Headline

அலை அலையாக தற்கொலை தாக்குதல்?


முல்லைத்தீவில் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் முன்னேற முயற்சிக்கும் படையினர் மீது புலிகள் அலைஅலையாக வந்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள கரையமுள்ளி வாய்க்கால் பகுதியில் தொடர்ந்தும் கடும் சமர் நடைபெற்று வருகையில் நேற்று புதன்கிழமை தொடர்ந்து நடைபெற்ற கடும் சமரின் போது புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள் அலை அலையாக வந்து இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக படைத்தரப்புத் தெரிவித்தது.


படகுகளில் வந்து தரையிறங்கி கரையோரத்தில் நிலைகொண்டுள்ள படையினரை சிறு சிறு குழுக்களாக பிரித்துவிட்டு அவர்கள் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதே கடற்புலிகளின் நோக்கமாயிருந்துள்ளது. காரிருள் நேரத்தில் கடற்புலிகளின் இந்த கடல் தரைவழித்தாக்குதல் திட்டத்திற்கு எதிராக படையினர் இரவு 9.30 மணி முதல் நேற்று அதிகாலை 01.30 மணிவரை மிகக்கடுமையாகப் போராடினர்.கடற்புலிகளின் நான்கு படகுகள் அழிக்கப்பட்டு பத்துக்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் படையினர் கூறுகின்றனர்.

இதையடுத்து கடற்புலிகள் தங்கள் படகுகளுடன் நடுக்கடலுக்கு பின் வாங்கிச் சென்றுவிட்டனர். எனினும் கடற் புலிகள் மற்றொரு படகு அணி மீண்டும் இந்தப் பகுதியில் கடல் மற்றும் தரைவழித்தாக்குதலை நடத்த முற்பட்டபோது படையினர் அதனை முறியடித்து விட்டதாகவும் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் பெருமளவு படையினர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா, மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிட மறுத்துவிட்டார்.

நன்றி
-வன்னி..நெட்
*net photo

0 comments: