சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில் 6,700 பேர் வரையில் 135 தனியான சிறப்பு தடுப்பு நிலையங்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மட்டுமே தமது தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவித்திருந்த சிறீலங்கா அரசு, அவர்களை மட்டுமே செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் விடுதலைப் புலிகளின் நீதி, நிருவாக, அரசியல் பிரிவைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், மற்றும் தாக்குதல் பிரிவுகளில் இருந்த பல முக்கிய உறுப்பினர்களும் சிறீலங்கா அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றோ, அன்றி அவர்களது விபரங்களை வெளியிடவோ, சிறீலங்கா அரசு மறுத்து வருகின்றது.
நன்றி
-பதிவு
*Net photo
Headline
Jun
30,
2009
சிறைப்பிடிக்கப்பட்ட புலிகளைப் பற்றி - ICRC யின் கவலை
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அவங்க எதிர்காலம் ஒரு பெரிய கேள்விக் குறிதான். பொதுவாவே தமிழர்களுக்கு எந்த நேரமும் புலிப் போர்வை போடப்படலாம். என்ன தவம் செய்து தமிழராய் பிறந்தோமோ????
"சுசி said...
அவங்க எதிர்காலம் ஒரு பெரிய கேள்விக் குறிதான். பொதுவாவே தமிழர்களுக்கு எந்த நேரமும் புலிப் போர்வை போடப்படலாம். என்ன தவம் செய்து தமிழராய் பிறந்தோமோ????"
வாங்க சுசி
அது வருத்தமான செய்திதான் இனி சிங்கள அரசின் அனைத்து நடவடிக்கையும் அறத்திற்கு புறம்பாகவே அமையும். இதை அனைத்துலகமும் காட்சியாக பார்க்கும்.
அருமையான எழுத்து நடை!
தெடர்ந்து படிக்கிறேன்...
நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!
"கலையரசன் said...
அருமையான எழுத்து நடை!
தெடர்ந்து படிக்கிறேன்...
நிறைய எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!!"
வாங்க கலையரசன்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Post a Comment