பிரிட்டனின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியும் அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான டெஸ் பிறவுண் அவசரமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.
பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள 50 ஆயிரம் மக்களின் பாதுகாப்பே மிகவும் முன்னுரிமைக்குரிய விடயம். தற்போது இலங்கையில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதத்தைக் கண்காணிப்பது அவசியம்.
அதேவேளை, இடம்பெயர்ந்துள்ள 2 இலட்சம் மக்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும். மேலதிக வளங்கள் தேவை, சர்வதேச மனிதாபிமான அமைப்புகளுக்கு விசா வழங்கப்படவேண்டும் என்று பேச்சுக்களின் பின்னர் அவர் கருத்துத் தெரிவித்தார்.
மேலும் நலன்புரி நிலையங்களில் பிரிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் சேர்க்கப்பட வேண்டும், இடம்பெயர்ந்த மக்களை சோதனையிடும் நடவடிக்கைகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த மக்கள் குறுகிய விரைவில் தமது பகுதிகளுக்குத் திரும்புவதற்கான திட்டமொன்று வகுக்கப்படவேண்டும் என்றும் பிறவுண் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு வெளிப்படைத் தன்மையையும் பகிரங்க செயற்பாடுகளையும் விரும்பவில்லைப்போல் தென்படுகிறது; தயங்குகிறது. அவர்கள் சர்வதேச சமூகத்தை உள்ளே அனுமதித்தால் இலங்கை நிலைவரம் குறித்து சமநிலையான பக்கச்சார்பற்ற கருத்து உருவாகலாம் என்றும் டெஸ் பிறவுண் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்கள் பாதுகாப்பானவையாகக் காணப்பட்டாலும் அனைத்தும் அங்கு சரியாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பாக இந்தியத் தலைவர்களுடன் தாம் பேச்சு நடத்தினார் என்று பிறவுண் மேலும் கூறினார்.
இலங்கை விவகாரங்களில் பிரிட்டனின் விசேட தூதுவராக டெஸ் பிறவுணியை அந் நாட்டின் பிரதமர் நியமித்திருந்ததும், இலங்கை அரசு அவரது நியமனம் தேவையற்றது என்று நிகாரரித்திருந்தமையும் தெரிந்தவையே.
நன்றி
-தமிழ்வின்
Headline
மக்கள் பாதுகாப்பு சரியாக இல்லை பிரிட்டனின் பிரதிநிதிகள் கவலை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க
thanks for your comment my boy
Post a Comment