Headline

சிதம்பரத்தின் மீது மரக்கட்டை வீச முயற்ச்சி!


காரைக்குடி அருகே இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்தில் “தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை வாழ்த்தியும், இலங்கை பிரச்சனைக்கு முடிவு என்ன, இலங்கைத் தமிழர்களுக்கு பதில் சொல்” என்றும் இளைஞர் ஒருவர் முழக்கமிட்டதால், அங்கிருந்த மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

முழக்கமிட்ட வாலிபர் சிதம்பரத்தை நோக்கி மரக்கட்டை ஒன்றைத் தூக்கி எறிந்த போதிலும், அது அவர் மீது படாத போதிலும் சிதம்பரம் பதற்றமடைந்திருந்தார்.

சிவகங்கை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ப.சிதம்பரம் தனது பரப்புரையை தொடங்கி உரையாற்றிக் கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து 35 அகவையுடைய சாயல்ராம் என்ற குற்றிப்பிட்ட நபரை தமிழ்நாடு காவல்துறையினர் மடக்கிப்பிடித்துக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தமிழின உணர்வாளர் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் அவர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நன்றி
-பதிவு.காம்

3 comments:

Anonymous said...
This comment has been removed by the author.
ரங்குடு said...

இலங்கைப் பிரச்சனையை வைத்துக் கொண்டு தமிழகத்தில் சில அநாகரீக சம்பவங்கள் நிகழ்கின்றன.

மக்களுக்கு சிதம்பரத்தின் (இலங்கை குறித்த) செயல்கள் பிடிக்க வில்லையென்றால் தேர்தல் மூலம் ஒதுக்க வேண்டுமே தவிர, உருட்டுக்கட்டை அரசியல் செய்வதும், விடுதலைப் புலிகளின் தீவிர வாதமும் ஒன்றுதான்.

நசுக்கப்பட வேண்டியவர்கள்.

Anonymous said...

// ரங்குடு கூறியது நசுக்கப்பட வேண்டியவர்கள்.//

ஐயா இது ஜனாயக நாடு நீங்கள் இவ்வாறு ( நசுக்கப்பட வேண்டியவர்கள் ) என்று சொல்வது நியாயமானால் அவர்கள் செய்வதும் சரியே