல், அறுவை சிகிச்சை மிகவும் சாதாரணமானது; பயப்படுவதற்கு ஒன்றுமில்லை; செய்து கொள்ளலாம் என்று என்னை சமாதானப்படுத்தினர்.


குறிப்பாக கலாநிதி மாறன் ‘இதிலே பயப்படுவதற்கு ஒன்றுமில்லை தாத்தா; செய்து கொள்ளலாம்’ என்று அவருடைய தந்தையைப் போலவே கூறினார். அவர்களின் வாய்கள்தான் எனக்கு சமாதானம் கூறின. என்றாலும் அத்தனை பேருடைய முகங்களையும் ஒரு முறை பார்த்தவுடனேயே உண்மையைப் புரிந்து கொண்டேன்.


நான் ஏதாவது விசாரித்தால், ஒவ்வொருவருடைய விழிகளிலிருந்து விழ கண்ணீர் காத்திருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. சாதாரண அறுவை சிகிச்சைதானே, ஏன் பயப்படுகிறீர்கள் என்று நானே அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, ‘அறுவை சிகிச்சைக்குத் தயார். எப்போது வைத்துக் கொள்ளலாம்?’ என்றும் கேட்டேன்.


நரம்பியல் டாக்டர் ஏ.வி. சீனிவாசன், டெலி-மெடிசின் மூலமாக அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு அறுவை சிகிச்சை பற்றிய விவரங்களை அறிந்தார். இறுதியாக, டெல்லியிலே உள்ள டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வாலை வரவழைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.


தயாநிதி மாறன் உடனடியாக, மத்திய அமைச்சர் அன்புமணியிடம் தொடர்பு கொண்டு, டாக்டர் ஜெய்ஸ்வாலை சென்னைக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டார். அடுத்த நாளே டாக்டர் ஜெய்ஸ்வாலை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக அன்புமணி தகவல் அனுப்பினார்.


7-2-2009: அன்று மாலை டெல்லியிலிருந்து டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் ராமச்சந்திரா மருத்துவமனை வந்தார். அவரும் டாக்டர் மார்த்தாண்டமும் வலி எதுவரை பரவியுள்ளது என்று கேட்டனர். இது தை மாதம் அல்லவா, எனவே என் தை (தொடை) வரை நீடிக்கிறது என்று சிரித்துக் கொண்டே கூறினேன்.


டாக்டர் மார்த்தாண்டம் தலைமையில் டாக்டர் தணிகாசலம் (இருதய நிபுணர்), டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் (முதுகெலும்பு நிபுணர்), டாக்டர் கோபால் (குடும்ப டாக்டர்), டாக்டர் கார்த்திக் கைலாஷ் (முதுகெலும்பு நிபுணர்), டாக்டர் ஏ.எஸ். நாயுடு (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் மகேஷ் வகாமுடி (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் ஏ.வி. சீனிவாசன் (நரம்பியல் நிபுணர்), டாக்டர் கே.ஆர். பழனிசாமி (குடல் மற்றும் இரைப்பை நோய் நிபுணர்), டாக்டர் ராஜ் பி. சிங் (நுரையீரல் நிபுணர்), டாக்டர் மயில்வாகனன் (எலும்பு சிகிச்சை நிபுணர்), டாக்டர் சண்முகம் (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் பாஸ்கர் (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் சவுந்தரராசன் (சிறுநீரகவியல் நிபுணர்) ஆகிய 14 பேரைக் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது.


அறுவை சிகிச்சையை ராமச்சந்திரா மருத்துவமனையிலே 11ம் தேதி செய்யலாம் என்றும், ஜெய்ஸ்வால் 10ம் தேதியே சென்னை வந்துவிட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.


மத்திய உள் துறை அமைச்சர் ப. சிதம்பரம் மருத்துவமனைக்கு இன்று வந்திருந்தார். சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்கனவே என்னிடம் தேதி பெற்றிருந்தார். மருத்துவமனையில் இருந்தவாறே வீடியோ கான்பரன்ஸ் மூலம் நான் அடிக்கல் நாட்டவேண்டு மென்று கூறினார். நானும் ஒப்புதல் அளித்தேன்.


8-2-2009 : இலங்கைப் பிரச்சினையிலே மட்டுமாவது ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று எழுதியிருந்தேன். அந்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தியதோடு, என்னை சிலர் மிகவும் இழிவுபடுத்தி பேசியும், எழுதியும் இருப்பதை காலை ஏடுகளில் காண நேர்ந்தது. அவர்கள் தூற்றியிருப்பதை என் உடல் தாங்குகிறதோ இல்லையோ இலங்கைத் தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க, என் உள்ளம் தாங்கித் தானே ஆக வேண்டுமென்று எழுதினேன்.


ஜெயலலிதா விடுத்த நீண்ட அறிக்கையில் விவசாயிகளுக்காக கழக ஆட்சியில் குறிப்பாக நான் எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். ஜெயலலிதாவின் அறிக்கைக்கு விரிவாக பதில் எழுதி, ஏடுகளுக்கெல்லாம் அனுப்பச் செய்தேன்.


இதற்கிடையே, ஜெய்ஸ்வால் அறிவுரைப்படி, நரம்பின் செயல் திறனைக் கண்டறிவதற்கான சோதனை யை நரம்பியல் நிபுணர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் இன்று மேற்கொண்டார். இதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலானது.


தஞ்சை சுல்தான் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்தி, என் கைப்பட இரங்கல் செய்தி எழுதிக் கொடுத்தேன்.


மத்திய அமைச்சர் அன்புமணி வந்து உடல் நலம் விசாரித்தார்.


9-2-2009: தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு இதயத் துடிப்பு எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக ஒரு இயந்திரத்தை என் உடலிலேயே பொருத்திவிட்டார்கள். அது மறுநாள்தான் அகற்றப்பட்டது. இதயத் துடிப்பு சீராக இருக்க மாத்திரை தரப்பட்டது.


நிதித் துறை செயலாளரையும் அதிகாரிகளையும் மருத்துவமனைக்கு அழைத்து நிதிநிலை அறிக்கை தயாரிப்பது குறித்து அன்று விவாதித்தேன். காலை 10.45 மணிக்கு தொடங்கிய கூட்டம், நண்பகலைத் தாண்டியும் நீண்டது. டாக்டர்கள் வந்து பரிசோ தனைகளைச் செய்யவும் மாத்திரைகள் சாப்பிடவும் நேரமாகி விட்டது என்பதை நினைவூட்டினர்.


நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மாலையிலும் தொடர்ந்தது. முக்கிய கோப்புகளை வரவழைத்து கையெழுத்திட்டேன்.


10-2-2009: காலை ஏடுகளை படித்தேன். ஆட்சியை விட்டே விலகினால்தான் இலங்கை பிரச்னையில் யன் ஏற்படும் என்று என்மீது மிகுந்த அக்கறையோடு வழக்கம்போல் ஒரு தலைவர் அறிக்கை விட்டிருந்தார். அதே தலைவர், தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது இல்ங்கை தமிழருக்காக எதையும் செய்யவில்லை என்றும் எழுதியிருந்தார். ஆளுங்கட்சியாக இருந்தபோது தி.மு.க. செய்தது பற்றிய பட்டியலை ஏடுகளுக்கு அனுப்பச் செய்தேன்.


மலையில், சோனியா காந்தி தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். விரைவில் நலம் பெற வாழ்த்தினார்.


மாலையில் மயக்க மருந்து நிபுணர், டாக்டர் மகேஷ் வகாமுடி தலைமையில் மருத்துவ குழுவினர் என்னைப் பரிசோதனை செய்தனர். கிருமி தொற்று வராமல் இருப்பதற்காக அன்று மாலையிலிருந்தே நரம்பு மூலம் செலுத்தப்படும் ஊசி மருந்து ஆரம்பிக்கப்பட்டது. மறுநாள் அறுவை சிகிச்சை என்பதால், வீட்டாரும், மருத்துவர்களும் கூட முகமூடி அணிந்த பிறகே என் அருகே வர அனுமதிக்கப்பட்டனர்.


விடிந்தால் அறுவை சிகிச்சை என்பதால் மதுரையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையிலும் என் மகன் அழகிரி சென்னை வந்து மருத்துவமனையிலேயே தங்கினார். ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் அங்கேயே தங்கிவிட்டனர்


நன்றி
நக்கீரன்


தேர்தல் வந்தது..உண்ணாவிரதமும் வந்தது-கருணாநிதி

0 comments



மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வந்ததால் தான் தா.பாண்டியன் பக்க மேளம் வாசிக்க, நல்லகண்ணுக்கள் நால்வகைப் படையுடன் உடன்வர, இலங்கை பிரச்சனைக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசில் அங்கம் வகித்து அதன் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் திமுகவும்- பாமகவும் தமிழகத்தில் மட்டும் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் நீலிக் கண்ணீர் வடிப்பது ஏன்? என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் தேசிய செயலாளருமான ராஜா பேசியிருக்கிறார்.

என் செய்வது; திமுக- பாமக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவு பெற்று ராஜ்ய சபாவுக்குள் நுழைந்தவர்; இதுவும் பேசுவார் -இன்னமும் பேசுவார்!.

மத்திய அரசுக்கு திமுகவும், பாமகவும் ஆதரவு கொடுப்பது பற்றி ஆதங்கப்பட்டுள்ளார். தோழமைக் கட்சிகளுக்கு துரோகம் விளைவிப்பது எப்படி என்பதை இவரிடம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஜெயலலிதாவின் மேடையில்- கையாலாகாத கருணாநிதி ஆட்சித் திறமையின்மை என்றெல்லாம் திட்டிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஜெயலலிதாவிற்கும், அவருடைய கட்சியினருக்கும் கோபம் என் மீதுதான் என்றும்- இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியோ, சிங்கள அரசைப் பற்றியோ, மத்திய அரசைப் பற்றியோ அவர்களுக்கு கவலையோ கோபமோ இல்லை என்றும் தெரிகிறது அல்லவா?.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் வெளியாகும் என்பார்கள், அம்மையாரின் புளுகு ஒரே நாளில் வெட்ட வெளிச்சமாகி விட்டது; அதுவும் அந்த உண்ணாவிரத மேடையிலேயே!.

உண்ணாவிரதம் இருக்கும் ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும். அவரவர் சக்திக்கு ஏற்ப தங்களால் முடிந்த நிதி உதவியை அந்த உண்டியலில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்-ஜெயலலிதா அறிக்கை.

தமிழக அரசின் சார்பில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நிதிக்காக என்று உண்டியல் மூலமாக அல்ல- காசோலையாக மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும் என்று கூறி- ஒவ்வொரு காசோலையை வழங்கியவரின் பெயரும் ஏடுகளில் அறிவிக்கப்பட்டு- அந்தத் தொகை முழுவதும் அரசின் நிதித்துறை மூலமாக வரவு வைக்கப்பட்டு- ரசீதுகளும் வழங்கப்பட்டபோது- அந்த நிதியை நான் என் குடும்பத்திற்குச் சொந்தமாக்கி விட்டதாக அறிக்கை விடுத்தது இதே ஜெயலலிதாதான்.

'ஜகா' வாங்கிய ஜெ:

அதை எதிர்த்து வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டபோது நான் அவ்வாறு கூறவில்லை, மக்கள் பேசிக் கொண்டதைத்தான் சொன்னேன் என்று தன் வழக்கறிஞர் மூலமாக ஜகா வாங்கியதும் இதே ஜெயலலிதாதான்.

மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக உதவி புரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதைத்தான் மாபெரும் தோல்வி என்று சுட்டிக் காட்டுகிறேன். மத்திய அரசும், மாநில அரசும் தமிழ் மக்களின் மேல் உண்மையான அக்கறை செலுத்தவில்லை- உண்ணாவிரதத்திற்கு முன் ஜெயலலிதா விடுத்த அறிக்கை.

15-10-2008 அன்று ஜெயலலிதா இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஒரு அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையில் இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம், இந்திய அரசிடம் இல்லை என்றும், இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால் பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும், அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்று முழங்கினார்.

தா.பாண்டியன் பக்க மேளம்:

ஆனால் அப்போது தேர்தல் ஒன்றுமில்லை; அதனால் பாண்டியன் பக்க மேளம் வாசிக்க- நல்லகண்ணுக்கள் நால்வகைப் படையுடன் உடன்வர; இப்போது இலங்கை மீது ஜெயா பாய்வதற்குக் காரணம் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது என்ற அறிவிப்பு அல்லவா!.

வைகோ மீது தாககு:

இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசை வழி நடத்தும் சோனியா காந்தியே காரணம். இதற்கு முதல்வர் கருணாநிதியும் உடந்தை- நாஞ்சில் சம்பத் பேசியதில் எந்தத் தவறும் இல்லை- இது வைகோ.

உலகில் எந்தவொரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத வகையில் போர்க்களத்தில் பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடுவது பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தில்தான் என்றெல்லாம் பேசியிருப்பவர், சோனியா காந்தி மீதும் என் மீதும் குற்றம் சாட்டுவதில் எந்தவிதமான வியப்பும் இல்லை.

பரதனுக்கு டோஸ்:

கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைமுக அழைப்பு விடுத்து காங்கிரஸ், திமுக இரண்டுக்குமே கலக்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன். காங்கிரசுக்கு அழைப்பே விடவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் அவருடைய கூட்டணியிலே உள்ள நண்பர் பரதனோ மறைமுக அழைப்பு விடுத்ததாக சொல்கிறார். ஆனால் அந்த அறிக்கையால் காங்கிரசுக்கும், திமுகவிற்கும் கலக்கத்தை ஏற்படுத்தி விட்டதாக அவர் சொல்வதுதான் தவறு.

எங்களுக்கொன்றும் அவரது அழைப்பால் கலக்கம் இல்லை. உண்மையான கலக்கம் பரதனுக்குத்தான். காங்கிரசுக்கு எதிராக அவர்கள்தான் ஜெயலலிதா பக்கம் சென்றார்கள். அவர்களிடம் பேசிய பிறகுதான் ஜெயலலிதா காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். எனவே கலக்கம் அவர்களுக்குத்தானே தவிர எங்களுக்கு அல்ல.

கார்கில் போரில் உயிரிழந்த 11 தமிழர்களின் குடும்பத்தையும் நேரில் சென்று பார்த்த ஒரே தமிழ் தலைவராக உள்ளேன்- இது வைகோ.

கார்கில் போர் நடைபெற்றபோது தமிழகத்தின் சார்பில் 50 கோடி ரூபாயை வசூலித்து, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கையில் ஒப்படைத்தது திமுக அரசுதான். அந்தப் போராட்டத்தில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா இரண்டு லட்ச ரூபாய் நிதியும், அது தவிர அவர்களுக்கு வீடும் வழங்கப்பட்டது. ஆனால் அதைப் பெருமையாக கருதி திமுக சொல்லிக் கொள்வதில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

நன்றி
-தட்ஸ்தமிழ்


கலைஞரிடம் நேரில் நலம் விசாரித்த ராமதாஸ்

2 comments




தமிழக முதல்வர் கருணாநிதி முதுகு வலி காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

நன்றி
நக்கீரன்