Headline

ஈழதமிழர் மீது சீனாவின் நயவஞ்சக செயல்!!!- net photo
இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்த நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளில் இந்த மூன்று நாடுகளும் அடங்கியுள்ளன.
சிறிலங்கா அரசாங்கம் யுத்த சூனிய பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, திங்கட்கிழமை நடத்திய அந்தரங்க கூட்டத்தில் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் தூதுவர் விஜய் நம்பியாரிடமிருந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வது பற்றி ஆராய்ந்தது.

இலங்கை பற்றிய அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரித்தானியாவின் கோரிக்கையை ஆதரிப்பதாக அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி அலெஜான்றோ வூல்வ் தெரிவித்திருக்கிறார்.இலங்கை பற்றிய அறிக்கையை பிரான்சே அந்தரங்க கூட்டத்தில் முதலில் கோரியுள்ளது.

இதன்போது மோதல் தவிர்ப்பு வலயத்தில் சிறிலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஆராயப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இலங்கை சூழ்நிலையை ஒரு விசேட சூழ்நிலையாகக் கருதி பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புப் பேரவையின் தலைவர் குளோட் ஹெலர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவிற்கான பிரித்தானியாவின் விசேட தூதுவர் டேஸ் பிறவுண் நியூயோர்க் சென்றிருக்கிறாரா? என்று பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி ஜோன் சவேர்ஸிடம் கேட்டபோது அவர் ஆம் என்று பதிலளித்தார். திங்கட்கிழமை மதியமளவில் பிறவுண் பாதுகாப்பு சபைக்கு செல்லவில்லை. ஆனால், நம்பியாரிடமிருந்து அறிக்கையை பெறுவது என்பதே சபை உறுப்பினர்களின் பொதுவான நோக்கமாக இருந்தது என்று பாதுகாப்பு சபைத் தலைவரான மெக்ஸிகோவை சேர்ந்த குளோட் ஹெலர் தெரிவித்தார்.

இலங்கை விவகாரம் மிக விசேடமானது என்பது எங்களுக்கு தெரியும் என்று குறிப்டபிட்ட அவர், அது பற்றி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற ஆர்வம் உண்டு என்றும் கூறினார். இலங்கை விவகாரத்தை விசேடமானது என்று கோடி காட்டியமை வட இலங்கையின் கரையோரத்தில் இரத்தக் களரிக்கு பாதுகாப்புச் சபை கொடுக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

மேற்கு சூடான் பிராந்தியமான தர்பூரில் இடம்பெறும் சிறுசிறு சண்டைகள் பற்றி பாதுகாப்பு சபையில் பல கூட்டங்களை நடத்தி ஆராயும் போது இலங்கையில் சிவிலியின்கள் நிறைந்து காணப்படும் பகுதிகளில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் பாதுகாப்பு சபையின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலிருந்து விலக்கப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை விடுதலைப் புலிகளை விமர்சித்து பான் கீ மூன் விடுத்த அறிக்கையில் யுத்த சூனிய பிரதேசத்தில் யார் பயங்கர எறிகணை, ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதென தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை நடைபெற்ற அந்தரங்க ஆலோசனைகளின் போது உரையாற்றிய சீனப் பிரதிநிதி, விடுதலைப் புலிகள், சபைக் கூட்டத்தில் தங்கள் விவகாரம் எடுத்துக் கொள்ளப்படுவதை பயன்படுத்தி தங்களை சட்டபூர்வ அமைப்பு என்று கூற முயல்வார்கள் என்றும் சபை அது பற்றி எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இது சிறிலங்கா அரசாங்கத்தின் நேரடிவாதமாகும். உதாரணமாக, சூடான் நீதியையும் சமத்துவ இயக்கத்தையும் பலப்படுத்துவது தொடர்பாக வெற்றி பெறாமல் முன்னேறியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதேவேளை, தூதுவர் ஹெலர் குறிப்பிட்டது போன்று இலங்கை விவகாரம் மிக விசேடமானது என்று கூறினார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கையை சீனா முழுமையாக ஆதரிக்கின்றது என சீனாவின் வெளியுறவுத்துறை பேச்சாளர் ஜியாங் யூ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் 24 மணிநேர அவகாசம் கொடுத்துள்ளது பற்றி கேட்கப்பட்டபோது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நேபாளமும், சிறிலங்காவும் சீனாவின் நண்பர்கள், அந்த அரசுகளின் பாதுகாப்பிற்கு நாம் ஆதரவுகளை வழங்குவதுடன், அவற்றின் தேசிய ஒருமைப்பாட்டையும் நாம் பாதுகாப்போம்.

இந்த இரு நாடுகளினதும் அரசியல் உறுதித்தன்மையை பேணுவது சீனாவின் கடமை. சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகள் மீது மேற்கொண்டுவரும் படை நடவடிக்கையை சீனா முழுமையாக ஆதரிக்கின்றது. விடுதலைப் புலிகளை அழித்து, அவர்களது தலைவர் வே.பிரபாகரனை அகற்றுவதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கும் சீனா ஆதரவுகளை வழங்கும் என்றார் அவர்.

இதுஇவ்வாறிருக்க, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மூடிய கதவு கூட்டத்தின் போது பாதுகாப்புப் பேரவை விவாதங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்படக் கூடாதென சீனா கோரிக்கை விடுத்திருந்ததாக இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, நம்பியார் திரும்பும் வரை பாதுகாப்பு சபையில் அறிக்கையை வெளியிட முடியாததால் நம்பியார் எங்கே இருக்கிறார் என்று இன்னர் சிற்றி பிறெஸ் வினவியது. நம்பியார் நியூயோர்க் திரும்பும் வழியில் இந்தியாவில் தரித்து நிற்பதாக இன்னர் சிற்றி பிறெஸ்ஸுக்கு தெரிவிக்கப்பட்டது.

நம்பியார் செவ்வாய் காலையில் நியூயோர்க் திரும்பிவிடுவார் என்று பான் கீ மூனின் அலுவலகம் தெரிவித்த போதிலும் புதன்கிழமைக்கு முன் அவர் திரும்ப மாட்டார் என்று பாதுகாப்பு சபை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் பின்னர், இலங்கை அரசாங்கத்தின் காலக்கெடு முடிவடைந்து 24 மணித்தியாலத்தின் பின்னரே இலங்கை பற்றிய அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

நன்றி
தமிழ்வின்

25 comments:

Anonymous said...

தமிழர்களே சைனா பொருள்களை புறக்கணியுங்கள்.