Headline

யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு

0 comments


இது ஒரு பழைய பதிவின் மலரும் நினைவு

ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போய்விட்டது.

அந்த நெஞ்சைப் பிளக்கும் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் பேரறிஞனும் ஆராய்ச்சியாளனுமாகிய வண. டேவிட் அடிகள்.

அந்த நூலக எரியூட்டலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு இலக்கியவாதி "சுஜாதா" 1981-ம் ஆண்டு டிசம்பர் மாத ஆனந்த விகடன் இதழில் "ஒரு இலட்சம் புத்தகங்கள்" என்கிற தலைப்பில் பாரதி நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார்.

அதே நிகழ்வில் பெரிதும் கவலையுற்ற வெளிநாட்டு ஆங்கிலேய அறிஞர் ஒருவர் யாழ்ப்பாண பொது மக்கள் நூலகம் எரிந்து கருகி நீறாகிக் கிடந்த சாம்பர் மேட்டிலே நின்ற வண்ணம் ஆங்கிலக்கவிதை ஒன்றை எழுதினார். இந்தக் கவிதையை பேராசிரியர் கைலாசபதியிடமிருந்து பெற்றுத் தமிழாக்கம் செய்து "கிருதயுகம்" என்ற ஈழத்து சிற்றிதழ்களிலே கைலாசபதியின் மறைவுக்குப் பின்னர் கவிஞர் சோ.ப. பிரசுரித்திருந்தார்.

இத்தகைய அறிவுலகச் சிறப்புக்கள் வாய்ந்த யாழ்ப்பாணப் பொது மக்கள் நூலகம் எரியூட்டலின் 20 வது ஆண்டு நிறைவின்போது அதன் வரலாற்றுத் தொகுப்பை எழுதிப் பிரசுரித்திருக்கின்றார் திரு. என்.செல்வராஜா.

இந்த நூல் எரியூட்டலின் 20 வது வருடப் பூர்த்தியை நினைவு கூரும் வண்ணமாக வெளியிட்டு இருக்கின்றார். இது அவருடைய பிரசுராலயமாகிய அயோத்தி நூலக சேவைகள் என்ற நிறுவனத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.


அர்ப்பணிப்பும், வினையாற்றலும் உடைய உண்மையான நூலகர் ஒருவராலேயே இம்மாதிரி வரலாற்றுத் தொகுப்பு நூல் சாத்தியப்படும். மதிப்புக்குரிய என். செல்வராஜா யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த நூலகமாகிய "ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின்" நூலகராகச் சேவை செய்தவர்.

நூற் பெறுமதி உணர்ந்தவர். நூற்பயன்பாடு அறிந்தவர். அதுமட்டுமன்றி பழம்பெரும் நூலகரும் அறிஞருமாகிய டாக்டர் வே.இ.பாக்கியநாதன் அவர்களின் நூலக நெறிப்படுத்தலின் ஊடாக பயிற்சியும் பக்குவமும் பெற்றவர். அத்தகைய நூலகவியல் அறிஞர் ஒருவர் தொகுத்து அளித்திருக்கும் வரலாற்றுத் தொகுப்பு ஆவணப் புதையலாக இந்த நூல் விளங்குகின்றது.
127 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் யாழ்ப்பாணப் பொது நூலகம் பற்றியும் அதன் அழிவு பற்றியும் பொதுநூலகத்தின் சேவையின் சிறப்பும் பெருமையும் பற்றியும் கட்டுரைகள் காணப்படுகின்றன.

இந்தக் கட்டுரைகளை நூலகர் செல்வராஜா பல்வேறு சஞ்சிகைகளில் இருந்தும் பத்திரிகைகளில் இருந்தும் அன்புடனே தேடித் தொகுத்துள்ளார். இத்தொகுப்பில் 45 கட்டுரைகள் காணப்படுகின்றன. அவற்றிலே 14 ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. எச்.ஏ.ஐ.குணத்திலக்கா, நடேசன் சத்தியேந்திரா, பேராசிரியர் நேசையா, வீ.எஸ்.துரைராஜா என்பவர்களின் ஆங்கிலக்கட்டுரைகள் இந்நூலுக்கு அணி செய்கின்றன.


நூலுக்கு ஆசியுரையை மாநகர ஆணையாளர் வே.பொ.பாலசிங்கம் வழங்கியுள்ளார்.
1894-ம் ஆண்டு சிலோன் ஒப்சேவர் பத்திரிகையில் யாழ். பொதுநூலகம் பற்றிய குறிப்பை முதலிலே வைத்திருக்கின்றார் ஆசிரியர்.

யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய பிரிட்டிஷ் அதிகாரிகளும், யாழ்ப்பாணத்து அறிஞர்களும் சேர்ந்து இந்த நூலகத்தை அமைக்க முற்பட்டதனை சிலோன் ஒப்சேர்வர் குறிப்பிடுகின்றது. இக்குறிப்பிலே அரசாங்கத்திடமிருந்து மேலும் 50 ரூபா மானியமாகப் பெறப்பட வேண்டும் என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்ற செய்தி காணப்படுகின்றது. 1954-ம் ஆண்டு புதிய நூலகத்திற்கு அத்திவாரக்கல் நாட்டப்பட்ட செய்தியை தினகரன் வெளியிட்டுள்ளது. இதற்குப்பின்னர் எரியூட்டலும் அதனைப்பற்றிய செய்திகளும் காணப்படுகின்றன.

இந்த நூலகம் பற்பல கிடைத்தற்கரிய பழம்பெரும் நூல்கள் மற்றும் தமிழ் ஓலைச் சுவடிகள் நாழிதழ்கள், வார மாத இதழ்கள் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்கியது.அவரவருக்குரிய நூல்களை, நூலக வரையறையை மீறாமல் தேர்ந்தெடுத்து வழங்குவதிலே யாழ். பொதுமக்கள் நூலகத்தினர் காட்டியுள்ள ஈடுபாட்டுணர்வு போற்றுதற்குரியது.

இது போன்ற பல செய்திகளையும் தகவல்களையும் அக்கால நூலகச் செயற்பாடுகளையும் எரியுண்ட நூலகத்தின் புனர்நிர்மாணச் செயற்பாடுகளையும் தெளிவாகவும் சுருக்கமாகவும் நுணுக்கமாகவும் விபரிக்கின்றது இத்தொகுப்பு நூல்.இந்நூலகத்தின் அதிதீவிர வாசகனும் படிப்பாளியுமாகிய எஸ். எம்.கமால்தீன் என்பவர் "நான் கண்ட யாழ்ப்பாணப் பொது நூலகம்" என்ற தலைப்பிலே எழுதியுள்ள கட்டுரையில்..

"எனது கண்களையே நம்ப முடியவில்லை. அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமேயன்றி வேறெதுவுமே காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சியே எனக்குள் மேலிட்டது. எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்? கலங்கிய கண்களோடு என் முன்நின்ற யாழ். பொது நூலகர் திருமதி ரூபவதி நடராஜா விடுத்த உருக்கமான கேள்வி இது.

நாட்டின் அனைத்துத் திசைகளில் இருந்தும் ஏன் உலக நாடுகள் எங்கணுமிருந்தும் ஆயிரமாயிரம் நல்லிதயங்களிலிருந்து எழும் கேள்வியும் இதுவே. யாழ்ப்பாணப் பொது மக்கள் நூலகத்தின் இரவல் வழங்கும் பகுதியின் நடுவே வெறுமையின் கோரத்தில் சிந்தையைச் செலத்தியவனாக நிற்கின்றேன் நான். முன்னர் எத்தனையோ தடவைகள் எனது சிந்தைக்கு விருந்தளித்த அந்த அறிவுக்களஞ்சியம் சிதைந்து சூனியமாகி விட்டிருந்தது. இதயமே அற்றோர் கடந்த ஜுன் மாதம் முதல்நாள் அதிகாலையில் மூட்டிய தீயினால்" என மிகுந்த கவலயுடன் கொதிப்பாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரை 19.7.1981 திகதியிட்ட வீரகேசரி வார வெளியீட்டிலே பிரசுரமாயிற்று.


நீலவண்ணன் எழுதி வரதர் வெளியீடாக 1981 ஜுனில் பிரசுரமான "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகின்றது" என்ற சிறுநூல் யாழ் நூலகப்படுகொலை பற்றிக் குறிப்பிடுவதாவது:
"அன்று இரவு 10 மணி போல நூலகத்திற்குள் நுழைந்த கொடியவர்கள் காவலாளியைத் துரத்தியடித்து விட்டு நூலகப் பெருங்கதவைக் கொத்தித் திறந்து உள்ளே புகுந்து அட்டூழியங்கள் புரிந்தனர். 97ஆயிரம் கிடைத்தற்கரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளுக்குப் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி எரித்தழித்தனர். நூலகத்தினுள் சாம்பல் குவியல்களே எஞ்சிக் கிடந்தன. அந்தச் சாம்பல் குவியல்களுக்குள்ளே எரியாத நூல்கள் ஏதேனும் எஞ்சிக் கிடக்குமோ என்ற நப்பாசையில் நூலக உதவியாளர்கள் சு.யோ.இமானுவேலும் அ.டொன் பொஸ்கோவும் ச.கந்தையாவும் சாம்பல் குவியல்களைக் கிளறிக் கொண்டிருந்த நிலையைக் காண முடிந்தது. நூலகம் கருகிக் காரை பெயர்ந்து கிடந்தது ... கயவர்கள் நூலகத்தையே புகைத்து விட்டார்கள்."

அனேகமாக 1981 மே மாதம் 31-ம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் வெளியான 1981-ம் ஆண்டு நாழிதழ்கள், வார இதழ்கள் யவுமே (உலகம் முழுவதும்) யாழ்ப்பாண பொது நூலகத்தின் "படுகொலை"யைப் பற்றி விலாவாரியாக எழுதியிருந்தன. அவற்றைப் பற்றிய செய்திப்பதிவுகளும் அனுதாப அறிக்கைகளும் நூலகப்புனர்நிர்மாணத்திற்கான நன்கொடைகள், அன்பளிப்புகள் பற்றிய தகவல்களும் 1984-ம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் திகதி வெளியிடப்பெற்ற புனர்நிர்மாணஞ் செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பொதுநூலகத் திறப்பு விழா மலரில் பிரசுரமான மிக முக்கியமான ஓரிரு கட்டுரைகளும்,

பழம்பெரும் நூலகர்கள் பற்பல துறைகளைச் சார்ந்தோர் எழுதிய கட்டுரைகளும் எரிமலை, நம்நாடு, புதமைப்பெண், புதினம் போன்ற பிறநாட்டுத் தமிழ் ஏடுகளில் பிரசுரமான கட்டுரைகளும் தமிழ் நேஷன், தமிழ் நெற், போன்ற இணையத்தளங்களின் செய்தி மற்றும் தகவல்களும் அடங்கிய ஆவணக்கருவூலப் பெட்டகமாக வெளிவந்திருக்கும் இந்த வரலாற்றுத் தொகுப்பு நூல் நூலகர் என். செல்வராஜாவின் பெயரைக் காலமெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டேயிருக்கும்.

ஏனெனில் புலம்பெயர்ந்து மேலைநாடுகளுக்குப் போன ஈழத்தமிழர்களிலேயே பெரும்பான்மையினர் தமிழனுக்கேயுரிய புறத்தையும் அகத்தையும் தொலைத்துவிட்டு சுயமுகம் இழந்து இரவல் முகம் வாங்கிவரும் இன்றைய சூழலிலே என். செல்வராஜா போன்றவர்களின் இத்தகைய செயற்பாடுகள் மனப்பூர்வமான போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்குமுரியவையே.

மகத்தான வரலாற்றுத் தொகுப்பு நூலுக்கான இந்தத் திறனாய்வுக் கட்டுரையை பேரறிஞர் அண்ணா அமெரிக்க யேல் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மண்டபத்தின் வாயில் முகப்பிலே கண்டு சொன்ன மகுட வாசகத்துடன் நிறைவு செய்கிறேன். "வரலாற்றிடமிருந்து யாரும் பாடம் படிப்பதே இல்லை."

கடந்த 65 வருட கால சினிமா வாழ்க்கையில் என் மக்களுக்காக நான் என்ன செய்தேன் என சிந்தித்து பார்க்கின்றேன். இந்த நூலகத்தைப் பயன்படுத்தியவன் அதனை அனுபவித்தவன் என்ற காரணங்களிருப்பினும் அது குறித்து நான் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனால் நூலகம் எரிக்கப்பட்டபோது பிறந்த குழந்தை அது தொடர்பான ஆவணப் படத்தை எடுத்து என் கைகளில் தரும் போது என் இயலாமையை உணர்கிறேன்.

--இயக்குனர் பாலு மகேந்திரா -- சென்னையில் நடந்த திரையிடும் நிகழ்வில்



நன்றி
-மருதம்


கடந்த 65 வருட கால சினிமா வாழ்க்கையில் என் மக்களுக்காக நான் என்ன செய்தேன் என சிந்தித்து பார்க்கின்றேன். இந்த நூலகத்தைப் பயன்படுத்தியவன் அதனை அனுபவித்தவன் என்ற காரணங்களிருப்பினும் அது குறித்து நான் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனால் நூலகம் எரிக்கப்பட்டபோது பிறந்த குழந்தை அது தொடர்பான ஆவணப் படத்தை எடுத்து என் கைகளில் தரும் போது என் இயலாமையை உணர்கிறேன்.

--இயக்குனர் பாலு மகேந்திரா -- சென்னையில் நடந்த'எரியும் நினைவுகள்' திரையிடும் நிகழ்வில்.

கலாச்சார படுகொலை



காங்கிரஸ் செய்த தவறுகள் - தமிழருவி மணியன்

3 comments



ஈழத் தமிழர் தமிழர் விவகாரத்தில் டென்மார்கிற்கு இருக்கின்ற அக்கறையில் சிறிது கூட இந்தியாவுக்கு இல்லை" என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' பிரபல வார இதழிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:


"ஈழத் தமிழர்களுக்கு எதிரான வேலையை 1948 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் ஆரம்பித்துவிட்டது. அப்போது அங்கு தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்ட்டபோது, 'இலங்கை உள்நாட்டு பிரச்னையில் இந்தியா தலையிடாது' என்று நேரு ஒதுங்கிக் கொண்டார்.

சிறிமாவோவின் ஆட்சியில் தமிழர்கள் இன்னல்பட்டபோது அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோவுடன் ஒப்பந்தம் செய்த லால்பகதூர் சாஸ்திரி இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாக வழி செய்தார்.

ஈழத் தமிழர்களுக்காக இந்திரா காந்தி அக்கறை காட்டியதும், ராஜீவ் காந்தி நடவடிக்கை எடுக்க முனைந்ததும் மறுக்கமுடியாத உண்மைகள். இந்திரா காந்தி ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக புலிகளை ஆதரித்தது உண்மை. ராஜீவ் காந்தி புலிகளை வற்புறுத்தி ஒரு ஒப்பந்தத்தை ஜெயவர்த்தனவுடன் உருவாக்கினார். அந்த ஒப்பந்தம் இலங்கை அரசிற்கும் ஈழத் தமிழருக்கும் இடையில்தான் நடந்து இருக்கவேண்டும். அதிலேயும் தவறு.

போனவையெல்லாம் போகட்டும். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி, ஐந்து மாதங்கள் தமிழ் இனத்தையே முற்றாக ஒழிப்பது என ராஜபக்ச அரசு தன் இராணுவத்தைக் கொண்டு ஒரு ஈவு இரக்கமற்ற போரை நடத்தியபோது மன்மோகன் சிங்கின் இந்திய அரசு அதற்குத் துணை நின்றது. இது எந்த வகையில் நியாயம்?

விடுதலைப் புலிகளுக்காகவோ, பிரபாகரனுக்காகவோ இந்திய அரசு போராடியிருக்க வேண்டியதில்லை. ஆனால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டு அனைத்துலக போர் விதிகளும் மீறப்பட்டு, அரக்கத்தனமாக ஈழத் தமிழர்களை முற்றாக அழிக்க ராஜபக்ச முனைந்தபோது சோனியா காந்தியோ மன்மோகன் சிங்கோ ஒரு வார்த்தைகூட எதிர்த்துப் பேசவில்லை. ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு போரை நிறுத்த வழி செய்யவில்லை.

ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள உகாண்டாவில் வணிகம் செய்யச் சென்ற குஜராத்திகளுக்கு எதிராக வன்முறை நடந்த அடுத்த கணமே இந்திய அரசு துடித்தது. பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிசில் வாழும் சீக்கியர்கள் தலைப்பாகைகள் அணியக் கூடாது என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, பிரான்ஸ் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் அந்த ஆணையை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.

இன்று வியன்னாவில் சீக்கியர் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக செய்தி வந்து சேர்ந்த அந்தக் கணமே பஞ்சாப் எரியத் தொடங்கியது. ஜலந்தர், சண்டிகர், லூதியானா போன்ற நகரங்கள் போராட்டக் களமாக மாறின. உடனே பிரதமர் மன்மோகன் சிங் அமைதி காக்க வேண்டுமென்று சீக்கியர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கிறார்.

புதிதாக வெளிவிவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற எஸ்.எம்.கிருஷ்ணா அவசர அவசரமாக ஒஸ்திரியாவிலிருக்கும் இந்தியத் தூதரகத்தோடு தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை நடத்துகிறார்.

வியன்னாவில் ஒரு உயிர் பறிக்கப்பட்டது. 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். அதற்கே மத்திய அரசு துடிதுடிக்கிறது.

ஆனால் தமிழகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இலங்கைத் தீவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். உறுப்பு இழந்தார்கள். உறவு இழந்தார்கள். ஈழப் பகுதியே மயானம் ஆகிவிட்டது. எங்கும் தமிழர்களின் பிணக்குவியல். திசையெல்லாம் தமிழர்களின் மரண ஓலம்.


ஐக்கிய நாடுகளுடைய செயலாளர் பான் கீ மூன் நேரில் சென்று இலங்கை நிலவரங்களைக் கண்டு நெஞ்சம் துடித்தார். இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உணவு, தண்ணீர், மருந்து எதுவும் இன்றி மரணத்தோடு போராடுகிற நிலையையும், வன்னிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதையும் கருத்தில் கொண்டு இலங்கை அரசு போர் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை ஐ.நா. சபையில் மனித உரிமை அமைப்பின் சிறப்பு விவாதத்தில் கொண்டு வர வேண்டுமென்று பிரித்தானியாவும், டென்மார்க்கும் செயல்பட்டன. இந்த சிறப்பு விவாதத்தைத் தடுப்பதற்காக சீனாவும், பாகிஸ்தானும், ரஷ்யாவும், கியூபாவும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக நிற்கிறது இந்தியா. என்ன அநியாயம்?

நமது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காமல், ராஜபக்ச அரசுக்குத் துதி பாடுகிறது காங்கிரஸ் அரசு. மனித உரிமை சபையில் சிறப்பு விவாதம் நடக்க வேண்டுமென்றால் 16 நாடுகளின் ஆதரவு தேவை. இந்த ஆதரவைத் திரட்டுவதற்கு சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்கிற்கும் மனசாட்சி ஒன்று இருந்தால் காங்கிரஸ்காரர்களுக்கு தமிழ் இனத்தின் மீது பற்றும் பாசமும் இருந்திருந்தால் இந்த ஆதரவை இந்தியா முன்னின்று திரட்டியிருக்கவேண்டும்.

ஆனால், எங்கேயோ இருக்கும் டென்மார்க் தன் சொந்த முயற்சியால் பிற நாடுகளின் ஆதரவைத் திரட்டி சிறப்பு விவாதம் நடப்பதற்கு வழிவகுத்து இருக்கிறது. இதைத் தடுக்க இந்தியா எல்லா வகையிலும் பாகிஸ்தானோடு சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகிறது.

பெற்ற தாயாக நினைத்து காங்கிரஸை தமிழர்கள் நேசிக்கின்றனர். ஆனால் மாற்றான் தாயாக தமிழர்களை காங்கிரஸ் புறக்கணித்து வருகிறது. தமிழக மக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்'' என்று ஆவேசமாய் தெரிவித்தார் தமிழருவி மணியன்.

நன்றி
-புதினம்


ஒரு மகிழ்சியான செய்தி!!!

0 comments


இனைய வழி தமிழ் மேம்பாடு நாளுக்கு நாள் புதிய பொலிவையும் உயர்வை அடைந்து வருகின்றது. அந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வைப்பது அயல் நாட்டில் வாழும் தமிழர்கள்.

இன்றைய சுழலில் அனைத்து செய்திகளும் எளிய தமிழில் நமக்கு கிடைக்கிறது.

அதுபோல் சில அறிவியல் சார்ந்த உலகலாவிய புதிய செய்திகளும் ஆங்கில தளங்களில் உள்ளது போன்ற உலகில் புதிய அறிவியல் தொழில் நுட்ப கருத்துகள், சுற்று சுழல் பற்றிய விழிப்புணர்வு, மற்றும் கலை இலக்கிய ஆய்வுகள்,புதிய மருத்துகள் , இன்னும் பல தகவல்களை கொண்ட TED.com ஆங்கில தளம் இப்பொழுது சில இந்திய மொழிகளில் மொழியாக்க வார்த்தை தொகுப்பு (Sub-Tittle) சேவை வழங்குகிறார்கள்.

1.உதாரணத்திற்கு அந்த தளத்தில் இறுந்து பெற்ற ஒரு வீடியோ தொகுப்பு உருவங்களின் பிம்மங்களை பற்றியது.

டிஜிட்டல் உருவங்களை நாம் பார்வையிடும் முறையையே மாற்றக் கூடிய மென்பொருளான, போட்டொசிந்தின் ஒரு பளிச்சிடும் செயல்முறையை பிளெயிஸ் அகுவேரா ஒய் ஆர்கஸ் லீட்ஸ் அவர்கள் முன்னின்று நடத்துகிறார். வலையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட புகைப்படங்களை உபயோகித்து, போட்டோசிந்த் மெய்சிலிர்க்க வைக்கிற கற்பனாகரமான நிலப்பரப்புகளைக் கட்டமைக்கிறது மேலும் அதனூடாக நாம் வழிகண்டு செல்லவும் அனுமதிக்கிறது.


இந்த தளத்தின் உறுப்பினர் ஆவதற்கான லிங்க்.
நீங்கள் உறுப்பினர் பதிந்த பின்பு உங்கள் கருத்துக்களையும் உங்கள் மனதில் உதிக்கும் புதிய கருத்துகளை சிறந்தது என்றால் அதற்கு பரிசும் உண்டு.
எனவே இந்த தளத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும் குறிப்பாக இது மாணவர்களுக்கு புதிய சிந்தனைக்கு நிச்சயம் வழி செய்யும்.


அவர்கள் போராட்டமும் வீறு கொண்டெழும் !!!

0 comments


மதிப்புக்குரிய நெடுமாறன் ஐயா அவர்களே!-ஒரு மடல்

இது ஒரு சபிக்கப்பட்ட ஈழத்து குரல். யாருமேயில்லாத அனாதைகளாக செத்துக் கொண்டு இருக்கிறோம். தாய் தமிழகம் எங்களை காப்பாற்றும் என்று நம்பி நம்பி லட்ச கணக்கில் அநியாயமாக செத்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் பெண்கள் எல்லாம் கேட்பாரற்று கெட்டு சீரழிகின்றார்கள். பாவப்பட்ட பெற்றவர்கள் தடுக்க வழியின்றி செய்வதறியாது கண்ணீரிலேயே கரைந்து கொண்டிருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் முடமாக்கப்பட்டுள்ளார்கள். பஞ்சப் பரதேசிகளாக, பிச்சைகாரர்களாக கையேந்தி கொண்டிருக்கிறோம். முட்கம்பிக்குள்ளே முடக்கப்பட்டு முடமாகி போனோம்.
எங்கள் குரல் நசுக்கப்பட்டு விட்டது. ஆனால் எங்கள் தொப்புள் கொடிகள் என் மவுனமாகி போனார்கள்? காவட் துறைக்கு பயந்து விட்டார்களா இல்லை அரசின் மாயாஜால கதைகளில் நம்பி உறங்கி விட்டார்களா? நாங்கள் தவித்துக் கொண்டு இருக்கும் போது எங்கே போனார்கள் எங்கள் உறவுகள்? வீறு கொண்டு எழுந்தீர்கள். அப்போது நம்பிக்கை கொண்டோம்.

ஆனால் இன்று ஒரு சத்தத்தையும் காணவில்லையே! ஏன்? உங்கள் கண் முன்னால் எங்கள் அழிவுகள் காட்டப்பட்டால் மட்டுமா துடிப்பீர்கள்? சத்தமில்லாமல் சாட்சிகள் இன்றி சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோமே அது உங்கள் நெஞ்சங்களை நெருக்கவில்லையா? நாளை எங்கள் கதி என்னவாக போகின்றது என்று உங்கள் மனதுக்கு புரியவில்லையா? ஏன் மவுனித்து போனீர்கள்?

ஐநாவில் இலங்கைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தார்கள் வெள்ளை இனத்தவர்கள். ஆனால் அந்த சட்டத்தையும் செல்லக் காசாக்கி விட்டார்கள் நெஞ்சிரக்கமில்லாத படு பாவி நாடுகள். அதற்கு இந்தியா அன்றிலிருந்து இன்று வரை துணை போகிறது. ஓரிரு குரல்கள் இந்தியாவிற்கு எதிராக தாய் தமிழகத்தில் எழுந்தன. பல முத்துக்குமாரார்கள் தன்னையே தியாகம் செய்துமே மதியாத இந்தியா இந்த கண்டனக் குரல்களை எப்படி கணக்கெடுக்கும்?

தமிழனின் உரிமைக்குரலும், தியாகங்களும் பாரத மாதாவிற்கு ஏன் இப்படி செல்லாக் காசாகி போனது? ஏன் என்றால் நாம் உறுதியில்லாதவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். நம் தாய் தமிழக உறவுகள் மீது எந்த நம்பிக்கையில் முத்துக்குமாரர்கள் உயிரை கொடுத்தார்களோ தெரியவில்லை. அவர்களின் விலை மதிக்க முடியாத உயிர்கள் போனதும், ஈழத்தில் நாம் செத்து மடிவதும் தான் வரலாற்றில் மிஞ்சப் போகிறதா?

அப்பாவி மக்கள் எங்களுக்கு ஒரு வழியும் தெரியவில்லை. உலகத்தை நம்பினோம். ஏமாற்றப்பட்டோம். தமிழக மக்களையும், கூடவே தமிழக தேர்தலை நம்பினோம். அதுவும் பொய்த்து விட்டது. ஐநாவை நம்பினோம். அங்கும் இந்தியாவின் கபட நாடகம் தான் அரங்கேரியிருகின்றது. இந்தியாவுக்கு சீனாவும் பாகிஸ்தானும் பகை நாடுகள். ஆனால் ஈழத்து தமிழனை அழிப்பதில் எல்லோரும் நேச நாடுகள். எங்கு போய் சொல்வது எங்கள் வேதனையை? கடவுள் கூட அதர்மத்துக்கு கூட்டாகி போய் விட்டார். தலைவர் இருக்கிறார் என்பதால் கொஞ்சம் மானத்தோடு வாழ்ந்தோம். அவரும் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்தப் பின் நாயை விட கேவலமாகி போனோம். சிங்களவனில் பிச்சைக்காரன் கூட எங்களை ஏறி மிதிக்க போகிறான். ஆண்டியில் இருந்து அரசன்வரை எங்களை கேவலப்படுத்தப் போகிறான். வன்னியில் எங்கள் அழிவுகள் சாட்சியமில்லாமல் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் குட்டி தூக்கத்தில் இருந்து விழித்து தனது பொறுப்பை உணரும் போது, அங்கு எதுவுமே மிஞ்சப் போவதில்லை, எங்கள் நியாயங்களும் வெளியில் தெரியப்போவதில்லை.

மதிப்புக்குரிய ஐயா நீங்களும், வைகோ அவர்களும், திருமாவளவன் அவரகளும் மருத்துவர் ஐயா அவர்களும், வீரமணி அய்யா, சீமான் அவர்கள், சுபா வீரபாண்டியன் அவர்கள், மற்றும் இங்கு குறிப்பிடாத தமிழின பற்றாளர்கள் என்றுமே விடாது எங்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றீர்கள். எங்களுக்காக எத்தனையோ துன்பங்களை அனுபவித்தீர்கள். அதனையெல்லாம் இந்த அல்லல்படும் நெஞ்சங்கள் என்றும் மறக்கப் போவதில்லை. ஆனால் ஐயா அவலத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த பாவப்பட்ட தமிழினத்துக்கு உங்களின் பணி இன்னும் தேவை என்பது தாங்களுக்கு நன்றாகவே தெரியும்.

வீறு கொண்டு எழுந்த மாணவா சமுதாயம், சட்டத்தரணி சமுதாயம், திரைப்பட துறையினர் மற்றும் நம் மக்கள் எல்லோரும் மீண்டும் எழுந்து வாருங்கள். அடங்காத போராட்டம் நடத்தி எங்களை காப்பாற்ற வாருங்கள். மத்திய அரசின் இந்த தர்மமற்ற செயலை கண்டித்து தடுத்து நிறுத்துங்கள். தமிழனின் உறுதி, ஒற்றுமை, உணர்வு எல்லாம் உலகத்துக்கு தெரிய வேண்டும். எங்கள் ஒட்டுமொத்த தமிழ் மானம் காக்கப் படவேண்டும். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நாங்கள் அதாள பாதாளத்துக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள். தமிழனின் புல் பூண்டு கூட ஈழத்தில் மிஞ்சப் போவதில்லை. மீண்டும் ஒரு அடிமை சாசனம் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது.
give a peace Pictures, Images and Photos
ஐயா அணி திரட்டுங்கள் எங்கள் மக்களை! அவர்கள் எங்களுக்காக நிச்சயம் பாசத்தோடும் உரிமையோடும் போராடுவார்கள். எங்களுக்காக உயிர் கொடுத்த முத்துகுமரன்களை தந்த இந்த தமிழக மண் எங்கள் துயர் துடைக்க பின் நிற்க மாட்டாது. ஆனால் அவர்கள் ஒற்றுமையான ஒரு தலைமையின் தூண்டுதலையும் அதன் வழிநடத்தலையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தலைமைகளின் ஒற்றுமை மேலோங்கும் போது மக்களின் ஒற்றுமையும் சீர்குலையாது. அவர்கள் போராட்டமும் வீறு கொண்டெழும். போராட்டம் வெற்றியும் பெறும்.

ஆவன செய்வீர்களா ஐயா? உங்கள் சொல் கேட்டு அணித்திரள எங்கள் தமிழின உணர்வாளர்கள் என்றும் பின் நிற்பதில்லை. தேர்தலுக்காக இடம் மாறினாலும் எங்கள் இன வெற்றியில் அவர்களுக்கு மாற்று கருத்துக்கள் இல்லை. தமிழின உணர்வாளர்களே கட்சி மறந்து, பேதங்கள் மறந்து தயவு செய்து தமிழின வெற்றிக்காக ஒன்று திரளுங்கள். தமிழ் மானம் காக்க ஒன்று திரளுங்கள். ஈழம் விடிய ஒன்று திரளுங்கள். எங்கள் கண்ணீர் துடைக்க ஒன்று திரளுங்கள். எங்கள் உரிமை வென்றெடுக்க ஒன்று திரளுங்கள். எங்களின் வாழ்வும் சாவும் தமிழ் உறவுகளே உங்கள் கைகளில் மட்டும் தான் இருக்கின்றது. வேறு யாரும் நமக்காக இங்கில்லை என்பது தான் நிதர்சனம்.

லக்ஷ்மி

நன்றி
தமிழ்ஸ்கைநியுஸ்


ஐரோப்பிய வாழ் தமிழர்களுக்கு ஒர் அறிய வாய்ப்பு

0 comments


ஐரோப்பிய பாராளுமன்றத்தேர்தலில் முதன்முறையாக பிரத்தானியாவில் வாழும் தமிழ்ப்பெண் ஒருவர் போட்டியிடுகின்றார்

பிரித்தானியாவைச் செர்ந்தவரும் தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் பேச்சாளருமாக பணியாற்றும் ஜனனி ஜனநாயகம் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

இது தொடர்பில் முதன்முதலில் போட்டியுடும் இவரை பிரித்தானிவாழ் அனைத்து தமிழ் மக்களையும் இவர் வெற்றிபெறுவதற்கு துணை நிற்குமாறு அனைத்து பிரித்தானிய தமிழ் அமைப்புக்களும் கேட்டுக்கொண்டதாக தெரியவருகிறது.

ஐனனி ஐனநாயகம் பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களிலும் பிரான்சின் முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றிலும் கல்வி கற்றவர்.

பல வருடங்களாக தமிழ் மக்களுக்கு எதிரான மனிதவுரிமை மீறல்களை வெளிக்கொணரும் செயற்பாடுகளில் பங்கேற்ற இவர் தற்போது இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பின் பேச்சாளராகவும், புருஸ் பெயின் செயற்திட்டத்திலும் பணிபுரிந்து வருகின்றார்.

உங்கள் உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இந்த செய்தியை அனுப்பி இவரின் வெற்றியை உறுதிப்படுத்துங்கள்.

இது எங்களின் வெற்றி


ஜனனி ஜனநாயகம் வெற்றி பெற தமிழ் வலை பதிவர்கள் சார்பாக
வாழ்த்துகள் !!!

நன்றி
-சுவிஸ்தமிழ்


மிக சிறந்த ஆங்கில பட தீம் இசை - வீடியோ - I

2 comments


அனைத்து மக்களிடத்திலும் பேராதரவு பெற்ற பல ஆங்கில படங்கள் அந்த படங்களின் காட்சிகள், என்றும் நம் நினைவுகளில் மறக்கா இடம் உண்டு. அது போல் சில படங்களின் தீம் (தீம்க்கு சரியான தமிழ் வார்தை என்ன? தெரிஞ்சவங்க பின்னோட்டதில் சொல்லவும்)

இசை அந்த படத்துக்கு மிக பக்க பலமாக அமையும் அது போல் சில படங்க்களின் தீம் இசை வீடியோ.
James Bond 007 Theme Tune (original)

Titanic Theme Song

Mission Impossible Theme Tune

Pirtates Of The Carribbean Main Theme Tune

Broken arrow soundtrack-Main theme

Die Hard Trilogy OST - Garage Theme

Enemy of The State - Main Theme


Hans Zimmer - Chevaliers Davinci code


இது போல் பலருக்கு பல படங்களின் தீம் இசை பிடித்து இருக்கும் இதன் தொடர்ச்சி மிக விரைவில்.


சு.ப.தமிழ்ச் செல்வன்,சூசை குடும்பங்களை பற்றி - கருணா

0 comments


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் குடும்ப உறுப்பினர்கள் அகதி முகாமிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென தேச நிர்மாண அமைச்சர் கருணா கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் மெனிக் பாம் அகதி முகாமிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது தமிழ்ச் செல்வனது மனைவி மற்றும் பிள்ளைகளை தாம் சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ச் செல்வனது குடும்ப உறுப்பினர்கள் எவ்வித பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாத காரணத்தினால் அவர்கள் சுதந்திரமாக இடம் நகர அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்ச் செல்வனது குடும்ப உறுப்பினர்களை தமது சொந்தங்களுடன் மீள இணைப்பதாக தாம் வாக்குறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சூசையின் குடும்ப உறுப்பினர்களையும் தாம் சந்திக்க விரும்புவதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

அகதி முகாம்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


எல்லா மக்களையும் விடுவிக்க உங்களால் முடியுமா ஐயா!!!!

நீங்கள் சொல்வதை சிங்களவன் எப்படி எடுப்பான் என ஒரு உதாரணம் கீழே




நன்றி
தமிழ்ஸ்கைநியுஸ்


பிரபாகரன் போல் தோற்றம் உடையவர் மீது துப்பாக்கி சூடு

0 comments


விடுதலைப்புலிகளின் பதுங்குழி ஒன்றில் இருந்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மற்றுமொரு நபர் காணப்படும் புகைப்படம் ஒன்றை கிளிநொச்சியில் படையினர், கைப்பற்றியிருந்தனர். அந்த புகைப்படத்தில் காணப்படும் நபர் கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த செல்வந்த வர்த்தகர் என தாம் கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படத்தில் காணப்பட்டவர் பிரபாகரனை போல தோற்றம் கொண்டவராக இருந்ததாகவும் இதனால் பிரபாகரன் போல் தோற்றமுடையவர்கள் புலிகள் அமைப்பில் இருக்கலாம் என சர்ச்சைகள் எழுந்திருந்தாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

குறித்த புகைப்படம் வெளியான பின்னர் அதில் இருந்தாக கூறப்படும் வர்த்தகர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்ததாக காவற்துறையினர் கூறியுள்ளனர். சற்குணராஜா விமலன் என்ற இந்த வர்த்தகர் வடபகுதிக்கு பொருட்களை கொண்டு செல்லும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
Matrix Gun Fire Pictures, Images and Photos
இந்த நிலையில் அவர் நேற்று கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து சுடப்பட்ட படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச் செட்டித் தெருவில் வைத்து இனந்தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். இவர் தனது தந்தையின் வர்த்தகம் சம்பந்தமான விடயங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர். வடபகுதிக்கு அடிக்கடி சென்று வரும் இவர் விடுதலைப்புலிகளின் தலைவருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை காவற்துறைப் பொறுப்பதிகாரி நெரஞ்சன் அபேகுணவர்தனவின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

நன்றி
உலக தமிழ்ச் செய்திகள்


துரோகத்தை விரைவில் கண்டுபிடிப்பேன் - மேரி கொல்வின்

0 comments



தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளா நடேசன், விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோருடன் இறுதிக்கட்ட நேரத்தில் தான் கொண்டிருருந்த தொடர்பை லண்டன் சன்டே டைம்ஸ் செய்தியாளர் மேரி கொல்வின் நேற்று விபரமாக எடுத்துக் கூறியுள்ளார்.

"அது ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு... ஆனால் சில மணி நேரத்தில் இறக்கப் போகும் ஒருவரின் அழைப்பு போன்று அது இருக்கவில்லை. அரசியல் துறைப் பொறுப்பாளர், பாலசிங்கம் நடேசன், திரும்புவதற்கு ஓரிடமும் இருக்கவில்லை போலும்" என சன்டே டைம்ஸ் செய்தியில் மேரி கொல்வின் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே போடுகிறோம்" - செய்மதித் தொலைபேசியில் சிறிலங்காவின் வடகிழக்குப் பகுதியில், கடைசியாக நிலைகொண்டிருந்த மிகச்சிறிய காட்டுப் பகுதிக்குள் இருந்து, 17.05.2009 ஞாயிறு பின்னிரவு நடேசன் என்னிடம் கூறினார். பின்புறத்திலிருந்து இயந்திரத் துப்பாக்கிச் சத்தங்கள் தெளிவாக எனக்குக் கேட்டன.

"ஒபாமா நிர்வாகம் மற்றும் பிரித்தானியா அரசிடம் இருந்து எங்களின் பாதுபாப்புக்கான உத்தரவாதத்தை எதிர்பார்க்கிறோம். எங்கள் பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஏதேனும் உள்ளதா?" என்று அவர் கேட்டார். புலிகளுக்கும் சிறிலங்கா சிங்களவர்களுக்கும் இடையிலான 26 வருட போரில், வெற்றிகண்டுள்ள சிறிலங்கா இராணுவத்திடம், சரணடைவது மிக அபாயமானதென்று அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. 8 வருடங்களுக்கு முன்பிருந்தே நடேசன், புலித்தேவன் ஆகியோரை எனக்குத் தெரியும்.

அப்போது தீவின் 3 இல் 1 பங்கு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது, இவர்கள் இருவரும் தங்களோடு இருந்த ஏனைய 300 போராளிகளையும் அவர்களது குடும்பங்களையும் (பலர் காயமடைந்திருந்தார்கள்) காப்பாற்றுவதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் கையால் தோண்டிய குழிகளுக்குள் அவர்களோடு பதுங்கியிருந்தனர். கடந்த பல நாட்களாகவே புலிகளின் தலைமைக்கும், மற்றும் ஐ.நாவுக்கும் இடைப்பட்ட மத்தியஸ்தராக நான் இருந்து வந்தேன். நடேசன் என்னிடம் 3 விடயங்களை ஐ.நாவுடன் பறிமாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்:

ஆயுதங்களைக் கீழே போடுவதாக.....

தாம் ஆயுதங்களைக் கீழே போடுவதாகவும், தமது பாதுகாப்புக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உத்தரவாதம் தர வேண்டுமென்றும், தமிழர்களுக்கு மற்றுமொரு அரசியல் தீர்வு எடுக்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பிரித்தானிய மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கூடாக நான் கொழும்பில் இருந்த ஐ.நா.விசேட தூதுவர், விஜய் நம்பியாரோடு தொடர்பு கொண்டேன். புலிகளின் சரணடைதலுக்கான கோரிக்கைகளை நான் அவருக்குத் தெரியப்படுத்தினேன். அவரும், தான் அதை சிறிலங்கா அரசுக்குத் தெரிவிப்பதாகக் கூறினார்.

(2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் வடபோர் முனை தளபதியாக கேணல் தீபனும் சிறிலங்காவின் யாழ். மாவட்ட தளபதியாக மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவும் இருந்த போது முகமாலையில் பிடிக்கப்பட்ட படம். (அருகில் லெப். கேணல் அறிவு, தளபதி லோறன்ஸ் மற்றும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன்)


இந்த நடவடிக்கை சமாதானம் வருவதற்கான ஓர் அறிகுறியாகவே எனக்குத் தோன்றியது. எப்போதுமே கலகலப்பாக இருக்கும் புலித்தேவன் பதுங்குக் குழிக்குள் இருந்தவாறு சிரித்த முகத்துடன் ஒரு படத்தை தொலைபேசியில் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தார்.

கடைசி ஞாயிறு இரவில், சிறிலங்கா இராணுவம், மிக நெருங்கி வந்த போது, புலிகளிடன் இருந்து, எந்தவித அரசியல் கோரிக்கையும் புகைப்படங்களும் கிடைக்கவில்லை.

முன்னர் சரணடைதல் என்ற சொல்லைப் பாவிக்க நடேசன் மறுத்தார். ஆனால் அவர் என்னை அழைத்தபோது, அதைத்தான் செய்ய முன்வந்திருந்தார். புலிகளின் பாதுகாப்புக்கு நம்பியாரின் வருகை அவசியம் தேவை என்றும் கூறினார். நியூயோர்க்கில் 24 மணி நேரமும் இயங்கும் அவசரப்பிரிவு ஒன்றினூடாக நம்பியாரைத் தொடர்பு கொண்டேன். அப்போது அங்கே நேரம் காலை 5:30 ஆக இருந்தது. புலிகள் ஆயதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள் என்று அவரிடம் கூறினேன்.

வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரி...

அவரும் தான் நடேசன் மற்றும் புலித்தேவனின் சரணடைதலுக்கான பாதுகாப்பை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நிச்சயமாக்கிக் கொண்டதாகக் கூறினார். அவர்கள் வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரியென்றும் கூறினார்.

சரணடைதலின் சாட்சிக்கு நம்பியாரும் வடக்குக்குப் போகத் தேவையில்லையா என்று நான் அவரிடன் கேட்டேன். அதற்கு அவசியமில்லையென்றும், வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடிக்கும்படியும் நம்பியார் கூறினார். லண்டனில் அப்போது நேரம் ஞாயிறு பின்னிரவு.

நடேசனுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி எடுத்துத் தோல்வியடைந்தேன். தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு தொடர்புக்கு அழைத்து நம்பியாரின் செய்தியைத் தெரிவித்தேன். தென் ஆசியத் தொடர்பிலிருந்து திங்கள் காலை 5.00 மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அவருக்கும் நடேசனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் நினைக்கிறேன் எல்லாமே முடிந்து விட்டது, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று.

சரணடைதல் பிழையானது ஏன்?

அன்று மாலை, சிறிலங்கா இராணுவம் அவர்களது உடல்களைக் காட்டியிருந்தார்கள். சரணடைதல் பிழையாகிப் போனது ஏன்? விரைவில் இதனை நான் கண்டுபிடிப்பேன். ஞாயிறு இரவு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவையும் நடேசன் தொடர்பு கொண்டுள்ளார் எனத் தெரிந்து கொண்டேன். சந்திரநேரு உடனடியாக ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டதாக அறிகிறேன்.

(சந்திர நேரு)
பிந்திய மணித்தியாலங்களில் நடந்தவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். "ஜனாதிபதி தான் நடேசனுக்கும் அவர் குடும்பத்துக்கும் முழுப் பாதுகாப்பு தருவதாக உறுதியளித்திருந்தாரே...? தன்னோடு 300 மக்கள் உள்ளார்கள் என நடேசன் கூறியிருந்தார், சிலர் காயப்பட்டும் இருந்தார்கள். நான் ஜனாதிபதியிடம், "நான் நேரில் போய் அவர்களது சரணடைதலை ஏற்கிறேன்" எனக் கூறினேன்.

அதற்கு ராஜபக்ச, "இல்லை, எங்கள் இராணுவம் மிகவும் பெருந்தன்மையும் கட்டுப்பாடுமுடையது. நீங்கள் போர் நடக்கும் இடத்துக்குச் சென்று உங்கள் வாழ்க்கையை இடருக்குள்ளாக்கத் தேவையில்லை" என்று கூறினார். பசில், ஜனாதிபதியின் சகோதரர், என்னை அழைத்து, "அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், அவர்கள் வெள்ளைக் கொடியை ஏந்த வேண்டும்" என்றவர், அவர்கள் தொடர வேண்டிய பாதையையும் கூறினார். " இப்படிச் சந்திரநேரு என்னிடம் கூறினார்.

சந்திரநேரு நடேசனை காலை 6:20 மணிக்குத் தொடர்பு கொண்டாராம். துப்பாக்கிச் சூட்டின் சத்தம் அப்போதும் கேட்டுக் கொண்டிருந்ததாம். "நாங்கள் தயார். " நடேசன் சந்திரநேருவிடம் கூறினார். "நான் வெளியே வந்து வெள்ளைக் கொடியை ஏற்றிப் பிடிக்கப்போகிறேன்" என்றார். சந்திரநேரு, "கொடியை உயர்த்திப்பிடி சகோதரனே-அவர்களுக்குத் தெரிய வேண்டும். நான் உன்னை மாலையில் சந்திக்கிறேன்" என்று கூறியிருந்ததாக அறிகின்றேன்.

தப்பி வந்தவர் தந்த விபரம்

கொலையிடத்தில் இருந்து தப்பித்து கூட்டத்துடன் வந்திருந்த ஒரு தமிழர் அதன்பின் என்ன நடந்தது என்பதை விவரித்தார். இவர் பின்னர் உதவிப் பணியாளர் ஒருவரோடு கதைக்கும்போது, "நடேசனும் புலித்தேவனும், ஆண்களும் பெண்களுமுள்ள கூட்டத்தோடு, வெள்ளைக் கொடியோடு சிறிலங்கா இராணுவத்தை நோக்கி நடந்து வந்தார்கள். இராணுவம் அவர்களை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தது.

நடேசனின் மனைவி, ஒரு சிங்களப் பெண்மணி. அவர் சிங்களத்தில் கத்தினார். "அவர்கள் சரணடையத்தானே வந்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களைச் சுடுகிறீர்களே..." என்ற அவரது மனைவியும் சுடப்பட்டார். சரணடைய வந்த சகலருமே கொல்லப்பட்டார்கள்". விபரம் கூறிய அந்தத் தமிழ் நபர் இப்போது தனது உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்டிருக்கின்றார்.

(விஜய் நம்பியார்)
ஜனாதிபதியாலும் அவர் சகோதரராலும் விரட்டப்பட்டதால், சந்திர நேரு இப்போது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். கடந்த சில நாட்களாக, ஐ.நாவின் தூதுவராக வந்த நம்பியாரின் பங்களிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அவரின் சகோதரர், சரிஷ், 2002 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்துக்கு ஆலோசகராக இருந்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் தலைமைக் கட்டளை அதிகாரி, சரத் பொன்சேகாவுக்கு ஒரு சிறந்த இராணுவத் தலைவனின் தன்மைகள் உள்ளன என்று சரிஷ் ஒரு தடவை பாராட்டியுமுள்ளார்.

சில பயங்கரவாத நடவடிக்கைகளால் புலிகள் சர்வதேசத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், நடேசனும் புலித்தேவனும், தமிழர் உரிமைப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வையே காண விரும்பியிருந்தார்கள். உயிரோடு இருந்திருந்தால், அவர்கள் தமிழர்களுக்கு நம்பிக்கையான அரசியல் தலைவர்களாகியிருப்பார்கள்."
இவ்வாறு லண்டன் சன்டே டைம்ஸ் செய்தியாளர்


மேரி கொல்வின் அம்மையார் 2001 இல் சிறிலங்கா படைகளின் தன் மீதான மூர்க்க தாக்குதலில் ஒரு கண் பார்வையை இழந்ததை நினைவு கூர்ந்த அவர் அந்த அனுபவம் பற்றி படிக்க இங்கு கிளிக் செய்க


நன்றி
-சங்கதி
-பதிவு

*net photos


இலங்கைக்கு இந்தியா ஆதரவளித்தால் - டி.ராஜா

0 comments


இலங்கையின் உள்விவகாரங்களில் அனைத்துலக நாடுகள் தலையிடக்கூடாது எனும் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் முன்வைக்கவுள்ளதனை இந்தியா ஆதரிக்கக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையின் உள்விவகாரங்களில் அனைத்துலக நாடுகள் தலையிடக்கூடாது எனும் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் முன்வைக்கவுள்ளதனை இந்தியா ஆதரிக்கக்கூடாது.

அதனை இந்தியா ஆதரித்தால் அது தமிழ் மக்களை கைவிட்டதாகவே கொள்ளப்படும். சிறிலங்காவுக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்களை ஏனைய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முன்வைப்பதற்கு எதிராகவே சிறிலங்கா இந்த தீர்மானத்தை முன்வைக்க உள்ளது.

இறுதியாக நடைபெற்ற போரில் பாரிய போரியல் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சிறிலங்கா மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

சிறிலங்காவுக்கு இந்தியா ஆதரவளித்தால் அது சிறிலங்கா அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவே கொள்ளப்படும் என்றார் அவர்.

சிறிலங்கா தொடர்பான சிறப்பு விவாதம் ஒன்றை ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக் குழு நாளை மேற்கொள்ள உள்ளது.

47 அங்கத்துவர்களை கொண்ட சபையின் 17 அங்கத்துவ நாடுகளின் வேண்டுகோள்களைத் தொடர்ந்தே இந்த விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி
-புதினம்


பத்மநாதனை கைது செய்ய மகிந்தவின் கோரிக்கை!

0 comments


தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனை கைது செய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உதவ வேண்டும் என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வீதித் தடைகளை அகற்றி மக்களை சுதந்திரமாக நடமாட அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என பான் கீ மூன் சிறிலங்கா அரச தலைவரை கேட்டிருந்தார். ஆனால், விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சங்களால் தான் வீதித்தடைகள் எற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவை உடனடியாக நீக்கப்பட மாட்டாது எனவும் மகிந்த தெரிவித்திருந்தார்.

மேலும் விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனை கைது செய்து நாடு கடத்துவதற்கும் ஏனைய நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர்களை கைது செய்வதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உதவிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மகிந்த ஐ.நா.வின் செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி
-புதினம்


அதிர்வு தளத்தில் இருந்து ஒரு அவசர வேண்டுகோள்

1 comments


எம் உறவுகளே தேசிய தலைவர் பற்றி பல செய்திகள் தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களில் வெளிவருகின்றன. இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிர்வு இனையம் வேண்டி நிற்கிறது. மக்களைக் குழப்பும் நோக்கில் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

புலம் பெயர் வாழ் எமது உறவுகளே நாம் புரிந்துகொள்ள வேண்டிய விடையம் ஒன்று உள்ளது. நாம் தற்போது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இது மக்கள் சக்தியாக உருமாறி சர்வதேசத்தின் கதவுகளை தட்டி மெல்லத் திறந்துள்ளோம். அமெரிக்கா, பிரித்தானியா பேன்ற நாடுகள் எமது தொடர்போராட்டம் காரணமாக தற்போது எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்கின்றன.

இன் நிலையில் இந்தப் போராட்டங்களை நிலை குலைக்க சில சக்திகள் முணைகின்றன. எமது விடுதலைப் புலிகளின் தலைமை குறித்த நேரத்தில் தகுந்த முடிவை எடுக்கும். அந்த முடிவு இலங்கையில் இருந்து வெளிவரும் என்பதில் ஜயமில்லை. அதுவரை நாம் பொறுமைகாப்போம். மக்கள் சக்தியாக ஒன்றுபட்டு எமது போராட்டங்களை வழமைபோல கொண்டுசெல்வோம்.

நன்றி
-அதிர்வு


பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - வைகோ

0 comments


தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும், உலகத் தமிழர்களின் இதயநாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார். அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார்.

யுத்தகளத்தில் இருந்து வேனில் அவர் தப்பி ஓடும்போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று, ஒரு பொய்ச்செய்தியை சிங்கள அரசு முதலில் வெளியிட்டது. இரண்டு நாள்கள் கழித்து, நந்திக்கடல் பகுதியில் அவர் உடல் கண்டு எடுக்கப்பட்டதாக, இன்னொரு பொய்யைச் சொன்னது.

மே 19 ஆம் நாள் அன்று, ‘இதுதான் பிரபாகரனின் உயிர் அற்ற சடலம்’ என்று, முதலில் காட்டப்பட்ட அந்த உடலில், முகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்கள் பளிச்சிட்டன. முகம், நன்கு மழிக்கப்பட்டு இருந்தது. அவருடைய உடல் பருமனுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத உடல் அமைப்பு என்பதால், இது அக்கிரமமான பொய் என்பதை அறிந்து கொண்டோம்.

சில மணி நேரங்களில், வேறு ஒரு சடலத்தை சிங்கள இராணுவம் காட்டியது. இதில், வலது கண் மூடியும், இடது கண் இலேசாகத் திறந்தும் இருந்தது. முன் நெற்றியில் இருந்த காயத்தை, துணி போட்டு மறைத்து இருந்தனர். பகைவர்கள் சுட்டு இருந்தால், உடலில் எராளமான குண்டுகள் பாய்ந்து இருக்க வேண்டும். அவரே ஒருவேளை தன்னைச் சுட்டுக் கொண்டாரா என்பதையும் ஏற்பதற்கு இல்லை.

தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள முடிவு எடுத்தால், வலது காதை ஒட்டினாற்போல் கன்னப் பொருத்தில்தான் ரவையைச் செலுத்த வேண்டும் என்று, அவரே போராளிகளுக்குப் பயிற்சி அளித்தவர் ஆவார். மேலும்,இரண்டாவதாகக் காட்டப்பட்ட உடலும், முகத்தோற்றமும், இது சிங்கள இராணுவத்தின் செப்பிடுவித்தை, ஏமாற்று வேலை என்பதை எடுத்துக்காட்டியது.

அவரது சடலம் கிடைத்தது என்றால், அவரது குடும்பத்தினர், மெய்க்காப்பாளர்கள் சடலங்கள் எங்கே? என்ற கேள்விக்கு, சிங்கள இராணுவத்தின் பதில் ஏற்கத்தக்கதாக இல்லை. பிரபாகரனின் சடலம்தான் என்பதை, மரபு அணு சோதவீனையால் மெய்ப்பிக்க வேண்டியது சிங்கள அரசின் கடமை ஆகும். பிரபாகரனின் தந்தையார், உயிருடன்தான் இருக்கிறார். எனவே, அவருடைய உடம்பில் இருந்து, சோதனைக்குத் தேவையானவற்றை எடுத்து, டி.என்.ஏ. சோதனையை நடத்தி, சந்தேகத்துக்கு இடம் இன்றி, இறந்தது பிரபாகரன்தான் என்று உலக நாடுகளுக்கு, சிங்கள அரசு ஏன் அறிவிக்கவில்லை?

அவர்களிடம் இருப்பதாகச் சொல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, அவசர அவசரமாக எரித்துச் சாம்பலாக ஆக்கி விட்டோம்; இந்துமாக் கடலில் கரைத்து விட்டோம் என்று சிங்கள இராணுவத் தளபதி, கொலை வெறியன் சரத் பொன்சேகா அறிவித்ததன் மர்மம் என்ன?

இந்நிலையில், மே 18 ஆம் நாள் அன்று, பிரபாபரகன் உயிருடன் இருக்கிறார் என்று, ‘சேனல் 4’ என்ற இலண்டன் தொலைக்காட்சியில் அறிவித்த விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத் தொடர்புப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், திடீரென்று அந்தர் பல்டி அடித்து, ‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று அறிவித்தது, கடைந்து எடுத்த அயோக்கியத்தனமான துரோகச் செயல் ஆகும்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு ஏகப் பிரதிநிதியாக அறிக்கை விடும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. மிக அண்மையில்தான், அவர் இந்தப் பொறுப்புக்கே நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களோடும், துரோகம் செய்து வெளியேறியவர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, விடுதலைப்புலிகள் அமைப்பில் குளறுபடிகளை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டு உள்ளதாகத்

தெரிகிறது. வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பிடிக்குள் பத்மநாதன் சிக்கி இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்து இருக்கின்றன.

தமிழ் ஈழத்தில் துன்பமும், துயரமும் சூழ்ந்து, ஈழத்தமிழ் மக்கள், மனித குலம் சந்தித்து இராத அவலத்துக்கும் அழிவுக்கும் ஆளாகி இருக்கின்றனர். ஈழத்தமிழ் இளம்பெண்கள், சிங்கள இராணுவ முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படு கின்றனர். தமிழ் இனத்தையே வருங்காலத்தில் சிங்களக் கலப்பு இனமாக்க, கொடியவன் இராஜபக்சே திட்டமிட்டு விட்டான். இரத்த வெறி பிடித்த புத்த பிக்குகள், புராதனமான தமிழர்களின் ஊர்களுக்கு, சிங்களப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று அறிவித்து உள்ளதை எண்ணும்போது, நம் இரத்தம் கொதிக்கிறது. ஏற்கனவே போராளிகளும், தமிழ் மக்களும் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள், உணவு இன்றி, மருந்து இன்றி, உயிர் துறக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இப்படிப்பட்ட கொடுந்துயரில் ஈழத் தமிழ் இனம் சிக்கி வதைபடும் நேரத்தில், செல்வராசா பத்மநாதனின் அறிவிப்பு மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத்தமிழ் மக்களும், தாய்த்தமிழகத்திலும், தரணி எங்கும் உள்ள தன்மான உணர்வு கொண்ட தமிழர்களும், இதை நம்ப வேண்டாம்; தலைவர் பிரபாகரன் அவர்கள், உயிருடன் இருக்கிறார். தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அனைத்து உலகப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர், அறிவழகன்,

தனது அறிக்கையில், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்து உள்ளதையும் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்

தலைவர் பிரபாகரன் அவர்கள் வென்றெடுக்கக் களம் அமைத்த இலட்சியங்களை வெல்லவும், ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கவும் உறுதிகொண்டு நம் கடமைகளைத் தொடர்வோம்.


நன்றி
-பாரிஸ்தமிழ்


பிரபாகரன் பயன்படுத்திய செல்போன் கிடைத்தது

0 comments


பிரபாகரன் போரின் இறுதி நாள் அன்று அவரது அதி நவீன தொழில் நுட்பம் கொண்ட செட்லைட் செல்போனில் உலகில் பல பகுதியில் இருத்து பலர் தொடர்பு கொண்டுயுள்ளனர்.
அவர் யாரிடம் என்ன பேசினார் என்று இலங்கை புலணாய்வு துறை
மிக ரகசியமாக தகவல்களை சேகரித்து வருகிறது.


அவர் இறுதியாக செல் பேசியில் பாதிவாகியுள்ள நாடுகள் மலேசியா,சிங்கபூர் இந்தியா, இத்தாலி மற்றும் அதிக தொடர்பு கொண்டவர் குமர பத்மநாதன்.

News source
asiantribune.com


உஷார் ஐயா ATM Card உஷாரு - வீடியோ

0 comments


நீங்கள் பணம் எடுக்க ATM கார்டு பயன்படுத்தும் போது இப்படியும் நடக்க வாய்ப்புள்ளது உங்களுக்கு தெரியாமலே உங்கள் PIN பாதுகாப்பு எண் திருடப்படுகிறது
எனவே பணம் எடுக்கும் போது கவனம் செலுத்துங்கள்.




இந்த வீடியோவையும் அவசியம் பார்க்கவும் Part I


வீடியோ Part II