
பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மதிமுகவினர் கைது செய்ததை கண்டித்து கண்டனப்பொதுக்கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தினை எவராலும் அழிக்க இயலாது என்று கூறியுள்ளார். கூட்டத்தில் டைரக்டர் சீமான் பேசியதாவது
வீரத்திற்கு பெயர் பெற்றவர்கள் நம் தமிழ் இன மக்கள். தமிழர்கள் வாழும் இலங்கையில் நடைபெற்ற போரில் ஈழத்தமிழர்களுக்காக பல முறை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் பயன் இல்லை. அதில் 11/2 லட்சம் இலங்கை தமிழர்கள் குண்டடிப்பட்டும், பசியாலும், மருந்தின்றியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாம் 61/2 கோடி தமிழ் இன மக்கள் வாழ்ந்து என்ன பிரயோஜனம். சீக்கியன் அடிப்பட்டால் நாடே ஸ்தம்பிக்கிறது. தமிழன் அடிப்பட்டால் கேட்க நாதியற்றவனாக அனாதையாக இறக்கிறான்.
இந்தியா, சீனா பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் கைக்கூலியாக இலங்கை அதிபர் ராஜபக்சே செயல்பட்டு வருகிறார். 5000 கோடி டாலருக்கு ராஜபக்சே விலை போய்விட்டார் கச்சத்தீவில் ராணுவ முகாம் அமைக்கவும், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் மறைமுகமாக இலங்கை உதவி செய்தும் வருகிறது.
இந்தியா பேராபத்தை எதிர்நோக்கி உள்ளது. இந்தியாவின் மவுனம் லட்சக்கணக்கான தமிழ் மக்களின் உயிரை குடித்து கொண்டுள்ளது.
அன்று வெள்ளையனுக்கு எதிராக கப்பல் ஓட்டினார் வ.உ.சி. ஆனால் இன்று சிங்களனுக்கு எதிராக விமானம் ஓட்டினார் பிரபாகரன். நாம் தவறு செய்யும் போது நாடு கேட்கும். ஆனால் நாடே தவறு செய்யும் போது தட்டி கேட்டால் எனக்கு தேசிய பாதுகாப்பு சட்டமாம். தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழர்களையே தாக்குவது என்ன நியாயம்.
விடுதலைபுலி இயக்கம் தடை செய்யப்பட்ட நாடுகளான ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கிறது. ஆனால் இந்தியா முதுகெலும்பு இல்லாமல் முடக்குகிறது. உலகம் முழுக்க பத்து கோடி தமிழர்கள் இருந்தும் நம் ரத்த உறவுகளையும் தாய்மொழியையும் காப்பாற்ற முடியாமல் அவல நிலையில் தவிக்கிறோம். தமிழின மக்களே நம் நாட்டு தலைவர்களை நம்ப வேண்டாம். சூரியன் (பிரபாகரன்) மறையுமே ஒழிய ஒரு போதும் மரணிக்காது மீண்டும் மீண்டும் உதிக்கும் அதுபோல விடுதலை புலி இயக்கத்தை யாரலும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி
பரந்தன் இணையம்
Headline
சீமானின் ஆவேச பேச்சு!!!
0 commentsபிரபாகரன் திராவிட கழகமாக உருவெடுக்கும் - கொளத்தூர் மணி
0 comments
விடுதலைப் புலிகளின் முப்பத்து மூன்று வருடகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக கடந்த மே 18-ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது.
ஆனால் அதற்கு முன்பே அதே மே மாதம் 2-ம் தேதி இலங்கையில் போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, இலங்கைக்கு உதவுவதற்காக 92 வாகனங்களில் ராணுவத் தளவாடங்களையும், பீரங்கி டாங்கி-களை-யும்
இந்திய அரசு கொச்சின் வழியாக இலங்கைக்கு அனுப்புவதாகத் தகவல் பரவ, கோவையில் பெரியார் தி.க.வினரும், ம.தி.மு.க.-வினரும் அந்த வாகனங்-களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற ஈழ ஆதரவாளர்கள், அந்த வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்காக பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட 250 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்-துறை, இதுவரை 75 பேரை கைது செய்துள்ளது. மற்றவர்களையும் தேடி வருகிறது. அது-மட்டுமல்லாமல் கையில் சிக்குபவர்-களையெல்லாம் கைது செய்து, இந்த வழக்கில் சேர்த்து வருவதாகவும் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர் ஈழ ஆதரவாளர்கள்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோவை மத்திய சிறையில் ராமகிருஷ்ணனைச் சந்தித்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள், இன்னும் போலீஸிடம் சிக்காமல் இருப்பவர்களை அடையாளம் காட்டும்படி மிரட்டியதாகவும் தகவல்கள் உள்ளன. ஈழத்திற்காகப் போராடி வந்தவர்கள், தற்போது ஈழ ஆதரவாளர்களுக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், அதுவும் தமிழக அரசிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘ஈழ ஆதரவாளர் விடுதலை கோரிக்கை மாநாடு’ கோவையில் நடந்தது. மாநாட்டில் கொளத்தூர் மணி, சீமான், ‘கற்றது தமிழ்’ ராம், பாவாணன், வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கொளத்தூர் மணி பேசுகையில், “ஈழத்தில் சிங்கள அரசு இனவெறித் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே நாம் இங்கே பொங்கியெழ ஆரம்பித்துவிட்டோம். ஈழ மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு இந்திய அரசே துணை நிற்பதைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் முத்துக்குமார் தொடங்கி பதினைந்திற்கும் மேற்பட்ட ஈழ ஆதரவாளர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
ஈழம் அழிந்து வருவதைப் பொறுக்க முடியாமல் நாம் எல்லோரும் கொதித்துக் கொண்டிருந்த வேளையில், போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, எதற்கும் அஞ்சாமல் மத்திய அரசு தமிழகம் வழியாகவே இலங்கைக்கு ராணுவத் தளவாடங்களை அனுப்பியது. கோவை வழியாக ராணுவ வாகனங்கள் சென்றபோது, மானமுள்ள தமிழர்கள் ஒன்றுகூடி அந்த வாகனங்களை வழிமறித்தனர். ‘எங்கள் வரிப்பணத்தில் எங்கள் இனத்தையே அழிப்பதா!’ என்று மத்திய, மாநில அரசுகளை எச்சரித்தனர்.
மத்திய, மாநில அரசுகள் ஆற்ற வேண்டிய கடமையை அவர்கள் செய்யாததால், மக்களே செய்தனர். கடமையைச் சரியாகச் செய்த எங்களுக்குக் கிடைத்த பரிசு தேசிய பாதுகாப்புச் சட்டமா? இந்த அநீதியை இனியும் அனுமதிக்கக் கூடாது.
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, பெரியார் திராவிட கழகத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறது. அறிவிக்கட்டுமே! பெயரை மட்டும்தானே அவர்களால் தடை செய்யமுடியும்? அப்படி மத்திய அரசு தடை விதித்தால் பெரியார் திராவிட கழகம், பிரபாகரன் திராவிட கழகமாக உருவெடுக்கும்” என்றார் அதிரடியாக.
பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் மைக்கைப் பிடித்தார் சீமான். “இதுவரை ஈழ விடுதலைக்காகப் போராடினோம். ஆனால் இன்று ஈழ ஆதரவாளர்கள் விடுதலைக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நான் என்ன பேசினேன் என்பதற்காக தமிழக அரசு என் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சியது என்பது எனக்குத் தெரியவில்லை. நான் பேசியது புதுவையில். ஆனால் வழக்கு பதிவு செய்யப்-பட்டது பாளையங்-கோட்டையில். பிரபாகரனை அண்ணன் என்று கூறியது குற்றமா? இத்தாலியில் பிறந்த சோனியாவை அன்னை என்று கூறும்போது, என் மண்ணில் பிறந்த பிரபாகரனை அண்ணன் என்று கூறுவது குற்றமாகத் தெரிகிறதா நம் தமிழக அரசுக்கு?
இலங்கையில் நடக்கும் படுகொலையைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. அதனால்தான் தமிழகத்தில் நாங்கள் போராடுகிறோம். இந்திய ராணுவமே எங்களுக்கு எதிராக வந்தாலும் வெறும் கையோடு அவர்களை விரட்டி அடிப்போம். தற்போது ஆஸ்திரேலியா, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிவிட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்கள் வாழும் நாட்டின் பாராளுமன்றங்களின் முன் ஈழ விடுதலைக்காக ஆர்ப்பாட்டங்-களை நடத்துகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அதைப் பற்றிப் பேசக்கூட அனுமதி இல்லை. அது ஜனநாயக நாடா அல்லது இந்தியா ஜனநாயக நாடா?
ஈழத்திற்காகக் கதறினோம், கத்தினோம், புலம்பினோம். இது பிழையா? இதற்குக்கூட அனுமதி இல்லாத நாடு, என்ன நாடு? தமிழனாகப் பிறந்தது தப்பா? தமிழா இனி உனக்கு நாடில்லை. மத-மில்லை. ஜாதியும் இல்லை. இனி உனக்கென்று எதுவும் இல்லை. இனி தமிழனின் பொதுச் சொத்து சிறை மட்டும்தான். வேண்டுமென்றால் இனம் மாறிப்போய்விடு.
இந்திய தேசமே அழிந்துபோனாலும் பரவாயில்லை, ஒரு விடுதலைப் புலிகூட இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மத்திய அரசே, ஈழத்தை அழித்துவிட்டு இந்தியாவை-யும் அழிக்க வருவான் சிங்களன்.
ஈழத்தில் போர் முடிந்துவிட்டது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் தமிழனுக்குச் சம உரிமை கிடைக்க வழி வகுக்கப்படும் என்று இலங்கை அரசு கூறுகிறது. பசிக்குச் சோறு தராத சிங்களனா, என் மக்களுக்குச் சம உரிமை தரப் போகிறான்.
பசியால் துடித்துக்கொண்டிருக்கும் என் மக்களுக்கு உணவு வழங்க ‘வணங்காமண்’ என்ற கப்பலை அனுப்பி வைத்தது சில நல்ல உள்ளங்கள். அதைக்கூட ஏற்க மறுக்கிறது ராஜபக்ஷே அரசு. சென்னை துறைமுகத்தில் நிற்கும் அந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசும், மத்திய அரசும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் குண்டடி பட்டு செத்தது பத்தாதா, பசியிலும் சாக வேண்டும் என்று ஆசைப் படுகிறதா இந்த அரசுகள்?
ஐ.நா.சபையில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததில் இருந்தே தெரியவில்லையா, தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்பது? ஒரு மனிதனின் மரணத்திற்கு ஆயிரம் திரைக்கதை எழுதுகிறது, இலங்கை அரசு. நம் இனத்தின் சூரியன் அழியாது. தமிழ் ஈழ தேசக் கொடியை ஏற்றாமல் பிரபாகரன் தலை சாயாது” என்று ஆவேசம் குறையாமலேயே பேசி முடித்தார் சீமான்.
நன்றி
-தமிழ்ஸ்கைநியுஸ்
சீமான் கேள்வி யார் இந்த இளங்கோவன் - வீடியோ
0 comments" 10 நாட்களில் தமிழ் ஈழம் மலரும்’’- சீமான் ஆவேசப்பேச்சு
2 comments
’’தந்தை பெரியாருக்கு காங்கிரசை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. அதை நிறைவேற்ற அவருடைய பேரனாக நான் சிறையில் இருந்து புலியாக வெளிவந்து உள்ளேன். இன்னும் 10 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுவேன்.
இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்துகிறது சிங்கள ராணுவம். அதற்கு துணை போகிறது என் தேசம். இறையாண்மை பேசும் என் தேசம், தலாய்லாமா நாட்டை பிரித்து கேட்டால் ஆதரவு அளிக்கிறது. தமிழர்கள் நாட்டை கேட்டால் ஒழிக்க நினைக்கிறது. அப்போது சீனாவுக்கு இறையாண்மை, ஒருமைப்பாடு இல்லையா?.
யாரும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தராத நிலையில் தனி ஈழம்தான் தீர்வு என்று ஜெயலலிதா கூறி இருக்கிறார். அவரை வணங்குகிறேன்.
நான் இப்போது இந்தியா உள்பட உலக நாடுகளை கேட்பது எல்லாம், நீங்கள் விடுதலைப்புலிகளை அழிக்க ஆயுதமோ எந்த உதவி வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அவர்களுக்கான தடையை மட்டும் நீக்கிவிடுங்கள்.
தனி ஈழம் மலர பிரபாகரன் நடவடிக்கை எடுப்பார். இந்தியாவில் மட்டும் விடுதலைப்புலிகளுக்கான தடை நீக்கப்பட்டு, எங்களை இலங்கைக்கு செல்ல அனுமதித்தால் 15 லட்சம் பேர் இலங்கை செல்ல தயாராக இருக்கிறார்கள். 10 நாட்களில் தமிழ் ஈழம் மலரும்’’என்று தெரிவித்தார்.
நன்றி
-நக்கீரன்
காங்கிரசை வீழ்த்தும்வரை போராடுவோம் - சீமான்
2 comments
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகி பின்னர் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்து சிறைவாசம் அனுபவித்த இயக்குனர் சீமான் நேற்று நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகலில் ஜெயிலைவிட்டு வெளியே வந்த இயக்குனர் சீமானை பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். அவர் நேராக அரியாங்குப்பம் வந்தார். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து இயக்குனர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டம் என்னை விடுதலை செய்துள்ளது. இது தனிப்பட்ட சீமானின் விடுதலை அல்ல. கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி. என் மீது போடப்பட்ட வழக்கு தேவையற்றது. தவறானது.
தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு எதிராக எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், ஆதரித்து பேசக்கூடாது என்ற சர்வாதிகாரம் இருந்தது. அதை எனது வழக்கு உடைத்தெறிந்துள்ளது.
எங்களுக்கு கிடைக்க வேண்டியது விடுதலை. அது கிடைக்கும்வரை போராடுவோம். ஈழ விடுதலையை யார் அங்கீகரிக்கிறார்களோ, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க யார் பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். தமிழீழத்தை ஆதரிக்கும் இயக்கத்துக்கு ஆதரவு அளிப்போம்.
இதற்காக பலபேர் பல வடிவத்தில் போராடுகிறார்கள். 13 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர். இந்த சமூகத்தை அதிகம் நேசிப்பவர்களை சமூக விரோதிகள் என்கிறார்கள். இதற்கான போராட்டங்களை நடத்தினால் என் போன்றவர்கள் போராட வேண்டியிருக்காது.
காங்கிரசுதான் இனப்பேரழிவுக்கு காரணம். காங்கிரசை வீழ்த்தும்வரை போராடுவோம். அது யாருக்கு சாதகம், பாதகம் என்று பார்க்கமாட்டோம்.
இலங்கை தமிழர் பற்றி பலரும் பேசும்போது, சோனியாகாந்தி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அதற்கு என்ன அர்த்தம்? 1-ந் தேதிக்கு பின்னர் என்னை கைது செய்த இடத்திலிருந்து பிரசாரம் தொடங்குவேன்.
இவ்வாறு டைரக்டர் சீமான் கூறினார்.
நன்றி
-தமிழ்வின்
நீதிபதி முன்பு சீமான் வாதம் - இது வன்முறையா?
8 comments
'தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்ற மகாகவி பாரதியும், 'கொடு வாளினை எடடா, மிகக் கொடியோர் செயல் அறவே' என்ற பாவேந்தர் பாரதிதாசனும் பாடியதைக்கூட வன்முறையாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்று நீதிமன்றத்தி்ல் வாதாடினார் இயக்குநர் சீமான்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், விடுதலைப் புலிகளை ஆதரித்தும் பேசியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இயக்குநர் சீமான்.
சீமான் வழக்கு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருவதால் அது பற்றி மாநில அறிவுரைக் கழகம்தான் விசாரணை மேற்கொள்ளும்.
இந்த அமைப்பின் தலைவராக கே.எம்.நடராஜும், உறுப்பினர்களாக சித்திக் மற்றும் மருதமுத்து ஆகியோரும் உள்ளனர். இந்த அமைப்பில் வைத்து சீமான் விசாரிக்கப்படார். இதற்காக அவர் புதுவையிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்காக வக்கீல்கள் யாரும் ஆஜராக முடியாது. ஆனால் நண்பர்கள், உறவினர்கள் ஆஜராகி வாதிடலாம். எனவே சீமானுடன் அவரது நண்பரும் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளருமான தியாகு ஆஜராகி, சீமான் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தார்.
அரை மணி நேர விசாரணைக்குப் பின் வெளியில் வந்த இயக்குநர் சீமான், கூடியிருந்த நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த விசாரணையின் போது என்னைக் கைது செய்ததற்கான காரணங்களை அரசுத் தரப்பில் படித்துக் காட்டினார்கள். அவர்கள் சொன்ன குற்றங்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராது என்பதை நாங்கள் விளக்கிச் சொன்னோம். எங்கள் தரப்பு வாதங்களை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
புதுவை மாணவர்களிடம் நான் பேசியது உணர்ச்சியைத் தூண்டும் பேச்சாக உள்ளதே என்றார்கள்.
அதே புதுவையில் வசித்த இரண்டு கவிஞர்கள் சொன்னதை எடுத்துச் சொன்னேன். 'கொலை வாளினை எடடா, கொடியோர் செயல் அறவே' என்று பாவேந்தர் சொன்னதும், 'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று கர்ஜித்த பாரதியும் வன்முறையைத் தூண்டியதாக எடுத்துக் கொள்ள முடியுமா?.
என் பேச்சு பிரிவினைவாதமல்ல... ஒரு உணர்ச்சிப் பூர்வமான சொற்பொழிவு. தமிழினம் கண்ணுக்கெதிரே அழிவதைப் பார்த்து இந்த உணர்ச்சியைக் கூட வெளிப்படுத்தவில்லை என்றால் நான் தமிழனாக இருக்க முடியாது என்றேன். என்னால் பொது அமைதிக்கு ஏதாவது பங்கம் வந்ததாகக் கூறமுடியுமா? பேச்சின் இறுதியில்கூட அமைதியாகக் கலைந்து செல்லுங்கள் என்றுதான் சொன்னேன்.
காங்கிரசின் நிர்ப்பந்தம், கூட்டணிக்காக அரசியல் போன்ற சொந்த காரணங்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறோம். இதுதொடர்பாக முடிவெடுத்து அரசுக்கு தங்கள் பரிந்துரையை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் வரும் 13ம் தேதி ஐகோர்ட்டில் விசாரணை நடக்கிறது. பார்க்கலாம்..." என்றார் சீமான். உடன் தியாகுவும் இருந்தார்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
சீமான் பரோலில் வருகிறார்
0 comments

சிறைக்குப் போகுமுன், தன்னால் தயாரிப்பாளர் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மாயாண்டிக் குடும்பத்தார் படத்தின் தன் பகுதிகள் முழுவதையும் நடித்துக் கொடுத்துவிட்ட இயக்குநர் சீமான், இப்போது படத்திற்கு, டப்பிங் பேசுவதற்காக பரோலில் வருகிறார்.
ராசு மதுரவன் இயக்கும் இந்தப் படத்தின் மணிவண்ணனின் மகனாக நடிக்கிறார் சீமான். உண்மையில் மணிவண்ணனிடம் பல ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர்தான் சீமான்.
போலீஸார் தன்மீது வழக்குப் பதிந்துள்ளது தெரிந்ததும், இந்தப் படத்தில் தனது பகுதிகளை மட்டும், சரணடைவதற்கு முன்பே நடித்துக் கொடுத்து உதவியிருக்கிறார் சீமான். இதைச் செய்ததற்குத்தான் அவருக்கு ஓடி ஒளிந்தார் என்ற பட்டப் பெயர் கிடைத்தது. பின்னர் தேசிய பாதுகாப்புத் தடுப்புச் சட்டத்தில் புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருப்பதால் படத்துக்கு இன்னும் சீமான் டப்பிங் பேசவில்லை. இதையடுத்து அவரை பரோலில் அழைத்து வந்து டப்பிங் பேச வைக்க முயற்சி செய்து வருகின்றனர். சீமானும் பரோலில் வர ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான விண்ணப்பங்களையும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சிறைத்துறையினரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் ராசு மதுரவனிடம் கேட்டபோது, 'படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது குடும்பம், காதல் சென்டிமென்ட் கொண்ட கதை. சீமான் டப்பிங் பேச வேண்டியிருக்கிறது. அதற்காக அவரை பரோலில் எடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவர் டப்பிங் பேசியதும் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் படம் ரிலீஸ் ஆகும்' என்றார்.
இந்தப் படத்தில் தருண்கோபி, சீமான், பொன்வண்ணன், நந்தா பெரியசாமி, ஜெகநாத், மணிவண்ணன் உட்பட 10 இயக்குனர்கள் நடிக்கின்றனர். தமிழரசி, பூங்கொடி ஹீரோயின்களாக அறிமுகமாகின்றனர். சபேஷ்முரளி இசை அமைக்கிறார்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
சீமானை விடுதலை செய்யக் கோரி தம்பி உயர்நீதிமன்றத்தில் வாதம்
4 comments
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள இயக்குநர் சீமானை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அவரது தம்பி ஜேம்ஸ் பீட்டர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சீமான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான இந்த நடவடிக்கையை ரத்து செய்து, சீமானை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தற்போது வக்கீல்கள் ஸ்டிரைக் நடந்து வருவதால் வக்கீல்கள் யாரும் பணிக்கு வராமல் உள்ளனர். இந்த நிலையில், சீமான் விடுதலை கோரும் மனு நேற்று நீதிபதிகள் தர்மாராவ், சுப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
வக்கீல்கள் ஸ்டிரைக் காரணமாக, சீமானின் தம்பி ஜேம்ஸ் பீட்டரே ஆஜராகி வாதாடினார்.
முன்னதாக ஜேம்ஸ் பீட்டர் தாக்கல் செய்திருந்த மனுவில்,
எனது சகோதரர் சீமான் கடந்த மாதம் 17-ந் தேதி பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நடந்த கூட்டத்தில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக பாளையங்கோட்டை போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்திய இறையாண்மைக்கும், தேசிய ஒற்றுமைக்கும் பாதகமாக பேசியதாக புதுச்சேரி போலீசாரும் கைது செய்தனர்.
கடந்த மாதம் 27-ந் தேதி சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் காவலில் வைக்க நெல்லை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். ஏற்கனவே சீமான் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டுமென்று போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறு உத்தரவிட்டபிறகு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டது தவறானதாகும். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு அடிப்படையில் ஆராயும்போது சீமான் பேசிய பேச்சு சட்டவிரோத தடுப்பு சட்டத்தின்கீழ் வராது. விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காமலும், முழு பேச்சை ஆராயாமலும் உத்தரவிட்டிருப்பதால் அதை ரத்து செய்து சீமானை விடுதலை செய்யவேண்டும் என்று ஜேம்ஸ் பீட்டர் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடுத்த விசாரணையை 26ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
சீமானுக்கு வரும் 20ம் தேதி வரை காவல்நீடிப்பு
2 comments
புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். இயக்குநர் சீமான் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து சீமான் கைது செய்யப்பட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சீமானை 15நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால் புதுச்சேரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் சீமான்.
இன்றுடன் 15 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் இன்று மீண்டும் நீதிபதி முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி, சீமானுக்கு வரும் 20 ம் தேதி வரை காவல் நீடிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
இதற்கு முன்னதாக கோர்ட் வளாகத்தில் டைரக்டர் சீமானை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது உங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளதே? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர்.
அதற்கு சீமான், ஜெயிலில் வைக்க வேண்டும் என முடிவு செய்த பிறகு சட்டம் எந்த ரூபத்தில் இருந்தால் என்ன? சட்டம் தன் கடமையை செய்துள்ளது. தமிழனாய் நான் என் கடமையை செய்கிறேன் என்று தெரிவித்தார்.
சீமான் தனி மனிதன் அல்ல-பாரதிராஜா
3 comments
இலங்கை பிரச்சனை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதைவிடவா சீமான் பேசி விட்டார் என்று இயக்குனர் பாரதிராஜா கேள்வி எழுப்பினார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர் சீமானை இயக்குனர்கள் பாரதிராஜா, மணிவண்ணன், ஓவியர் புகழேந்தி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.
பின்னர் நிருபர்களிடம் பாரதிராஜா பேசுகையில்,
தமிழன் அழிவதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. சீமான் உள்ளே இருப்பது தான் நல்லது. நாங்கள் அரசியல் நடத்தி ஆட்சியை பிடிக்க ஆசைப்படவில்லை. தமிழ் இனம் அழிகிறதே என்பதற்காக தான் போராட்டம் நடத்துகிறோம்.
மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியை பாதுகாப்பு கருதி பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை. ஆனால் இலங்கையில் தமிழ் இனம் அழியும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பியது. இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தப் பிரச்சினை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள். அதைவிடவா சீமான் பேசி விட்டார். இனப் படுகொலையை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. சீமான் தனி மனிதன் அல்ல. அவருக்கு பின்னால் இளைஞர் பட்டாளம் உள்ளது.
இலங்கையில் பல லட்சம் தமிழர்களுக்கு அதிகாரப் பங்கீடு கேட்டு போராடுவது தவறா?. அப்படி போராடினால் இறையாண்மைக்கு எதிரா?. தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் பாதுகாக்க எந்தப் போராட்டமும் நடத்துவோம் என்றார்.
நன்றி
- தட்ஸ்தமிழ்
