விடுதலைப்புலிகளின் பதுங்குழி ஒன்றில் இருந்து, அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மற்றுமொரு நபர் காணப்படும் புகைப்படம் ஒன்றை கிளிநொச்சியில் படையினர், கைப்பற்றியிருந்தனர். அந்த புகைப்படத்தில் காணப்படும் நபர் கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த செல்வந்த வர்த்தகர் என தாம் கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படத்தில் காணப்பட்டவர் பிரபாகரனை போல தோற்றம் கொண்டவராக இருந்ததாகவும் இதனால் பிரபாகரன் போல் தோற்றமுடையவர்கள் புலிகள் அமைப்பில் இருக்கலாம் என சர்ச்சைகள் எழுந்திருந்தாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
குறித்த புகைப்படம் வெளியான பின்னர் அதில் இருந்தாக கூறப்படும் வர்த்தகர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்ததாக காவற்துறையினர் கூறியுள்ளனர். சற்குணராஜா விமலன் என்ற இந்த வர்த்தகர் வடபகுதிக்கு பொருட்களை கொண்டு செல்லும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் நேற்று கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து சுடப்பட்ட படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச் செட்டித் தெருவில் வைத்து இனந்தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். இவர் தனது தந்தையின் வர்த்தகம் சம்பந்தமான விடயங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர். வடபகுதிக்கு அடிக்கடி சென்று வரும் இவர் விடுதலைப்புலிகளின் தலைவருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை காவற்துறைப் பொறுப்பதிகாரி நெரஞ்சன் அபேகுணவர்தனவின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
நன்றி
உலக தமிழ்ச் செய்திகள்
Headline
பிரபாகரன் போல் தோற்றம் உடையவர் மீது துப்பாக்கி சூடு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment