Headline

Aug
15,
2009

கடலூரில் பதற்றம் - காங் - கொடி எரிப்பு


கடலூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உருவ படம் மற்றும் அக்கட்சியின் கொடி ஒன்று எரிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட கலெக்டர் அலுவலகம் அருகில் இருக்கும் தங்களது கட்சி அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


இன்று காலை சுதந்திர தினத்தை கொண்டாட வந்த கடலூர் காங்கிரசார் அதிர்ச்சியடைந்தனர். அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் படம் ஆகியவை தீ வைத்து கொளத்தப்பட்டிருந்தன.

அந்த இடத்தில் புலி படம் பொறித்த தமிழ் ஈழக்கொடி ஒன்றும் கிடந்தது. இதனால் ஈழ ஆதரவாளர்கள் யாராவது இதை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி
-தட்ஸ்தமிழ்
*net photo

0 comments: