Headline

கோக் அம்பாசிடராக நடிகர் விஜய் ஒப்பந்தம்




கொகோ கோலா குளிர்பானத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் விஜயை ஒப்பந்தம் செய்துள்ளது கோக் நிறுவனம்.

குளிர்பான நிறுவனங்கள் தங்களது பிராண்ட் அம்பாசிடராக பிரபல நடிகர்களையும், கி‌ரிக்கெட் வீரர்களையும் நியமிப்பது வழக்கம். தமிழ்நாட்டில் கோக் குளிர்பானத்தின் அம்பாசிடராக நடிகர் விஜய் 2000 - 2003 வரை நியமிக்கப்பட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தை இந்த வருடம் மீண்டும் புது‌ப்பித்திருக்கிறது கோக் நிறுவனம்.

தமிழகத்தில் பிரபல நடிகர்கள் வ‌ரிசையில் முதலிடத்தில் விஜய் இருப்பதால் கோக் நிறுவனம் மீண்டும் அவரை தேர்வு செய்துள்ளது.

விஜய் இடம்பெறும் கோக் விளம்பர‌ங்கள் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ஷூடடிங் தற்போது நடந்து வருவதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

நன்றி
செய்தி.காம்

2 comments:

Anonymous said...

Sell coke stocks!

puduvaisiva said...

Thanks for your comment
Anony