Headline

கூட்டணியில் திருமா இருக்கக் கூடாது: காங். தொண்டர்கள் ரத்த கையெழுத்து




காங்கிரஸ் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டையில் காங்கிரஸ் தொண்டர்கள் ரத்த கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளனர்.

பாராளுமன்றத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேளையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்த கூட்டணியில் கடந்த சட்டமன்றத் தேர்தல் முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அங்கம் வகிக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்திக்கு ரத்த கையெழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து ரத்த கையெழுத்திட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கூறுகையில், தமிழகத்தில் பல இடங்களில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலைகளை விடுதலைச் சிறுத்தைகள் அவமதித்துள்ளனர். மேலும் சத்திய மூர்த்தி பவன் முன்பு காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியுள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பேனர்களை சேதப்படுத்தியுள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியை இழிவுப்படுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவ்ன் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் காங்கிரஸ் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம்.

அதனால் தான் இந்த ரத்த கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளோம். இந்த கடிதத்தை தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைப்போம் என்றனர்.

நன்றி
நக்கீரன்

0 comments: