Headline

புலித்தேவன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்


மோதல்களின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் உயிரிழந்து வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் எஸ்.புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
மோதல்களின் காரணமாக நாள்தோறும் நூற்றுக் கணக்கான பொது மக்கள் உயிரிழப்பதாகவும் காயமடைவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வன்னியில் சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களது நிலைமை குறித்து சர்வதேச இராஜதந்திரிகள் தொடர்ந்தும் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் உணவு விநியோகத்தை முடக்கி வருவதாக புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு ஒரு உணவுக் கப்பலே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 33 மெற்றிக் தொன் எடையுடைய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த உணவுத் தொகுதி ஒருநாளைக்கே போதுமானதென சுட்டிக்காட்டப்படுகிறது.

நன்றி
-தமிழ்வின்

0 comments: