இலங்கைத் தமிழர்கள் குறித்து அக்கறை காட்டுவது போல நடித்து தமிழர்களை ஜெயலலிதாவால் ஏமாற்ற முடியாது என்று திமுக எம்.பி. கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த தமிழக அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஏழை மக்களின் பாராட்டை பெற்ற இந்த பட்ஜெட்டை மருத்துவ மனையில் இருந்து கொண்டே முதல்வர் உருவாக்கினார்.
ஆண்டு வருமானம் 24 ஆயிரத்துக்கு குறைவாக உள்ளவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் மருத்துவ காப்பீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் பாராட்டுகின்றனர்.
மருத்துவமனையில் கூட ஓய்வு எடுக்காத நமது தலைவரை பார்த்து ஓய்வு எடுப்பதற்கு என்றே பிறந்த ஒருவர் ஓய்வு எடுக்க கூறுகிறார். பாதிநாள் ஊட்டியில் இருக்கிறார், மீதிநாளில் சிறுதாவூரில் இருக்கிறார். யாருமே பார்க்க முடியாத அவரிடம் இருந்து அறிக்கை மட்டும் வரும்.
இலங்கை தமிழர்கள் மீது ஜெயலலிதாவுக்கு திடீரென்று அக்கறை வந்துள்ளது. தமிழர்கள் கொல்லப்பட்டு, பெண்கள் மானப்பங்கம் செய்யப்பட்டபோது வாயை மூடி மவுனமாக இருந்த அவர் இப்போது உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறுகிறார்.
ஒரு போர் என்றால் மக்கள் சாவது சகஜம் தானே என்று இலங்கை ராணுவத்துக்காக ராஜபக்சேவை விட அதிகம் வக்காலத்து வாங்கியவர் இந்த ஜெயலலிதா. இப்போது உண்ணாவிரதம் என்று தமிழர்களை ஏமாற்ற முடியாது.
இவரை பார்த்து ராஜபக்சேயும் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தாலும் இருப்பார். ஏனெனில் இரண்டு பேரின் குரலும் ஒன்றுதான். நாம் மக்களுடன்தான் முதல் கூட்டணி இது 40 தொகுதியிலும் வெற்றி பெறும் என்றார் அவர்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
Headline
உண்ணாவிரதம் இருப்பதாக கூறி தமிழர்களை ஜெ.வால் ஏமாற்ற முடியாது - கனிமொழி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment