ஆயிரம் கைகள் மறைத்திருந்தாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலை கடல் ஓய்வதில்லை
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆட பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
இடை என்னும் கொடி ஆட நடமாடி வா
குழல் இசை கொஞ்சி விளையாட நீ ஆடி வா
தடை மீறிப் போராட சதிராடி வா
செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
மயிலாட வான் கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குரல் சொல்வதோ
முயர்க்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறை அற்ற செயலை நாம் வரவேற்பதோ
ஆடி வா ஆடி வா ஆடி வா
உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
ஆட பிறந்தவளே ஆடி வா
புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா
ஆடி வா ஆடி வா ஆடி வா
Headline
May
22,
2009
ஆயிரம் கைகள் மறைத்திருந்தாலும் ஆதவன் மறைவதில்லை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment