Headline

Feb
27,
2009

தமிழர்கள் போர் நிறுத்த போராட்டம்:மீனவர்கள் மீது ராணுவம் ஆத்திரம்?



ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 640 விசைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இவைகள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்கள கடற் படையினர் 7 அதிநவீன படகில் வந்து சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை தாக்கினர்.

இதில் சூசை அந்தோணி ,முத்து லிங்கம், அருள்தாஸ் உள்பட 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகாயம் அடைந்து தனியார், அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று சென்றனர்.

இதில் ராஜா என்பவர்ராம நாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இலங்கை கடற்படை தாக்கு தலில் டீசல், பல லட்சம் ரூபாய் மீன்பிடி சாதனங்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே பெரும்பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

இதற்கு மீனவ சங்கம்,

''தமிழ்நாட்டில் இலங்கையில் தமிழர் பாதுகாக்கப்படவேண்டும், போர்நிறுத்தம் செய்ய பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகிறது. இதனால் ஆத்திரம் மடைந்த ராணுவத்தினர் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களை தாக்கி வருகின்றனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவும், தமிழர்கள் பாது காக்கப்பட வேண்டும் என்பதிலும் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை.

போராட்டம் என்ற பெயரில் சிங்களஅரசையும்,ராணுவத்தையும் எதிர்த்து குரல் கொடுப்பதைதொலைக்காட்சி மூலம் பார்ப்பதால் அதன் எதிரொலியாக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

நன்றி
நக்கீரன்

0 comments: