திருகோணமலையில் காடுகளை வெட்ட ஆண்களை இராணுவம் அழைத்துச் செல்வதால் மக்கள் பீதி
திருக்கோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவு முள்ளியடி கிராமத்தில் இருப்போரை விமானப்படையினர் காடுகளை வெட்டுவதற்காக அழைத்துச் செல்கின்றனர். செவ்வாய்கிழமை இரவு 8.30 மணிக்கு இப்பகுதிக்கு வந்த படையினர் வீடுகளில் இருந்த ஆண்களை தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியில் உள்ள சிவப்புப் பாலம் என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்று இப்பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இரவு நேரங்களில் படையினர் மேற்கொண்ட இந் நடவடிக்கை தம்பலகாமம் பிரதேச மக்கள் மீது பெருத்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று புதன்கிழமை தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள பட்டிமேடு, கள்ளிமேடு, வர்ணமேடு, நடுப்பிரப்பன்திடல் ஆகிய பகுதிகளுக்கு சென்ற படையினர் காலை தொடக்கம் அப்பகுதியால் செல்வோர் மீது விசாரணைகளை மேற்கொள்வதோடு அடையாள அட்டைகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக அதிர்வின் திருகோணமலை நிருபர் தெரிவித்தார்.
நன்றி
-அதிர்வு
*net photo
Headline
திருகோணமலையில் மக்கள் பீதி!!!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஏன்? என்ன ? என விஷயம் போடலையே தல!
"pappu
"ஏன்? என்ன ? என விஷயம் போடலையே தல!"
வாங்க பப்பூ
ராணுவத்தின் நடவடிக்கையால்
மக்கள் அடையும் பீதி பற்றிய பதிவு இது.
Post a Comment