Headline

உண்ணாவிருதத்தில் சத்தியராஜின் வீடியோ பேச்சு!!









சினிமா பாடலாசிரியை தாமரை பேசுகையில், கலைஞர்கள் எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவான நிலையையே எடுக்கின்றனர்; நான் அப்படியில்லை; எதையும் வெளிப்படையாக பேசுவேன். தமிழ் ஒரு இனம்; மலையாளி ஒரு இனம். இந்தியன் எப்படி ஒரு இனமாகும்? இதைக் கேட்டால் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறேன் என்கின்றனர்.

சின்னதாகக் கூட உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை. இலங்கைப் பிரச்சனை பற்றி பேசும்போது "ஜெயலலிதா எதிர்க்கட்சியில் இருப்பதால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், ஆட்சியிலிருப்பவர்கள் அப்படி பேச முடியாது'' என்று கருணாநிதி கூறுகிறார். முதல்வராக இருக்கும் கருணாநிதி "என்னால் முடியாது'' என்று சொல்லலாமா? பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் உங்கள் மதிப்பு மக்கள் மனதில் உயர்ந்திருக்கும்.

ஈழப் பிரச்னையை பொறுத்தவரை ஜெயலலிதா அமாவாசை என்றால் கருணாநிதி அமாவாசைக்கு மறுநாள். சோனியா தான் எல்லாவற்றுக்கும் சூத்திரதாரி என்றார்.

கவிஞர் புலமைப்பித்தன் பேசுகையில், ஒரு ராஜிவ் உயிருக்கு இன்னும் எத்தனை லட்சம் ஈழத் தமிழர்கள் இரையாக வேண்டும்?. புறத்தே வெளுத்து அகத்தே கருத்துள்ள சோனியாவே சொல்லிவிடுங்கள் என்றார்.

நன்றி
-தட்ஸ்தமிழ்

2 comments:

♫சோம்பேறி♫ said...

இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்காகி விடக்கூடாது:-(

puduvaisiva said...

"சோம்பேறி
இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்காகி விடக்கூடாது:-("

வாங்க சோம்பேறி
தமிழ் நாட்டுல பாதி பேர் டாஸ்மாக் தண்ணிய இருக்காங்க
பல பெண்கள் டிவி சீரியல சீர் அழிஞ்சி கிடக்கு
இப்ப கோமாலிகள் தேர்ந்தேடுக்க தேர்தல் வேறு
இந்த நிலையில இவங்க போரட்டம் ஒரு சிறு அதிர்வை
ஏற்படுத்தியது உண்மை.