மேல்மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்த 30 வீதமான மக்கள் மாடுகளுக்கு நிரானவர்கள் என்பது தெளிவாவதாகவும், சோறுக்கு பதிலாக புற்களை உண்ணுபவர்களாகவே கருதப்பட வேண்டுமெனவும் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மூன்று தசாப்த காலமாக நீடித்து வரும் யுத்தத்திற்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மனிதர்களாக கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஜனநாயக ரீதியில் தமக்கு விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கக் கூடிய உரிமை காணப்படும் நிலையில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் இவ்வாறான ஓர் கருத்தை வெளியிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கே அதிகளவிலான சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
இவ்வாறான ஓர் பின்னணியில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தோர் மாடுகளுக்கு நிகரானவர்கள் என அமைச்சர் வெளியிட்ட கருத்து சிறுபான்மை மக்களை கேவலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதென அரசியல் நோக்கர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நன்றி
-தமிழ்வின்
Headline
"அவர்கள் மாடுகள்" - இலங்கை அமைச்சர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment