

-photo file copy
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும், தேசிய அளவில் பாஜகவின் வெற்றிக்கு மாயாவதி மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருப்பார் என்றும் பிரபல ஜோதிடர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர்.
பிரபல ஜோதிடர் டாக்டர் எஸ்.வி.நகந்த், ஜோதிடர் டாக்டர் எஸ்.எம்.சிலகுரி, ஜோதிடர் டாக்டர் எஸ்.சதுர்வேதி, ஜோதிடர் பி.மதன்லால், ஜோதிடர் வி.ராதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள கணிப்பில்,
தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி பலம் கிடைக்காது. பாஜகவை விட காங்கிரசுக்கு சில இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும்.
மத்தியில் மீண்டும் கூட்டணி ஆட்சி தான் ஏற்படும். ஆனால் இது அதிக நாள் நீடிக்காது. விரைவிலேயே ஆட்சி கவிழும்.
தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவுக்கு தற்போதைய கிரக நிலைகள் சாதகமாக இல்லை. பாஜகவுக்கு கர்நாடகத்தில் நல்ல வெற்றிகிடைக்கும். ஆனால் அத்வானி ஜாதகத்தின்படி அவருக்கு ராசியான திசை எதுவும் இல்லை. இதனால் அவர் பிரதமர் பதவியில் அமர முடியுமா என்பது சந்தேகமே. அதே நேரத்தில் சோனியா காந்திக்கு கிரக அமைப்புகள் சாதகமாக உள்ளன.
பாஜகவின் வெற்றிக்கு மாயாவதி தான் மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருப்பார். காங்கிரசுக்கு ஆந்திராவில் தான் கணிசமான வெற்றிகிடைக்கும்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கே அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும். பிகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெரும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி
-தட்ஸ்தமிழ்
Headline
திமுக கூட்டணியே வெல்லும்-ஜோதிடர்கள் கணிப்பு
6 commentsதேர்தல் பிரச்சார நோட்டீஸில் இலங்கை பிரச்சனை பற்றி அச்சடிக்க தடை
5 comments

தமிழகத்தில் வருகிற மே 13-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பணியை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.
தேர்தலை சுமூகமாக நடத்தவும், வாக்காளர்கள் அச்சமின்றி, குழப்பமின்றி வாக்களிக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது தேர்தல் பிரசாரத்துக்கு நோட்டீஸ் அடிக்கும் அச்சகங்களுக்கும் தேர்தல் தொடர்பாக வெளியிடும் நோட்டீஸ்கள், சுவரொட்டிகள் தொடர்பாகவும் புதிய விதிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
* வன்முறை, கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக நோட்டீஸ் அடித்துக் கொடுக்கக்கூடாது.
* ஜாதி, மத அமைப்புகள் கொடுக்கும் உணர்ச்சியை, கிளர்ச்சியை தூண்டும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் அச்சடிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
* மத உணர்வை தூண்டும் சட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் கேலி சித்தரங்களை அச்சடிப்பதை கை விட வேண்டும்.
* தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புக்கும், ஜனநாய கத்துக்கும் எதிரான சுவரொட்டிகள் அடிக்கவே கூடாது.
* இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எவ்வித வாசகமும் இடம்பெறவே கூடாது.
* அச்சகங்கள் மற்றும் பிளக்ஸ் போர்டு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை தங்கள் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தணிக்கை செய்து கொள்ள வேண்டும்.
நன்றி
நக்கீரன்