வன்னி: வன்னிப் போரில் விடுதலைப் புலிகளின் கமாண்டோ படையும் களமிறங்கியது. இந்தப் படை சிறுசிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, பெரும் படைகள் நிலைகொண்டுள்ள பகுதிகளில் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.
இந்த படையின் முதல் தாக்குதலில் சிங்கள ராணுவத்தின் முதலாவது ரெஜிமெண்டில் ஒரு முக்கிய அதிகாரி உள்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை கொழும்பிலிருந்து வெளிவரும் லக்பிக ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 'லக்பிம' பாதுகாப்பு பத்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
விடுதலைப் புலிகளின் 15 பேர் கொண்ட கமாண்டோ அணி, முதலாவது சிங்க ரெஜிமென்ட் பட்டாலியன் நிலைகொண்டிருந்த பகுதிக்குள் கடந்த வாரம் ஊடுருவிய போது கடுமையான போர் மூண்டது.
இத்தாக்குதலின் போது அதிகாரி ஒருவர் உட்பட 7 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன் பின்னர், அந்த அணியில் இருந்த கரும்புலி வீரர் ஒருவர் 11 ஆவது பட்டாலியனின் அதிகாரி மேஜர் திசந்த பெர்னாண்டோ பயணம் செய்த ஜீப் மீது தாக்குதலை நடத்தினார்.
இத்தாக்குதலின் போது வாகனத்தின் டிரைவர் கொல்லப்பட்டார். ஆனால், கட்டளை அதிகாரி அந்த வாகனத்தில் பயணம் செய்யாததால் அந்த அதிகாரி உயிர் தப்பிவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற 'கமாண்டோ புலிகள்' ராணுவத்தின் அடுத்தடுத்த பிரிவுகளிலும் ஊடுருவியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நன்றி
- தட்ஸ்தமிழ்
Headline
வன்னி தாக்குதலில் புலிகளின் கமாண்டோ அணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment