Headline

ஆஸ்கரை விட உயர்ந்தவர் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்




இளையராஜாவின் இசைக்கு முன்பு ஆஸ்கர் விருது மிகச் சாதாரணமானது. சர்வதேச எல்லைகளைக் கடந்தவர் இளையராஜா. ஆஸ்கர் விருதை விட உயர்ந்தது இளையராஜாவின் இசை என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தாயகம் திரும்பியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பிற்பகல் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட செய்தியாளர்ககள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் என குவிந்து விட்டனர். ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ரஹ்மானின் பேட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்தன.


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஹ்மான். அப்போது இசைஞானி இளையராஜாவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

இளையராஜா குறித்து ரஹ்மான் கூறுகையில், இளையராஜாவுக்கு முன்பு இந்த ஆஸ்கர் விருதுகள் சாதாரணமானவை. இளையராஜாவின் இசை சர்வதேச எல்லைகளைக் கடந்தது.

சரியான முறையி்ல் அவரது இசை எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் எப்போதோ அவர் ஆஸ்கர் விருதினை வென்றிருப்பார் என்று புகழாரம் சூட்டினார்.

இந்தியப் படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஹ்மான், ஆஸ்கர் தரத்திற்கு ஏற்றபடி படம் எடுத்தால் நிச்சயம் நமது படங்களுக்கும விருது கிடைக்கும் என்றார்.

பேட்டியின் நிறைவில், செய்தியாளர்கள் வேண்டுகோளுக்கிணங்க ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலின் சில வரிகளைப் பாடினார் ரஹ்மான்.

நன்றி
- தட்ஸ்தமிழ்

0 comments: