இலங்கையில் போரை நிறுத்து என்று இந்தியா வலியுறுத்தியது உண்டா? ஒரு முறை கூட சொல்லவில்லை. இந்திய அரசு, இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் குறித்து பேசினேன் என்று சொல்லட்டும் நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன். என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
வடசென்னை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனை ஆதரித்து ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சென்னை பெரவள்ளூரில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளில் இருந்தும் மே 16-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். மக்கள் அளிக்கும் இந்த தீர்ப்பு இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கும்.
நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த இடத்தில்தான் தியாகி முத்துகுமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழியாக தான் அவரின் இறுதி ஊர்வலம் சென்றது. என் வாழ்வில் பார்த்திராத மக்கள் சோகத்தை அன்று பார்த்தேன். இதுவரையில் இலங்கை தமிழர்களுக்காக 16 பேர் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள்.
இலங்கையில் இன்றும் போர் நடந்து வருகிறது. அங்கு போர் நிறுத்தப்படவில்லை. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் போரை நிறுத்து என்று இந்தியா வலியுறுத்தியது உண்டா? ஒரு முறை கூட சொல்லவில்லை. இந்திய அரசு, இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் குறித்து பேசினேன் என்று சொல்லட்டும் நான் அரசியலை விட்டே விலகி கொள்கிறேன். எல்லாம் பொய், பித்தலாட்டம்.
தமிழர்களை அழிக்க சோனியாகாந்தி முயற்சி செய்து வருகிறார். இலங்கையில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கீறி சிசுக்களை எடுத்து தெருவில் வீசுகின்றனர். இந்த கொடிய செயல்களை அவர்கள் நிறுத்த சொல்லவில்லை. தமிழர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இது பற்றி வெளியே பேசக்கூடாதா?
எங்கள் அணி வெற்றி பெற்றால் தனி ஈழம் அமைப்போம் என்று சகோதரி ஜெயலலிதா கூறியிருக்கிறார். அவர் சொன்னால் கண்டிப்பாக செய்வார்.
இலங்கை தமிழர்களுக்காக நாங்கள் எத்தனையோ தியாகங்களை செய்திருக்கிறோம். விடுதலைபுலிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
ஈழத்தமிழர்களுக்காக பாடுபடும் எங்களை பார்த்தா சொல்வது? ஒரு துறவியை போல் வாழும் பழ.நெடுமாறனை பார்த்தா அப்படி சொல்வது?
பிரபாகரனை நெருங்க முடியாது. விடுதலைப்புலிகளை யாராலும் அழிக்க முடியாது. நல்ல ஆட்சியை மலர செய்து ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்போம்.
ராஜீவ்காந்தி அரசு ஊழலாலே கவிழ்ந்தது. இப்போதும் காங்கிரஸ் ஆட்சியில் அது தானே நடந்து வருகிறது என்று பேசினார்.
நன்றி
-தமிழ்வின்
Headline
இந்திய அரசுக்கு வைகோ பகிரங்க சவால்!!!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment