இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் தமிழ் ஈழ உணர்வாளர்கள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இயக்குநர் மணிவண்ணன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது,
’’தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சிக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட மாட்டோம் என்று அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்.
இலங்கையை இரண்டாக்கி அதில் ஒன்றை பிரபாகரன் கையில் கொடுக்க வேண்டும் என்பது ஆசையல்ல. அங்கு மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு.
இலங்கையில் ராணுவ தளம், ராணுவ கருவிகள் மற்றும் அதிகாரிகளை அழியுங்கள். ஆனால் மிகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த சிங்கள சிப்பாய்களை கொல்லாதீர்கள்.
விளை நிலங்களை சேதப்படுத்தாதீர்கள் என தாய் மண்ணை காப்பாற்ற பிரபாகரன் நாகரீகமாக போரினை நடத்துகிறார்.
இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியின் முக்கிய இலாக்காக்களை வைத்திருப்பதால் அந்நாட்டு போருக்கு இறுதி வடிவம் கிடைக்கவில்லை.
புரட்சியாளர்கள் ஆயுதத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் ஆயுதத்தை கையில் எடுக்க கட்டாயப்படுத்துகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.
நன்றி
நக்கீரன்
Headline
புரட்சியாளர்களை ஆயுதத்தை கையில் எடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்:மணிவண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment