Headline

இலங்கைக்கு யுனிசெப்' கடும் எச்சரிக்கை!!!


கடந்த 48 மணி நேரத்தில் வன்னியில் இடம்பெற்ற தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலைமையில், இந்தப் போரினால் சிறுவர்கள் பாரிய ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதாக 'யுனிசெப்' அமைப்பு கடுமையாக எச்சரித்திருக்கின்றது.


சில கிலோ மீற்றர் சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள ஒரு சிறிய நிலப்பரப்பில் 50 ஆயிரம் பொதுமக்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நிலைமையில் - சிறிலங்கா அரச படைகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அங்குள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவும் இல்லை என்றால் மேலும் பெரும் தொகையான சிறுவர்கள் கொல்லப்படுவார்கள் எனவும் 'யுனிசெப்' அமைப்பின் தெற்காசியாவுக்கான பிராந்தியப் கணிப்பாளர் டதனியல் ரூல் எச்சரித்திருக்கின்றார்.

இந்த வருட தொடக்கத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களில் பெரும் தொகையான சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஐ.நா. மற்றும் ஏனைய மனிதநேய அமைப்புக்களின் மதிப்பீடுகளின் படி கடந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் 10 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக உலகம் நெருக்கமாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது என ஐ.நா. செயலாளர் நாயகம் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றார். இங்கு இடம்பெற்றிருக்கும் பிந்திய போர் சிறுவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கின்றது எனவும் ரூல் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.


சிறிலங்கா படை தன்னுடைய படை நடவடிக்கைகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மீண்டும் வலியுறுத்தியிருக்கும் 'யுனிசெப்' அமைப்பு, தீவிரமான போர் இடம்பெறும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறு விடுதலைப் புலிகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.

போர்ப் பகுதிகளுக்குள் உள்ள மக்களின் ஆபத்தான வாழ்க்கை நிலை தொடர்பாகவும் 'யுனிசெப்' எச்சரித்திருக்கின்றது. இங்கு மருந்து, உணவுப் பொருட்களுக்கும் சுத்தமான குடிநீருக்கும் பெரும் காணப்படும் தட்டுப்பாடு மக்களுடைய அவல நிலைமையை மேலும் மோசமாக்குகின்றது எனவும் யுனிசெப்பின் பிரந்தியப் பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

நன்றி
-புதினம்

0 comments: