Headline

Showing posts with label சமூகம் செய்திகள். Show all posts
Showing posts with label சமூகம் செய்திகள். Show all posts

சேகுவாரா காதலியின் புரட்சி முழக்கம் - புகழ்பெற்ற - வீடியோ

0 comments

சேகுவாராவின் வீர உடல்

அர்ஜென்டைனாவில் பிறந்து வளர்ந்த சேகுவாரா, கொரில்லா தாக்குதலை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் புரட்சி நாயகனாக திகழ்ந்தவர்.

சேகுவாராவின் இறப்புக்கு பின் அவரின் உடலைகானும் அவரின் காதலி வருத்தம்முடன் கையில் கைகுழந்தையுடன் மீண்டும் மக்களை புரட்சி பாதைக்கு அழைக்கும் விதமாக அமைக்கப்பட்ட இப் பாடல் இன்று வரை உலக அளவில் பலரது பாராட்டையும்,புகழையும் பெற்றது.

பாடலை கேளுங்கள் புரட்சியின் அதிர்வு அலைகள் உங்கள் மனதில் மோதுவதை நீங்கள் உணர்வீர்கள்.




பாடலை எழுதியவர் குபான் இசை கார்லஸ் பியூபால் ஆண்டு 1967

இந்த வீடியோ பாடலில் நடித்த பிரன்ச் நடிகை நத்தாலி கார்டோன்.

Photobucket


உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே…! - சேகுவேரா.


நல்ல நட்பும் - நல்ல உறவும் வாழ்வில் தொடர சிறு ரகசியம்

0 comments



உங்களிடம் ஒரு கேள்வி, உங்கள் உறவு வட்டம் பெருகி வருகிறதா, சுருங்கி வருகிறதா, அல்லது பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி எப்போதும்போல் இருக்கிறதா?

இந்தக் கேள்விக்குச் சட்டென்று பதில் சொன்னால் பெரும்பாலும் அதில் உண்மைக் கலப்பு இராது. சுருங்கிக் கொண்டே வருகிறது என்பதுதான் பலர் விஷயங்களில் உண்மை.

இங்கே ஒன்றைச் சொல்லியாக வேண்டும். நம் வசதிகளோ செல்வாக்கோ நாம் ஒப்பிடும் காலத்தில் பெருகியிருந்தால் நம் வட்டமும் பெரிதாகிவிடும். இதைக் கணக்கில் சேர்ப்பது செயற்கையே. இந்த வருகைக்கு முன்னால் இருந்த வட்டம் அப்படியே இருக்கிறதா என்பதுதான் ஆழ்ந்து ஆராயப்பட வேண்டும்.

நம்மையறியாமல் நம்மிடமிருந்து சிலர் விலகிப் போய்க் கொண்டே இருக்கிறார்கள். கேட்டேன். உதவவில்லை; எங்கள் இல்லத்து நிகழ்ச்சிக்கு அழைத்தோம். வரவில்லை “ஏன்” வாழ்த்துக்கூட அனுப்பவில்லை. முன்புபோல் பிரியமாக இல்லை. நிறையவே மாறிவிட்டார். கோபமாக வருத்தப்படும்படியாகப் பேசிவிட்டார் ஆகிய இந்த நான்கு மனக்குறைகளே நம்மிடமிருந்து பிறர் விலகிப் போகக் காரணம்.

ஒரு கண்ணாடிக் கலைப் பொருளை உருவாக்க ஒரு கலைஞனுக்கு எவ்வளவோ நேரம் ஆகிறது. அதனைப் போட்டு உடைப்பவனுக்குச் சில விநாடிகள்தாம். நட்பும் உறவும் இப்படித்தான். இதை வலுப்பெறச் செய்ய எத்தனையோ சம்பவங்களும், ஆண்டுகளும் ஆகின்றன. ஆனால் உடைவதற்கும் விலகுவதற்கும் ஒரு வாக்கியமோ, ஒரு சிறு சம்பவமோ போதுமானதாக இருக்கிறது.

நம் வட்டத்திலிருந்து திடீரெனக் காணாமல் போகிறவர்கள்; இடைவெளி காக்கிறவர்கள் ஆகியோரைத் தேடி அலசுங்கள். பட்டியல் இடுங்கள். ‘பார்த்து நாளாச்சி; பேசிப் பலகாலம் ஆச்சு. பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்; சும்மா பேசலாம்’னு கூப்பிட்டேன் என ஆரம்பியுங்கள். ‘ஏதும் வருத்தமா? ஏன் இந்த வெற்றிடம்’ என்று கேளுங்கள்.

“போனாப் போறான். விலகிப் போனா எனக்கென்ன நஷ்டம், அவனுக்குத்தான் நஷ்டம்” என்கிற கொள்கையை விட்டுவிட்டு எல்லோரும் நமக்கு வேண்டும் என நினையுங்கள். ஓரிரு வாய்ப்புகளை உருவாக்குங்கள். அதற்குப் பிறகும் அவர்கள் முறுக்கிக் கொண்டு போனால், போகட்டும்!

நன்றி
-தமிழ்வாணன்.காம்


ஜீவாவின் பசுமையான கல்லூரி நட்பு காட்சி


குழைந்தைகள் தினமும் மறந்து போன நேருவின் கொள்கையும்

0 comments





இந்திய அயலுறவுக் கொள்கை தவறான பாதையில் செல்கின்றது

நெடுமாறன் பேட்டி

தென்னாபிரிக்காவில் நிறவெறி அரசு மற்ற கறுப்பின மக்களை ஒடுக்கியபோது தென்னாபிரிக்காவை உலக நாடுகள் புறக்கணிப்புச் செய்யவேண்டும் என்பதற்காக ஐ.நா. பேரவையில் தீர்மானம் கொண்டுவரச் செய்து நிறைவேற்றி,தென்னாபிரிக்க நிறவெறி அரசை ஒதுக்கி வைக்கும் கொள்கையைக் கடைபிடித்து நேரு வெற்றியும் பெற்றார்.

ஆக, உலகெங்கும் அடிமைப்பட்ட மக்கள் எங்கெங்கே சுதந்திரம் பெறப் போராடினார்களோ அவர்களுக்கெல்லாம் நேரு பகிரங்கமாக ஆதரவு கொடுத்தார். ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக ஆதரவு கொடுத்தார் என்பதுதான் முக்கியமானது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு அடிநாதமாகவும் அது இருந்தது.

உலகெங்கும் அடிமைப்பட்ட மக்கள் விடுதலை பெறவேண்டும். அதற்கு இந்தியா உதவவேண்டுமென்பதும் அவரது கொள்கையாக இருந்தது

அதனால்தான் அதன் பின்னால் வந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியினாலும்,ஜனதாக் கட்சி ஆட்சியினாலும் பாரதீய ஜனதா ஆட்சியாயிருந்தாலும் அந்தக் கொள்கையிலிருந்து எவராலும் விலகிச் செல்ல முற்படவில்லை. ஆங்காங்கே சிறு சிறு மாற்றங்கள் செய்திருக்கலாமே ஒழிய அடிப்படையில் அணிசேராக் கொள்கையில் உருவாக்கப்பட்ட இந்திய வெளியுறவுக் கொள்கையிலிருந்து எந்தக் கட்சியும் விலகிச் செல்ல முடியவில்லை.

அதேபோல ஸ்பெயின் நாட்டில் பிராங்கோ என்ற சர்வாதிகாரியை எதிர்த்து அந்த நாட்டு இளைஞர்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்குப் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்திற்கு உதவ வேண்டும் என்று அன்றைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்தது.

ஐரோப்பாவில், பிரிட்டனில் ஏராளமான இந்திய இளைஞர்கள் அந்தப் பேராட்டத்தில் உதவி செய்வதற்காகத் தங்கள் பெயரை எல்லாம் பதிவு செய்தார்கள். அதிலே ஒருவர் இந்திராகாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

16 வயது மாணவியாக இந்திராகாந்தி இருந்தபோது படையில் சேர்ந்து ஸ்பெயினில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துகிற போரில் உதவுவதற்கு முன் வந்தார். ஜவஹர்லால் நேருவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தனது தூதராக அனுப்பியது. அவர் ஸ்பெயின் நாட்டின் எல்லையில் போய் அங்கு திரண்டிருந்த பல்வேறு நாட்டுத் தொண்டர்களிடம் பேசி உற்சாகப்படுத்தி ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தார்.

இப்படி காங்கிரஸ் கட்சி ஆரம்பத்திலிருந்தே வெளியுறவுக் கொள்கையிலே தீவிரமாக கவனம் செலுத்தியது. அது படிப்படியாக வளர்ந்து நேரு அவர்களே பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் அதிகாரப்பூர்வமாக அதை அமுலுக்குக் கொண்டுவரமுடிந்தது.

ஆனால், ஜவகர்லால் நேருவின் பேரன் ராஜீவ்காந்தி 1985 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்பு அவர் தன்னுடைய பாட்டனாரும் தன் தாயாரும் எத்தகைய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடித்தார்கள் என்பதை உணரவில்லை.

அதிகாரிகள் அவரை தவறாக வழிநடத்தினார்கள் என்பதுதான் உண்மை. அன்றைக்கு இந்தியாவின் தூதுவராக இருந்த தீட்சித், இந்தியாவின் வெளிவிவகாரத்துறைச் செயலாளராக இருந்த பண்டாரி போன்ற அதிகாரிகள் அவரை வழிமாற்றி நடத்தினார்கள்.

அப்பொழுதுதான் முதன்முதலாக நேரு அமைத்த பாதையில் இருந்து இந்திய அரசு விலகிச் செல்லத் தொடங்கியது. அப்பொழுதுதான் உலகம் முழுவதும் அடிமைப்பட்ட மக்கள் எங்கு போராடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்கிற இந்தியாவின் கொள்கையிலிருந்து தலைகீழான மாற்றம் ஏற்பட்டது. இலங்கையில் சுதந்திரம் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருந்த ஈழத்தமிழர்களை ஒடுக்குவதற்கு சுதந்திர இந்தியாவின் படை அங்கு அனுப்பப்பட்டது.

இந்திய வரலாற்றில் கறைபடிவதற்கு காரணமானவர் ராஜீவ்காந்திதான். வேறுயாருமல்லர். அவருடைய தாயாரும் அவருடைய பாட்டனாரும் கடைப்பிடித்து வந்த கொள்கைக்கு நேர்மாறான திசையில் ராஜீவ்காந்தி சென்றார். அதில் வெற்றிபெறவில்லை. படுதோல்வியடைந்தார்.


நெடுமாறன் பேட்டி முழுமையாக படிக்க

நன்றி
-yarl.com

லா படிக்க விரும்பும் சிறுவன் - சிரிப்பு


அனைவரும் பாரட்ட வேண்டிய சேவையை தமிழிஷ் தொடங்கியுள்ளது

0 comments



இன்று தமிழிஷ் திரட்டியில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது
தலைப்பை கிளிக் செய்து படிக்கவும் "கொடுக்கமாட்டேன் ~ வாங்கமாட்டேன் / வரதட்சணை"

இன்றைய சமூக சூழலில் வரதட்சணை கொடுமையை முதிர் கன்னியின் மனநிலையை வைரமுத்துவின் கவிதையின் சோகத்தை இவ் வரிகளில் காணலம்.

"என் கனவுகளில் மட்டும் குதிரைகளின் குளம்படிகள்

அனால் எந்த ராஜகுமாரனும் என் வீட்டு வாசலில் இறங்கவே இல்லை

பறக்க நினைத்த வான் பார்த்த என் இளமை இன்று புதைய நினைத்து ப்தூமி பார்க்கிறது

கண்ணீரில் கரைந்தது கண் மை மட்டுமா? இளமையும் இளமையும்

கன்னத்தில் விழுந்த மெல்லிய பள்ளங்களில் என் கனவுகளின் சமாதிகள்!"


எனவே தமிழிஷின் இந்த நல்ல முயற்சியை வலையுலகம் சார்பாக வரவேற்போம்.


பாம்புகளை விரும்பி வளர்க்கும் அதிசய குடும்பம்

2 comments



பாம்புகளை பற்றி மக்கள் மனதில் இருக்கும் பல சந்தேங்களுக்கு அந்த குடும்பம் தரும் விளக்கமும்.

1. பாம்பு பால் குடிக்குமா? முட்டை சாப்பிடுமா ?
2. பாம்பு பழி வாங்குமா ?
3. 100 வயது பாம்பு மாணிக்கம் கக்குமா?
4. சிரியா நங்கை முலிகை வளர்த்தால் பாம்பு வாராதா?
5. கொம்பேரிமூக்கன் கடித்தவரை கான சுடுகாட்டில் காத்திருக்குமா?




என்றும் நினைவில் வரும் பாம்பு பாடல்


திரை படத்தில் பாம்பு நகைசுவை




அறிய சேவை ஆன்லைனில் பிறப்பு| இறப்பு சான்றிதழ் தமிழில் கிடைக்கும்

4 comments

computer Pictures, Images and Photos
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பிறப்பு , இறப்பு சான்றிதழ்களை இனிமேல் ஆன்லைனில் தமிழிலேயே பெற முடியும். நவம்பர் மாதம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

கடந்த ஆண்டு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனிலேயே பதிவு செய்து பெறும் நடைமுறையை மாநகராட்சி ஆரம்பித்தது.

இந்த நிலையில் தற்போது தமிழிலேலேய சான்றிதழ் பெறும் முறை நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பான தகவல் பதியும் நடைமுறைகள் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். நவம்பர் மாதம் இந்த புதிய முறை அமலுக்கு வரும் என்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கோனி கூறியுள்ளார்.

முன்பு ஆங்கிலத்தில் மட்டும் சான்றிதழ்கள் தரப்பட்டு வந்தன. ஆனால் அதில் ஏராளமான ஸ்பெல்லிங் மிஸ்டேக்குள் இருப்பதாக புகார் கள் வந்தன. இதையடுத்து ஆன்லைனிலேயே பிழைகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து கிட்டத்தட்ட 9488 பேர் பிறப்பு சான்றிதழ் பிழை திருத்தத்திற்காகவும், 1458 பேர் இறப்பு சான்றிதழ் பிழை திருத்தத்திற்காகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தினர். இதையடுத்தே தமிழிலும் சான்றிதழ்களை வழங்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநகராட்சி டேட்டா பேஸில் 50 லட்சம் பிறப்பு தகவல்களும், 25 லட்சம் இறப்புத் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தினசரி 5000 பேர் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

மாநகராட்சியின் இணையதளம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 5.31 லட்சம் ஹிட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்கள்தான்.
CLARIE Pictures, Images and Photos

இதுவரை 2.97 லட்சம் பிறப்பு சான்றிதழ்களும், 78,000 இறப்பு சான்றிதழ்களும் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் எழுத்துக்களுக்காக யுனிகோட் எழுத்துரு பயன்படுத்தப்படவுள்ளதாம். பெயர், பாலினம், பிறப்பு தேதி, பிறப்பிடம், தந்தை- தாய் பெயர்கள், நிரந்தர முகவரி, குழந்தை பிறந்தபோது பெற்றோர் இருந்த முகவரி, பதிவுத் தேதி, விநியோக தேதி ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும்.

இந்த நடைமுறை அமலுக்கு வந்த பின்னர் மருத்துவமனைகள், தங்களது மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தை கள் குறித்த விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளீடு செய்யலாம்.

தற்போது பிறப்பு விவரங்களைப் பதிவு செய்து கொள்ள மாநகரில் உள்ள 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நேரடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் பிறப்பு குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

நன்றி
-தட்ஸ்தமிழ்


உயிரை பனையம் வைத்து ஒரு கிரிவலம் தமிழகத்தில்

0 comments



முசிறி வட்டம், தா.பேட்டை ஒன்றியம், அஞ்சலம் ஊராட்சி அருகே அமைந்துள்ள தலைமலை கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது.

இங்கு சஞ்சீவிராயர், பூதேவி, ஸ்ரீதேவி, ஸ்ரீ வெங்கடாசலபதி, கோதண்டராமன், அலமேலுமங்கை, கிருஷ்ணர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களின் சன்னிதிகள் அமைந்துள்ளன.

hanuman Pictures, Images and Photos

ராமனுக்கு, ராவணனுக்கும் இடையே நடைபெற்ற போரில் லட்சுமணன் மயக்கமடைந்த நிலையில், அவரைக் காபாற்ற அனுமன் சஞ்சவி மலையை பெயர்த்து எடுத்துச் சென்றபோது, அதிலிருந்து உதிர்ந்து விழுந்த மலையின் தலைமை பகுதி என்பதால் அது தலைமலை என்று அழைக்கப்படுகிறது.

தரை மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக் கோயில் சன்னதியைச் சுற்றி 3 அங்குல விளிம்பில் 3 ஆயிரம் அடி பள்ளத்தின் அருகே எந்த பிடிமானமும் இன்றி பக்தர்கள் கிரிவலம் சுற்றி தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மேலும், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.

கிரிவலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கோயிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள நண்பர் "என்னார்" வலைக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.


நன்றி
- தினகரன்
-24துனியா

ராக்கட் வேகத்தில் பறக்கும் சித்தர்


இலங்கைக்கு திமுக கூட்டணி எம்பிக்கள் பயணத்தின் கருத்து கணிப்பு !

0 comments

voting checkmark Pictures, Images and Photos
தட்ஸ்தமிழ் தினமும் சமுதாய நலனில் அக்கரை கொண்டு பல்வேறு வகையான கருத்து கணிப்பை நடத்துகிறது. அதுபோல் இன்று அவர்கள் நடத்திய திமுக கூட்டணி எம்பிக்கள் குழு இலங்கை பயணம் பற்றிய கருத்து கணிப்பின் விபரம்.

இதுவரை பதியப்பட்ட ஓட்டின் முடிவுகள்


நீங்கள் ஓட்டு போட இங்கே கிளிக் செய்யவும்

நன்றி
-தட்ஸ் தமிழ்


அக்டோபர் 15 முதல் ஏ.டி.எம் சேவையில் புதிய மாற்றம்

0 comments

ATM Pictures, Images and Photos

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் அல்லாத மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி இருந்தது.

இதனால் ஏற்பட்ட பிற வங்கிகளின் நிர்வாக சிக்கலால் ரிசர்வ் வங்கி வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் புதிய நடைமுறையை மற்றும் கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது.

இதன் மூலம் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் அல்லாத மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் ஒரு நாளில் ரூ 15000\- அதிகபட்சமாக எடுக்க அனுமதியும் அதுபோல் பிற வங்கி ஏ.டி.எம்யை மாதத்திற்கு ஐந்து முறை மட்டும் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

எனவே மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் முன் போல் பிற வங்கியின் சேவை தொகை வசூலிக்கும் நிலை உறுவாகி உள்ளது.

இது நம்ப சரக்கு


மெய் சிலிர்க்க வைத்த தாய் பாசம் - மருத்துவர்கள் வியப்பு !

2 comments


ஓடும் ரயிலில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. கழிப்பறை துவாரம் வழியாக தவறி கீழே விழுந்த அந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. குழந்தையை காப்பாற்ற ரயிலில் இருந்து குதித்த தாயும் தப்பினார்.
ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து பீகார் மாநிலம் சாப்ராவுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் போலோ நாத் என்பவர் மனைவி ரிங்குவுடன் பயணம் செய்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரிங்குவுக்கு நள்ளிரவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அந்த பெட்டியில் நிறைய ஆண்கள் இருந்ததால், கழிப்பறைக்கு ரிங்கு சென்றார். சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தையின் முகத்தை ரிங்கு பார்ப்பதற்குள் கழிப்பறையில் இருந்த துவாரம் வழியாக அந்த குழந்தை தண்டவாளத்தின் நடுவே தவறி விழுந்துவிட்டது.
ரயிலில் இருந்து குழந்தை விழுந்துவிட்டதே என்று அலறியபடி கழிப்பறையைவிட்டு ரிங்கு வெளியே ஓடிவந்தார். வெளியே நின்றிருந்த போலோ நாத் அபாய சங்கிலியை பிடித்து இழுக்கச் சென்றார். அப்போது, குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஓடும் ரயிலில் இருந்து ரிங்கு குதித்துவிட்டார். இதற்கிடையே அபாய சங்கிலியை போலோநாத் இழுத்ததால் 2 கி.மீ. தூரம் சென்று ரயில் நின்றது. பயணிகள் இறங்கி ஓடிவந்து பார்த்தபோது, ரிங்குவும், குழந்தையும் காயத்துடன் கிடந்தனர். அவர்களை மீட்டு ரயிலுக்கு தூக்கி வந்தனர். மேற்குவங்க மாநிலம் புரூலியா ரயில் நிலையத்துக்கு ரயில் வந்ததும் அவர்களை தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரிங்குவுக்கும், குழந்தைக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த சிசுவும், குழந்தையை காப்பாற்ற பாய்ந்த தாயும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது உலக அதிசயங்களில் ஒன்று என்று டாக்டர்கள் கூறினர்.

நன்றி
-தினகரன்

சும்மா ஜாலிக்கு