முதல்வர் கருணாநிதியின் குடும்ப ஆட்சி மே 13-ந் தேதியுடன் முடிவுக்கு வந்துவிடும் என்று பாமகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் குடும்ப ஆட்சி மே 13-ந் தேதியுடன் முடிவுக்கு வந்துவிடும் என்று பாமகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் தன்ராஜை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் நேற்று தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற் கொண்டார்.
சின்னசேலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்துக்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமரகுரு எம்எல்ஏ தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் குணசேகர் வரவேற்றார். எம்எல்ஏக்கள் செந்தமிழ் செல்வன், காவேரி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் அய்யப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- கருணாநிதி தலைமையில் நடைபெறும் குடும்ப அரசியலை வருகிற 13-ந் தேதியுடன் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இலங்கையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். கை, கால் இழந்து கொடூரமாக கிடக்கும் காட்சி மிகவும் பரிதாபத்துக்குரியது.
காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு மதியம் உணவு சாப்பிட வீட்டுக்கு சென்றவர் உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தினார். போர் நிறுத்தம் செய்யப் பட்டதாக கருணாநிதி கூறிய அன்றே, 272 தமிழர்களை ராஜபக்ஷே கொன்று குவித்தார். தி.மு.க. ஆட்சியில் மணல் கொள்ளை, அரிசி கொள்ளை மண்ணெண்ணை கொள்ளை சர்க்கரை கொள்ளை நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட 2 ஏக்கர் நிலம், இலவச கலர் டி.வி. எரிவாயு அடுப்பு யாருக்காவது கிடைத்தா? இல்லை.
நான் மத்திய மந்திரியாக இருந்தபோது தமிழகத்தின் சுகாதாரத்துக்காக ரூ.4 ஆயிரம் கோடியை ஒதுக்கினேன். இதில் ரூ. 2,500 கோடி கிராமப்புற சுகாதாராத்துக்காக ஒதுக்கினேன் கிராமத்தில் மருத்துவ வசதியை ஏற்படுத்த டாக்டர் பட்டம் முடித்தவர்கள் ஒரு வருடம் கிராமங்களில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்று சட்டம் இயற்றினேன்.
இதை எதிர்த்த கருணாநிதி, மருத்துவ மாணவர்களை தூண்டிவிட்டு அந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்தார். இவ்வாறு கருணாநிதியின் மீது ஏற்பட்டுள்ள வெறுப்பு, கோபம், ஆத்திரத்தை வருகிற 13-ந் தேதி நடைபெறும் தேர்தலில் திமுக அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தன்ராஜை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெலலிதாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அவர் யாரை நோக்கி கைகாட்டுகிறாரோ அவர்தான் பிரதமர். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நகர செயலாளர் பாபு ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர். வைத்தியலிங்கம் பாமக மாவட்ட செயலாளர் பச்சையப்பன் , நகராட்சி தலைவர் அழகுவேல் முன்னாள் எம்.எல்.ஏ க்கள் கலிதீர்த்தான் . காசாம்பு பூமாலை பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
நன்றி
-செய்தி.காம்
Headline
கருணாநிதியின் குடும்ப அரசியல் முடிவு பற்றி - அன்புமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment