சூரசம்ஹாரத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். இதேபோல சென்னை வடபழனி உள்ளிட்ட கோவில்களிலும் இன்று சூர சம்ஹாரம் நடைபெறுகிறது.
இந்துக்கள் கடைப்பிடிக்கும் விரதங்களில் மிக முக்கியமானதாக மகா கந்த சஷ்டி விரதம் அமைந்து உள்ளது. முருகப் பெருமான் சூரபத்மனுடன் போரிட்டு சூரனை சம்ஹாரம் செய்ததைக் குறிப்பிடும் வகையில், ஐப்பசி மாதம் வளர்பிறையில் முருக பக்தர்கள் மகா கந்த சஷ்டி விரதத்தை தொடங்குகிறார்கள்.
கடந்த 18-ந் தேதி கந்த சஷ்டி விரதம் தொடங்கியது. சூரனை சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூர் என்பதால், சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருச்செந்தூரில் 6 நாட்கள் தங்கி கந்த சஷ்டி கவசம், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் உள்பட முருகப்பெருமான் பாடல்களை பாராயணம் செய்து கடும் விரதம் மேற்கொள்கிறார்கள்.
மேலும் விரிவான தகவல் படிக்க
சீர்காழி கோவிந்தராஜன் & டி.எம்.ஸ்- ன் மனதை மயக்கும் முருகன் பாடல்
நன்றி
-தட்ஸ்தமிழ்
Headline
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்- வீடியோ
2 commentsசென்னையில் போதை டிரைவிங்-1000 பேர் லைசென்ஸ் ரத்து
0 comments



குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 1000 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து காவல்துறை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. சென்னை முழுவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களை கண்காணிக்கவும், ஏற்கனவே அமலில் உள்ளபடி ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து, உறுதியான நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தொடர்ச்சியாக குடிபோதையில் வாகனம் ஓட்டிய 11 ஆயிரம் பேரின் உரிமங்களை ரத்து செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டு ஆயிரம் பேரின் உரிமங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இப்படி ரத்தானவர்கள் பெரும்பாலும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அதி வேகமாகவும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டி வந்து சிக்கியவர்கள் ஆவர்.
இதுகுறித்து தென்சென்னை போக்குவரத்து துணை ஆணையர் மனோகரன் கூறுகையில்,
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்வது, என்பது நீண்ட கால செயல்பாடு. சம்பந்தப்பட்டவரின் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும். அவர்கள் சம்பந்தப்பட்ட நபரிடம் அதுபற்றி விளக்கம் கேட்பர். அதன் பிறகு, பதில் திருப்தி அளிக்காத பட்சத்தில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.
11 ஆயிரம் பேர்களுக்கு உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 1000 பேரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அது செயல்பாட்டில் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
முத்துக்குமார் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
0 comments
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இலங்கை ராணுவ அரசின் வெறி தனத்தை கண்டித்து வேலூர் நகரில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் பொதுக்கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில் பழ.நெடுமாறன், மருத்துவர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சி.மகேந்திரன், பா.ஜ.க பொது செயலாளர் ராஜேந்திரன் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களை காப்பாற்றக்கோரி தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருந்தது.
அதன் படி வேலூரில் நடந்த கூட்டத்தில் முத்துக்குமாரின் தந்தை குமரேசனை வரவைத்து மேடையில் 3 இலட்ச ரூபாய் நிதியுதவியை மருத்துவர் ராமதாஸ், பழ.நெடுமாறன், வைகோ, திருமா ஆகியோர் வழங்கினர்.
அதன் படி வேலூரில் நடந்த கூட்டத்தில் முத்துக்குமாரின் தந்தை குமரேசனை வரவைத்து மேடையில் 3 இலட்ச ரூபாய் நிதியுதவியை மருத்துவர் ராமதாஸ், பழ.நெடுமாறன், வைகோ, திருமா ஆகியோர் வழங்கினர்.
நன்றி
நக்கீரன்
இலங்கைக்கு தமிழக கிருத்துவ அமைப்புகள் கண்டனம்
0 comments

கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்க தடை வித்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே அரசுக்கு தமிழக கிருத்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கச்சத்தீவில் உள்ள அந்தோணியர் கோவிலில் ஆண்டுதோறும், மார்ச் மாதம் திருவிழா நடைபெறும். நேற்று தொடங்குவதாக இருந்த இந்த திருவிழா திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண கிருத்துவ பேராயர் அறித்துள்ளார்.
விழாவுக்கு அனுமதி கொடுக்க இலங்கை ராணுவத்தினர் மறுத்ததால், இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ராஜபக்சே அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக கிருத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை மாவட்ட முதன்மை குரு அமல்ராஜ், இலங்கை மக்களும், தமிழர்களும் சேர்ந்து கொண்டாடும் இந்த திருவிழா தடை செய்யப்பட்டுள்ளது. திருவிழா மீண்டும் நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நன்றி
நக்கீரன்
உண்ணாவிரதம் இருப்பதாக கூறி தமிழர்களை ஜெ.வால் ஏமாற்ற முடியாது - கனிமொழி
0 comments
இலங்கைத் தமிழர்கள் குறித்து அக்கறை காட்டுவது போல நடித்து தமிழர்களை ஜெயலலிதாவால் ஏமாற்ற முடியாது என்று திமுக எம்.பி. கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த தமிழக அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஏழை மக்களின் பாராட்டை பெற்ற இந்த பட்ஜெட்டை மருத்துவ மனையில் இருந்து கொண்டே முதல்வர் உருவாக்கினார்.
ஆண்டு வருமானம் 24 ஆயிரத்துக்கு குறைவாக உள்ளவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் மருத்துவ காப்பீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் பாராட்டுகின்றனர்.
மருத்துவமனையில் கூட ஓய்வு எடுக்காத நமது தலைவரை பார்த்து ஓய்வு எடுப்பதற்கு என்றே பிறந்த ஒருவர் ஓய்வு எடுக்க கூறுகிறார். பாதிநாள் ஊட்டியில் இருக்கிறார், மீதிநாளில் சிறுதாவூரில் இருக்கிறார். யாருமே பார்க்க முடியாத அவரிடம் இருந்து அறிக்கை மட்டும் வரும்.
இலங்கை தமிழர்கள் மீது ஜெயலலிதாவுக்கு திடீரென்று அக்கறை வந்துள்ளது. தமிழர்கள் கொல்லப்பட்டு, பெண்கள் மானப்பங்கம் செய்யப்பட்டபோது வாயை மூடி மவுனமாக இருந்த அவர் இப்போது உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறுகிறார்.
ஒரு போர் என்றால் மக்கள் சாவது சகஜம் தானே என்று இலங்கை ராணுவத்துக்காக ராஜபக்சேவை விட அதிகம் வக்காலத்து வாங்கியவர் இந்த ஜெயலலிதா. இப்போது உண்ணாவிரதம் என்று தமிழர்களை ஏமாற்ற முடியாது.
இவரை பார்த்து ராஜபக்சேயும் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தாலும் இருப்பார். ஏனெனில் இரண்டு பேரின் குரலும் ஒன்றுதான். நாம் மக்களுடன்தான் முதல் கூட்டணி இது 40 தொகுதியிலும் வெற்றி பெறும் என்றார் அவர்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
பிராமணர்களுக்கு 7% இட ஒதுக்கீடு-எஸ்வி.சேகர்
0 comments
தமிழகத்தில் இருக்கும் 90 சதவீத பிரமாணர்கள் வறுமையால் வாடுகின்றனர். எனவே அவர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ எஸ்வி சேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்த தென்னிந்திய பிராமணர் சங்க கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்விசேகர் கூறுகையில்,
தமிழகம் சமூக நீதி கண்ட மாநிலம் என்று முதல்வர் கூறியுள்ளார். மாநிலத்தில் தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால்தான் சமூக நீதி என்பது முழுமையடையும்.
பிராமணர்களின் இன்றைய நிலையை ஆய்வு செய்ய உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும். எங்கள் அமைப்பை பொறுத்தவரை மற்றவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை தவறு என்று கூற வில்லை. எங்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
தமிழகத்தில் சுமார் 40 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் வறுமையால் வாடுபவர்கள்தான். எனவே பிராமணர்களுக்கு இடஒக்கீடு வழங்க தமிழக முதல்வரால் முடியும்.
எனவே தமிழ்நாட்டில் உள்ள பிராமணர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். பிராமணர் சங்க கூட்டமைப்பு அரசியல் சார்ந்த அமைப்பு இல்லை என்றார் எஸ்வி சேகர்.
நன்றி
- தட்ஸ்தமிழ்
புலிகளுக்கு ஆதரவாக பேசும் தலைவர்களை கைது செய்ய வேண்டும்: சுப்பிரமணியசாமி
0 comments
-படம் உதவி வினவு
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி,
திமுக காங்கிரஸ் கூட்டணி நிலையானது என்று கருணாநிதி கூறியுள்ளார். இந்த கூட்டணிக்கு பின்னே மிகப்பெரிய ரகசியம் இருக்கிறது. அதனை விரைவில் வெளியிடுவேன். இந்த கூட்டணி காரணமாக டெல்லியில் தமிழர்கள் மீதான மரியாதை குறைந்து விட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதி குடும்பம் பெற்ற பணத்தை மறைக்கவே இந்த கூட்டணி. இதன் பின்னணியில் மேலும் ரகசியம் இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறிதது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவான அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.
உயர்நீதிமன்றத்தில் பணியாற்ற பெண் காவலர்கள் அஞ்சும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடர்வது நீதிமன்ற அவமதிப்பாகும்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசும் எல்லா தலைவர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
அதிமுகவுடன் கூட்டணி பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை. அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் தமிழகம் முழுவதும் ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றார்.
நன்றி
நக்கீரன்
புதுக்கோட்டை: ராஜபக்சேவுக்கு செருப்பு மாலை
2 comments
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்த மங்கலத்தில் 10 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் தெற்காசியாவின் கிட்லர் ராஜபக்சே. ராஜபக்சே நாசமா போவான் சபிக்கும் தமிழகம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த பேனரை வைத்த அப்பகுதி தமிழ் ஈழ உணர்வாளர்கள், ராஜபக்சேவின் படத்திற்கு செருப்பு மற்றும் துடைப்பத்தால் கட்டிய மாலையும் அணிவித்திருந்தனர்.
நன்றி
நக்கீரன்